Home Blog Page 112

ஜி-20 நாடுகளின் மாநாடு: புதுச்சேரியில் அறிவியல் 20 அமைப்பின் ஆரம்ப நிலை கூட்டம்

புதுச்சேரி, ஜன.30

எதிர்கால தலைமுறையினர் பிரச்சினைக்கு அறிவியல் தொழில்நுட்பத்தால் தீர்வு காண்பது அவசியம் என ஜி-20 மாநாட்டில் அறிவியல் 20 அமைப்பின் தலைமை பொறுப்பு அதிகாரி அசுதோஷ் ஷர்மா கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ஜி20 அறிவியல் 20 ஆரம்ப நிலை கூட்டம் இன்று தொடங்கியது. பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குனர் ரங்கராஜன் வரவேற்றார்.

இந்நிகழ்வை அறிவியல் 20 இந்திய தலைமை பொறுப்பு பேராசிரியர் அசுதோஷ் சர்மா தொடங்கி வைத்து பேசியது: “உலகளவில் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுகளாக அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் மதிக்கும் பல நாட்டு விஞ்ஞானிகள் கூட்டத்தை இந்தியா நடத்துவது பெருமைக்குரியது. அறிவியல் என்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் பங்காற்றவில்லை.

சமூக சீர்திருத்தங்களுக்கும் அறவியல் உதவியுள்ளது. அறிவியலின் வளர்ச்சியல்தான் உலகில் வறுமை விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம் தேசிய தடைகளை நீக்குகின்றன. உலகை ஒருங்கிணைத்து அமைதியை முன்னெடுக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்று உலகின் எதிர்கால நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. பலதரப்பு ஒத்துழைப்பு, நட்புறவுடன் புத்தாக்கங்களை உலகளவில் முன்னெடுக்க நாம் கூடியுள்ளோம். நமது எதிர்காலம் குறித்து விவாதிக்க உள்ளோம். இன்றைய தலைமுறை அறிவியல் வளர்ச்சி வசதிகளை பெற்று வளர்கிறது. இளைஞர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கிறது.

பிறக்கும் குழந்தைகள் நம்பிக்கையின் காலகட்டத்தில் பிறக்கின்றன. எதிர்கால தலைமுறைக்கு பல பிரச்சினைகள் உள்ளது. நமது வீடுகள், வாழ்க்கை டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆனால் சமூகத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மெதுவாகவே ஏற்படுகிறது. பெருமளவு மாற்றத்தை அறிவியல் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் காண வேண்டும்.

இங்கு நடைபெறும் கூட்டம் இனி நடைபெறும் கூட்டங்களுக்கு கருத்து வரைவை உருவாக்கும். அறிவியல் உச்சநிலை கூட்டம் கோவையில் நடத்தப்படும்” என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து பல அமர்வுகளாக கருத்தரங்குகள் நடந்து வருகிறது. இக்கூட்டத்தினுள் பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அரங்கு சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

அன்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com செய்தி சேனலை தவறாது பாருங்கள்.

சர்வதேச ஒரு நாள் போட்டி : தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா
தென் ஆப்ரிக்கா வெற்றி
புளூம்ஃபாண்டெய்ன், ஜன.30

புளூம்ஃபாண்டெய்னில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 343 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி 5 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா 102 பந்துகளில் 109 ரன்களையும், அய்டன் மார்க்ரம் 49 ரன்களையும் பின்னால் இறங்கிய மில்லர் 37 பந்துகளில் 58 ரன்களையும் விளாச தென் ஆப்பிரிக்கா அணி இலக்கை விரட்டத் தொடங்கியது முதலே வெற்றி பெறுவோம் என்ற உத்வேகத்துடன் விரட்டியது.

South Africa won series

இந்த புளூம்ஃபாண்டெய்ன் மைதானத்தில் அதிகபட்ச இலக்கை விரட்டி வெற்றி பெறுவது இதுதான் முதல் முறை, இதற்கு முன்னர் 274 ரன்களைத்தான் இங்கு விரட்டியுள்ளனர்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் 3வது அதிக ரன் இலக்கை விரட்டலுமாகும் இது. இதன் மூலம் 10 உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகளாக 10 புள்ளிகளைப் பெற்ற தென் ஆப்பிரிக்கா 9வது இடத்தில் உள்ளது,

தானாகவே தகுதி பெறுவதற்கு சற்று வெளியே உள்ளது, தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் 4 ஒருநாள் போட்டிகளே உள்ளன. நெதர்லாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வென்றுவிட்டால் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று விடும்.

