Home Blog Page 4

ரிலையன்ஸ் குழுமத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாலை தாக்கப்படும் – பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்

ரிலையன்ஸ் குழுமத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாலை தாக்கப்படும் – பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்

Reliance Group’s crude oil refinery will be attacked – Pakistan Army Chief Asim Munir

  • புளோரிடா மாகாணம் டம்பா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முனீர், இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடும் வகையில் பேசியிருந்தார்.

  • குர்ஆன் வசனத்துடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் புகைப்படம் இடம்பெற்றிருந்த ஒரு சமூக வலைதள பதிவைப் பற்றி முனீர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, ஆக. 13

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முனீர், இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடும் வகையில் பேசியிருந்தார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின்போது வெளியிடப்பட்ட, குர்ஆன் வசனத்துடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் புகைப்படம் இடம்பெற்றிருந்த ஒரு சமூக வலைதள பதிவைப் பற்றி முனீர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுடன் அடுத்த முறை போர் மூண்டால், என்ன செய்யப் போகிறோம் என்பதைக் காட்டவே அதைச் செய்தோம் என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான, குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரிலையன்ஸ் குழுமத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாலையை குறிவைத்து தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

‘தாயுமானவர் திட்டம்’ : இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

‘தாயுமானவர் திட்டம்’ : இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Thayumanavar Project’: A model initiative for India – Chief Minister Stalin is proud

  • கூட்டுறவுத் துறை சார்பில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

  • தலைவர் கலைஞர் வழியில், இந்த நியாய விலைக் கடைகளை நாம் முறையாக – சிறப்பாக நடத்துவதால்தான், தமிழ்நாடு இன்றைக்கு பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக இருக்கிறது

சென்னை, ஆக. 12

70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 21 இலட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயனடையும் ‘தாயுமானவர் திட்டம்’ உள்ளிட்ட அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

‘தாயுமானவர் திட்டம்’ தொடங்கிவைக்கப்படுவது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவு மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

வணக்கம், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். அந்த வரிசையில், என்னுடைய மனதிற்கு பிடித்த திட்டமாக உருவாகியிருப்பதுதான், இந்த தாயுமானவர் திட்டம்.

கூட்டுறவுத் துறை சார்பில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி, அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி.

ஒரு திட்டத்தை அறிவிப்பதோடு, கடமை முடிந்துவிடுவதாக நாம் நினைப்பதில்லை. அந்த திட்டத்தின் பலன் – பயன், கடைக்கோடி மனிதரையும் சென்று சேருகிறதா என்று கண்காணிப்பதையும் கடமையாக நினைக்கிறேன். அப்படி, வயது முதிர்ந்தோரும் – மாற்றுத் திறனாளிகளும் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை உணர்ந்து, இந்த திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்.

இந்தத் திட்டத்தை 34 ஆயிரத்து 809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்த போகிறோம்.  70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என்று 21 இலட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் இந்த திட்டத்தால் பயனடைய போகிறார்கள். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குடிமை பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.  இதற்காக கூட்டுறவுத் துறைக்கு ஆகப்போகும் 30 கோடியே 16 இலட்சம் ரூபாயை கூடுதல் செலவாக கருதாமல் – மக்களுக்கு செய்யும் உயிர்காக்கும் கடமையாக நாங்கள் நினைக்கிறோம். இது கூட்டுறவுத் துறையின் மிகப்பெரிய சேவை. அந்தத் துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப் போகும் மிகப்பெரிய கடமை.

தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்து 328 நியாய விலைக் கடைகள் இருக்கிறது. இதில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 394 புதிய நியாய விலைக் கடைகளை திறந்திருக்கிறோம். தலைவர் கலைஞர் வழியில், இந்த நியாய விலைக் கடைகளை நாம் முறையாக – சிறப்பாக நடத்துவதால்தான், தமிழ்நாடு இன்றைக்கு பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக இருக்கிறது. இந்த ரேசன் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்க முயற்சிகள் எடுத்திருக்கிறோம்.