இந்த நிலையில்தான் பவுமாவின் சதம் முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. இது இவரது 3வது சதம். 33 சர்வதேச இன்னிங்ஸ்களுக்குப் பிறகு பவுமா சதமெடுத்துள்ளார்.

இங்கிலாந்து நேற்று 28/2 என்ற நிலையிலிருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் (94), ஹாரி புரூக் (80) மொயீன் அலி (51) ஆகியோரது

அதிரடி மூலம் 50 ஓவர்களில் 342/7 என்ற அதிகபட்ச ஸ்கோரை எட்டியது. இங்கிலாந்து அணி இதற்கு முன்னர் 5 ஒருநாள் போட்டிகளில் வரிசையாக உதை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய பிட்ச் வேகப்பந்துக்கு ஆரம்பத்தில் சாதகமாக இருந்தது. அதில் பார்னெல் (1/54), லுங்கி இங்கிடி (1/66) தொடக்கத்தில் அட்டகாசமாக வீசி இங்கிலாந்தை 28/2 என்று குறைத்தனர். முதல் போட்டியில் அதிரடி சதம் விளாசிய ஜேசன் ராய் இந்த முறை ஒற்றை இலக்க ஸ்கோரில் இங்கிடி இன்ஸ்விங்கரில் கிளீன் பவுல்டு ஆனார். டேவிட் மலான், பார்னெல் பந்தில் பிளம்ப் எல்.பி.ஆனார்.

பென் டக்கெட், ஹாரி புரூக் பயங்கரமான பந்து வீச்சைச் சந்தித்தனர், திணறினர். ஆனால் இதில் பென் டக்கெட் தாக்குப் பிடிக்கவில்லை கேசவ் மகராஜ் பந்தை தூக்கி அடித்து லாங் ஆஃபில் கேட்ச் ஆனார். இங்கிலாந்து 82/3 என்று தடுமாறியது. ஆனால் ஹாரி புரூக் சில அட்டகாசமான கிளாஸ் ஷாட்களை ஆடி 46 பந்துகளில் அரைசதம் விளாசினார். 75 பந்துகளில் 80 ரன்களை விளாசி, இவரும் பட்லரும் ஸ்கோரை 300க்கும் மேல் கொண்டு செல்வார்கள் என்று ஆட்டம் மாறிப்போனது. ஆனால் பவுமா அப்போது ஒரு ஸ்மார்ட் கேப்டன்சி செய்தார் பார்ட் டைம் ஸ்பின்னர் அய்டன் மார்க்ரமை வீச அழைக்க புரூக் கேட்ச் ஆகி வெளியேறினார்.

புரூக் ஆட்டமிழந்தவுடன் அதனால் என்ன அதான் நான் இருக்கேனே என்று பட்லர் தன் பங்குக்கு சிக்சர், பவுண்டரிகளை விளாசி 49 பந்துகளில் அரைசதம் கண்டார். மொயீன் அலியும் அட்டகாசமாக அடித்து ஆடினார்,

அதுவும் ஆன்ரிச் நார்க்கியாவை ஒரு ஓவரில் சாத்து சாத்தென்று சாத்தி அரைசதம் பூர்த்தி செய்தார். 36 ஓவர்களில் இங்கிலாந்து 200 ரன்களை எட்டியது. ஆனால் 45 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நார்க்கியா பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார் மொயின் அலி.

கிறிஸ் வோக்ஸ் இறங்கி பேட்டிங் மறந்தது போல் ஆடி 16 பந்துகளில் 14 ரன்களை எடுத்து பட்லரை வெறுப்பேற்றினார். ஆனால் சாம் கரண் இறங்கி சிக்சர்களை விளாச 17 பந்துகளில் 28 ரன்கள் நொறுக்கினார், அதில் நேராக அடித்த ஒரு சிக்ஸ் பின் காலில் சென்று அடித்த அற்புதமான சிக்ஸ். இருவரும் சேர்ந்து கடைசி 4 ஓவர்களில் 60 ரன்களை விளாசித்தள்ளினர். பட்லர் 94 ரன்களில் வெளியேறினார் அடித்திருந்தால் இது இவரது 11வது சதமாகியிருக்கும்.

குவிண்டன் டி காக், பவுமா தொடக்கத்தில் இறங்கினர். இங்கிலாந்தின் இடது கை பவுலர் ரெலி டாப்லி, வோக்ஸ் பந்துகளை பவுமா பவுண்டரிகளாக விளாசித்தள்ளினார். எடுத்த எடுப்பிலேயே 36 ரன்களுக்கு வந்தார் பவுமா, அப்போது டி காக் 4 ரன்களில்தான் இருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் டி காக் தன் வேலையைக் காட்டினார், ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார். தென் ஆப்பிரிக்கா 7 ஓவர்களில் 54/0 என்று அதிமேல் தொடக்கம் கண்டது. ஆலி ஸ்டோன் என்ற வேகப்புயல் வந்தவுடன் ரன் ரேட் குறைந்தது, டி காக் 31 ரன்களில் இவர் பந்தை டக்கெட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடந்த போட்டியில் அருமையான சதம் எடுத்த வான் டெர் டசன் பவுமாவுடன் இணைந்தார். இவர் 38 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு டவரிங் சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆதில் ரஷீத் பந்தில் காலியானார்.

தெம்பா பவுமா தன் போக்கில் நன்றாக ஆடினார், ஒன்று, இரண்டு ரன்களை பயங்கரமாக ஓடி 90களில் வந்து தசைப்பிடிப்பினால் அவதியுற்றார், ஆனாலும் ஆதில் ரஷீத்தை பவுண்டரி விளாசி சதமெடுத்தார்.

பவுமா 109 பந்துகளில் ஆட்டமிழந்த போது தென் ஆப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 174/2 என்று இருந்தது. வான் டெர் டசனும் உடனேயே ஆட்டமிழக்க இங்கிலாந்து வெற்றி வாய்ப்பை ருசிக்கத் தயாரானது.

ஆனால், கிளாசன் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 27 ரன்கள் எடுக்க மார்க்ரம் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 49 ரன்களை விளாசி ஆட்டத்தை தொய்ய விடாமல் 7 ஓவர்களில் 55 ரன்களைச் சேர்த்தனர்.

கிளாசன் ஸ்டோனின் அதிவேக அவுட் ஸ்விங்கரை துரத்தி விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆக, மார்க்ரம் விக்கெட்டை ஆதில் ரஷீத் கூக்ளியில் பவுல்டு முறையில் கைப்பற்ற 282/5 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா.

ஆனால், வெற்றி பெறுவதற்கு மில்லர், யான்சென் நிலைத்து ஆட வேண்டியிருந்தது, இருவரும் அதைச் செய்தனர், மில்லர், 37 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தனர். மார்க்கோ யான்சென் 29 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 32 நாட் அவுட். 49.1 ஓவர்களில் 347/5 என்று மிக முக்கியமான வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா. ஆட்ட நாயகன் கேப்டன் தெம்பா பவுமா. 3வது மற்றும் இறுதி போட்டி புதன் கிழமை நடைபெறுகிறது.

துபாயில் திருக்குறள் ஒப்பித்தலில் உலக சாதனை

0

திருக்குறள் திருவிழா: துபாயில் திருக்குறள் ஒப்பித்தலில் உலக சாதனை

 

திருக்குறள் திருவிழா

 

ஷார்ஜா, ஜன.30

ஷார்ஜா, துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் துபாய் யாழ் கல்வியகம் மற்றும் அமெரிக்க சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டு 1330 குறள்களையும் ஒப்புவித்தனர். இது, உலக அளவில் திருக்குறள் ஒப்பித்தலில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் சார்பில் சதீஷ், கார்த்திக் மற்றும் மோனிகா கலந்து கொண்டு உலக சாதனையை பதிவு செய்தனர். அமீரகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை திருக்குறள் ஒப்புவித்தல் நடைபெற்றது.

அதிகபட்சமாக 125 குறளை மாணவர் ஜேடன் பிரிஸ் ஒப்புவித்தார். நிகழ்ச்சியை யாழ் கல்வியகத்தின் ஆலோசகர் திரு. நாகப்பன், முதல்வர் திருமதி. ரம்யா, ஒருங்கிணைப்பாளர்கள் தவச்செல்வம், நரேஷ், விக்னேஷ், ஆசிரியர்கள் மற்றும் திருக்குறள் திருவிழா குழுவினர் கார்த்திக், ஹசீனா, கமால் பாட்சா, ஜசீலா, விஐயகுமார், சரண்யா, பிரியதர்ஷினி, ஹீமா நான்சி,
மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகபட்சமாக 125 குறளை மாணவர் ஜேடன் பிரிஸ் ஒப்புவித்தார். நிகழ்ச்சியை யாழ் கல்வியகத்தின் ஆலோசகர் திரு. நாகப்பன், முதல்வர் திருமதி. ரம்யா, ஒருங்கிணைப்பாளர்கள் தவச்செல்வம், நரேஷ், விக்னேஷ், ஆசிரியர்கள் மற்றும் திருக்குறள் திருவிழா குழுவினர் கார்த்திக், ஹசீனா, கமால் பாட்சா, ஜசீலா, விஐயகுமார், சரண்யா, பிரியதர்ஷினி, ஹீமா நான்சி,
மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