இந்த நேரத்தில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலவலர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்பது – இந்த திட்டத்தின் நோக்கம் நூறு விழுக்காடு நிறைவேறும் வகையில் உங்களின் பணி அமைய வேண்டும். உங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் மனம் குளிரும் வகையில் நீங்கள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்.  நீங்கள் பெறும் நல்ல பெயர்தான், ஆட்சிக்கு கிடைக்கும் பாராட்டு.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்:  செப். 9 ஆம் தேதி வாக்குப்பதிவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்:  செப். 9 ஆம் தேதி வாக்குப்பதிவு

Vice President Election: Voting on Sept. 9

  • தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21

  • அதே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

புதுடெல்லி, ஆக. 1

குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த பதவியிடம் காலியாக இருப்பதை கடந்த ஜூலை 22 வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இந்தச் சூழலில் தற்போது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ஜூலை 9-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் : வங்கி ஊழியர்கள் , தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்பு 

ஜூலை 9-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் : வங்கி ஊழியர்கள் , தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்பு

Nationwide strike on July 9: Bank employees, Tamil Nadu Secondary Teachers Association to participate

  • “AIBEA, AIBOA மற்றும் BEFI உள்ளிட்ட வங்கித் துறை தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் இணைய முடிவு

  • தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை நேரம் என்பதை உறுதி செய்திட வேண்டும். தனியார்மயமாக்கல் கொள்கைகளை எதிர்த்திட, பொதுத்துறை நிறுவனங்களை காத்திட வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

புதுடெல்லி: ஜூலை.07

ஜூலை 9-ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்துடன் (AIBEA) இணைந்த வங்காள மாகாண வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “AIBEA, AIBOA மற்றும் BEFI உள்ளிட்ட வங்கித் துறை தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் இணைய முடிவு செய்துள்ளது. காப்பீட்டுத் துறையும் வேலைநிறுத்தத்தில் இணைய முடிவு செய்துள்ளது. வங்கி மற்றும் பிற நிதித் துறைகளில் வேலைநிறுத்தம் முழுமையாக இருக்கும்
மத்திய அரசின் கார்ப்பரேட் சார்பு பொருளாதார சீர்திருத்தங்கள், தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து அனைத்துத் தொழில்களிலும் உள்ள 15 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சாலை, மேம்பால பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசாணை வெளியீடு

”வேலைவாய்ப்பு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 ல் நடக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முழுமையாக பங்கேற்கும்,” என, சிவகங்கையில் சங்க பொதுச்செயலாளர் சங்கர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். 8 வது ஊதியக்குழு பலன்களை விரைந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாத்திட வேண்டும். தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை நேரம் என்பதை உறுதி செய்திட வேண்டும். தனியார்மயமாக்கல் கொள்கைகளை எதிர்த்திட, பொதுத்துறை நிறுவனங்களை காத்திட வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திட வேண்டும்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

சாலை, மேம்பால பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசாணை வெளியீடு

சாலை, மேம்பால பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசாணை வெளியீடு

Rs. 7,500 crore allocated for road and flyover works – Tamil Nadu government issues order

  • நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு

  • ஆறுகளின் குறுக்கே 6 உயர்மட்ட சாலை அமைக்க ரூ.295 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜூலை.07

தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,268 கி.மீ.நீளத்திற்கு சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 14 புறவழிச்சாலைகள் அமைப்பதற்காக ரூ.1,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ; 68 பேர் உயிரிழப்பு, 27 மாணவி​களை காண​வில்​லை

ஆற்றுப்பாலம் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆத்தூர், ஓசூரில் புறவழிச்சாலை அமைக்க ரூ.500 கோடி, ஆறுகளின் குறுக்கே 6 உயர்மட்ட சாலை அமைக்க ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ரூ.348 கோடியில் 12.5 கி.மீ. புறவழிச்சாலை, நெல்லையில் ரூ.225 கோடியில் 12.4 கி.மீ. புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. விருத்தாசலம் – தொழுதூர், கொடை-வத்தலகுண்டு, சிவகாசி-விருதுநகர் சாலைகள் 4வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட உள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

அமெரிக்காவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ; 68 பேர் உயிரிழப்பு, 27 மாணவி​களை காண​வில்​லை

அமெரிக்காவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ; 68 பேர் உயிரிழப்பு, 27 மாணவி​களை காண​வில்​லை

Unprecedented flooding in the United States; 68 killed, 27 students missing

  • ஹெலி​காப்​டர்​கள், ரோந்து படகு​கள் மூலம் காணா​மல்​ போன மாணவி​களை தேடும் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது.