அமெரிக்காவிலிருந்து சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் ராமன் வேலு, ஒருங்கிணைப்பாளர் ராதிகா ஆகியோர் இணையவழி தொடர்பில் ஒத்துழைப்பு நல்கினர். உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறள் உலகெங்கும் அறியப்படுவது பெருமையளிக்கிறது என நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.

 

பாரத் ஜடோ யாத்திரை நிறைவு விழா : காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

காஷ்மீர், ஜன .30

கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரை எனும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று ஜம்மு காஷ்மீரில் முடிவடைகிறது. ஸ்ரீநகரில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகவும், எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தவும் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் ‘பாரத் ஜடோ யாத்திரையை’ தொடங்கினார். கடந்த 2

நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, கட்சிக்கு புதிய தலைமை வேண்டும் என்று அதன் மூத்த தலைவர்களே கடிதம் எழுதியது, ஒவ்வொரு தலைவர்களாக பாஜகவுக்கு தாவியது, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது போன்றவை காங்கிரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நெருடிக்கடியிலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். எனவேதான் இந்த நடைப்பயணத்தை அவர் தொடங்கினார். கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வைத்து யாத்திரையை தொடங்கிய நிலையல், இந்த யாத்திரையானது கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா என ராஜஸ்தானில் வந்து தனது 100வது நாளை நிறைவு செய்தது.

அதன் பின்னர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் யாத்திரை டெல்லியில் நுழைந்தது. யாத்திரையின் தொடக்கத்தில் ராகுல் காந்தி அணிந்திருந்த டீ-சர்ட் காஸ்ட்லியானது என பாஜக ஆதரவாளர்கள் ராகுலை ட்ரோல் செய்ய தொடங்கினர். ஆனால் டெல்லியில் கடும் குளிரிலும் ராகுல் காந்தி வெறும் டீ-சர்ட்டுடன் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மறுபுறம் பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள் மேலெழுந்தன. இந்த யாத்திரையை வரவேற்க ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததில், ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை தாண்டி சிலர் உள்நுழைந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதனையடுத்து கட்சி தொண்டர்களே ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளித்ததாகவும், இது மிகப்பெரும் பாதுகாப்பு குறைப்பாடு என்றும் கட்சி குற்றம்சாட்டி உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது. ஆனால், நாங்கள் சரியாகதான் பாதுகாப்பு கொடுத்தோம் என்றும், ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என்றும் ராகுலுக்கு பாதுகாப்பு அளித்திருந்த துணை ராணுவப்படை விளக்கம் கொடுத்தது. இந்த சர்ச்சை ஒருபுறும் இருந்தாலும் ராகுல் காந்தி எங்கும் யாத்திரையை நிறுத்தவில்லை. டெல்லியை அடுத்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் என யாத்திரை காஷ்மீரை வந்தடைந்தது. ராகுல் காந்தி தான் அணிந்திருந்த டீ-சர்ட்டுக்கு மேலே முதல் முறையாக ஜெர்க்கின் ஒன்றை அணியத் தொடங்கினார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டதிலிருந்து அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே ராகுலுக்கும் அவருடன் யாத்திரையில் பங்கேற்பவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ராகுலுடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள், ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (ஜன.29) இந்த யாத்திரை 3,500 கி.மீ பயணத்தை ஜம்முவில் நிறைவு செய்தது. இதனையடுத்து இன்று நிறைவு விழா பொதுக்கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து திமுக, விசிக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். இதன் காரணமாக பொதுக்கூட்டம் நடைபெறும இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கத்தை விட ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி முள்வேளிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுவதற்கு முன்னர் அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து யாத்திரையை நிறைவு செய்கிறார்.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை

கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன .30

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். 2-ந்தேதி தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து 1-ந்தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாக வலுவடையக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 2-ந்தேதி தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றனர். அதன்படி இன்று காலையில் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு : தமிழகத்தில் 126 மையங்களில் 35, 286 பேர் தேர்வில் பங்கேற்பு

சென்னை, ஜன .29

சென்னையில் அமைக்கப்பட்ட 18 மையங்களில் 4608 பேர் தேர்வு எழுதினார்கள்.ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் நேற்று நடந்தது. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர்- 5, புள்ளியியல் தொகுப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலி பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் நடைபெற்றது. இதற்கான தேர்வு மையங்கள் கல்லூரிகள், பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர். இதில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்தில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங்களில் வீடியோ மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 35 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தேர்வு காலை, பிற்பகல் என 2 கட்டமாக நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. பிற்பகலில் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 126 மையங்களில், 35 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுதினார்கள். சென்னையில் மட்டும் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 4608 பேர் தேர்வு எழுதினார்கள்.

உலக அளவில் ரூ.150 கோடியை வாரி குவித்தது விஜய்யின் வாரிசு

0

உலக அளவில் ரூ.150 கோடியை வாரி குவித்தது விஜய்யின் வாரிசு

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், படம் உலக அளவில் 5 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு உதவும் பிரிட்டனுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

0

உக்ரைனுக்கு உதவும் பிரிட்டனுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை (Russia warns Britain to help Ukraine)

உக்ரைனுக்கு கனரக பீரங்கிகளை வழங்க பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷியா கூறி உள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ரஷியா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, உக்ரைனை நிலைகுலையச் செய்கிறது.

பிரிட்டனுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

இதற்கு உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுப்பதற்காக கனரக பீரங்கி வாகனங்களை வழங்கும்படி மேற்கத்திய நாடுகளுக்கு கோரிக்கை வைத்தது. அதன்படி உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

கனரக பீரங்கிகளை வழங்க முதல் மேற்கத்திய நாடாக பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. வரும் வாரங்களில் சக்திவாய்ந்த 14 சேலஞ்சர்-2 பீரங்கிகள் மற்றும் பீரங்கி தாக்குதலுக்கு பயன்படும் நவீன தளவாடங்களையும் அனுப்புவதாக பிரிட்டன் சனிக்கிழமை கூறியது.

இது ரஷியாவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. பிரிட்டன் நாடு தங்களின் ரஷிய எதிர்ப்பு இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாக உக்ரைனை பயன்படுத்துவதாக, ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.

மேலும், பிரிட்டன் உக்ரைனுக்கு அனுப்பும் சேலஞ்சர்-2 பீரங்கிகள், மற்ற கவச வாகனங்களை போன்று தாக்குதலில் தீப்பற்றி எரியும் என்றும் ரஷியா எச்சரித்துள்ளது.

பிரிட்டன் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார்.

விலங்குகளை பாதுகாக்க ரூ.20 கோடியில் திட்டம்

விலங்குகளை பாதுகாக்க ரூ.20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்: தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜன. 16
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல் தவணை நிதியுதவியாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் 2022-2023-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” எனும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், விலங்குகள் நல அமைப்புகள் பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி அளித்தல், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு நிதியுதவி அளித்தல், தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதியுதவி அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கிடவும், உறைவிடம் மற்றும் அவசர ஊர்தி சேவைக்காகவும், நீலகிரி -இந்தியா புராஜக்ட் பார் அனிமல் பண்ட் நேச்சர், சென்னை விலங்குகள் பராமரிப்பு அறக்கட்டளை, சென்னை மெட்ராஸ் விலங்குகள் மீட்பு சங்கம், சென்னை பிரித்வி விலங்குகள் நல சங்கம் மற்றும் சென்னை பைரவா பவுண்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் 2 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, எம்.எல்.ஏ.க்கள் மரு.நா. எழிலன், த.வேலு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையர் (பொறுப்பு) டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் டாக்டர் எஸ். சுரேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 23 காளைகளை அடக்கிய தமிழரசனுக்கு கார் பரிசு

மதுரை, ஜன. 16
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் போட்டி தொடங்கியது. முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன்பின்னர் போட்டிக்கான காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு அடக்கினர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று கெத்து காட்டிய காளைகளையும் பார்க்க முடிந்தது. சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 9 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. களத்தில் சோர்வடையாமல் நின்று 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பெற்றார். அவருக்கு முதலமைச்சர் வழங்கும் கார் பரிசாக அளிக்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த மணி 2ம் இடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கி பாலமேடு ராஜா மூன்றாம் பரிசை தட்டிச் சென்றார். இதேபோல் சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளை தேர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல்லைச் சர்ந்த ரமேஷ் என்பவரின் காளை 2வது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.