  • அடுத்த சில நாட்​களுக்கு டெக்​சாஸ் மாகாணத்​தில் கனமழை தொடரும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்​சரிக்கை

வாஷிங்டன், ஜூலை, 07

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது.


இதன்​ காரண​மாக கடந்த 5-ம் தேதி டெக்​சாஸ் மாகாணம், ஹில் கன்ட்ரி பகு​தி​யில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன. இதில் 37 பேர் உயி​ரிழந்​தனர்.

மேற்கு கெர் பகு​தி​யில் மாணவி​களுக்​கான சிறப்பு முகாம் நடை​பெற்​றது. இதில் 750 மாணவி​கள் தங்​கி​யிருந்​தனர்.குவாடலூப் நதி வெள்​ளத்​தில் சிறப்பு முகாமின் கூடாரங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. பெரும்​பாலான மாணவி​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர். 15 மாணவி​கள் சடலங்​களாக மீட்​கப்​பட்​டனர். 27 மாணவி​களை காண​வில்​லை.

சுமார் 1,000-க்​கும் மேற்​பட்ட மீட்​புப் படை வீரர்​கள் இரவு, பகலாக வெள்ள நிவாரண பணி​களில் ஈடு​பட்டு உள்​ளனர். ஹெலி​காப்​டர்​கள், ரோந்து படகு​கள் மூலம் காணா​மல்​ போன மாணவி​களை தேடும் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது.

அடுத்த சில நாட்​களுக்கு டெக்​சாஸ் மாகாணத்​தில் கனமழை தொடரும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதனால் நதி கரையோரம் வசிக்​கும் மக்​கள் பாது​காப்​பான இடங்​களுக்கு அப்​புறப்​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

சர்​வ​தேச அளவில் பரு​வநிலை மாறு​பாடு பெரும் சவாலாக உரு​வெடுத்​திருக்​கிறது. இதன் ​காரண​மாக அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​களில் அதிக வெப்​பம், அதிக குளிர், வரலாறு காணாத கனமழை என பெரும் பாதிப்​பு​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன.

 

பரு​வநிலை மாறு​பாடு காரண​மாகவே தற்​போது டெக்​சாஸ் மாகாணத்​தில் கனமழை, பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டிருக்​கிறது என்று சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் தெரிவித்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

குலுங்கியது மதுரை​:  மனித நேய மக்​கள் கட்சி மாநாடு ; இஸ்லாமியர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் – தலைவர்கள் வலியுறுத்தல் 

குலுங்கியது மதுரை​:  மனித நேய மக்​கள் கட்சி மாநாடு ; இஸ்லாமியர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் – தலைவர்கள் வலியுறுத்தல்

Madurai shaken: Manitha Neya Makkal Party conference; Muslims need proper representation in governance and power – leaders insist

  • “நாட்​டில் படிப்​படி​யாக முஸ்​லிம்​களின் பிர​தி​நி​தித்​து​வத்​தைக் குறைக்​கும் சதி நடக்​கிறது. உள்​ளாட்சி அமைப்​பு​களில் சதி செய்து பிரதிநி​தித்​து​வம் குறைக்​கப்​படு​கிறது. நாட்​டில் அடுத்த 10 ஆண்​டு​களில் முஸ்​லிம்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் கொண்டு வரப்பட வேண்​டும்”

  • நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​கள் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களில் முஸ்​லிம்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்க, அனைத்து அரசி​யல் கட்​சிகளும் கொள்கை முடி​வெடுத்​துச் செயல்​படுத்த வேண்​டும்.

மதுரை, ஜூலை, 07

மதுரை​யில் மனித நேய மக்​கள் கட்சி மாநாடு : இஸ்லாமியர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் உள்​ளாட்​சிகள் முதல் நாடாளு​மன்​றம் வரை சிறு​பான்​மை​யினரின் பிர​தி​நி​தித்​து​வத்தை உறுதி செய்ய வேண்​டும், வக்பு வாரிய திருத்​தச் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் ஆகிய கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, மதுரை​யில் மனித நேய மக்​கள் கட்சி மாநாடு நேற்று நடை​பெற்​றது. கட்​சித் தலை​வர் ஜவாஹிருல்லா தலைமை வகித்​தார். மாநிலப் பொருளாளர் உமர் வரவேற்​றார்.

கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரும், எம்​எல்​ஏவு​மான அப்​துல்​சமது பேசும்​போது, “நாட்​டில் படிப்​படி​யாக முஸ்​லிம்​களின் பிர​தி​நி​தித்​து​வத்​தைக் குறைக்​கும் சதி நடக்​கிறது. உள்​ளாட்சி அமைப்​பு​களில் சதி செய்து பிரதிநி​தித்​து​வம் குறைக்​கப்​படு​கிறது. நாட்​டில் அடுத்த 10 ஆண்​டு​களில் முஸ்​லிம்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் கொண்டு வரப்பட வேண்​டும்” என்​றார்.

மாநாட்​டில், தமிழ் மையம் நிறு​வனர் ஜெகத் கஸ்​பர்​ராஜ், ஜோதி​மலை இறைப்​பணி திருக்​கூடம் நிறு​வனர் திரு​வடிக்​குடில் சுவாமிகள் ஆகியோர் பேசினர். பேராசிரியர் அருணன், வழக்​கறிஞர் ஹென்​றி​திபேன், முன்​னாள் எம்​எல்ஏ முரு​கவேல்​ராஜன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

முன்​ன​தாக, மதுரை பாண்​டிகோ​யில் சந்​திப்பு பகு​தியி​லிருந்து மாநாட்​டுத் திடல் வரை பேரணி நடை​பெற்​றது. மாநிலத் தலை​வர் ஜவாஹிருல்லா தலைமை வகித்​தார். மாநாட்​டுத் திடலை பேரணி அடைந்​ததும், அங்கு கட்​சிக் கொடியை ஏற்​றி​வைத்​தார். மாநாட்​டில் நிறைவேற்​றப்​பட்​டத் தீர்​மானங்​கள்:

நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​கள் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களில் முஸ்​லிம்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்க, அனைத்து அரசி​யல் கட்​சிகளும் கொள்கை முடி​வெடுத்​துச் செயல்​படுத்த வேண்​டும்.

மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டத்​தில் உரிய திருத்​தம் செய்​து, முஸ்​லிம்​களுக்​கான அரசி​யல் பிர​தி​நி​தித்​து​வத்தை உறுதி செய்ய வேண்​டும், மின்​னணு வாக்​குப்​ப​திவு முறை​யில் வெளிப்​படைத் தன்மை இல்​லை. இம்​முறை தொடர்​வது ஜனநாயகத்​துக்கு பேராபத்​து. எனவே, வாக்​குச்​சீட்டு முறையைக் கொண்டு வர வேண்​டும்.

இஸ்​ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை மத்​திய பாஜக அரசு கைவிட்​டு, நாட்​டில் உள்ள இஸ்​ரேலிய நிறு​வனங்​களை வெளி​யேற்ற வேண்​டும், வக்பு வாரிய திருத்த சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும். சென்னை புழல் சிறை​யில் விசா​ரணைக் கைதி​கள் மீது தாக்​குதல் நடத்​திய அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுத்​து, நீண்ட நாள் சிறை​வாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்​டும். திருப்​பரங்​குன்​றம் மலை மேல் உள்ள சிக்​கந்​தர் தர்​காவைப் பாது​காக்​க​வும், அங்கு அடிப்​படை வசதி​களைச் செய்​து, மலைப் பாதையைச் செப்​பனிட​வும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்​ என்​பன உள்​ளிட்​ட தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்பட்டன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ungaludan stalin scheme : ladies can apply for magalir urimai thogai in camp

  • தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

  • முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

சென்னை, ஜூலை.06

தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை வரும் ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இம்முகாம் மூலம் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல்வர் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை, வரும் ஜூலை 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.
அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள். இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.

மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமுக்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை ஜூலை 7-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பணிக்காக 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரசுத் துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியர் அல்லாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், அரசுத் துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள்.

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் ஓய்வூதியம் பெறாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். கணவனால் கைவிடப்பட்ட 50 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் மற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசின் “தமிழ் வெல்லும்” பல்சுவை போட்டி: கவிதை பிரிவில் தென்கொரிய முனைவர் ஞானராஜூக்கு விருது

தமிழக அரசின் “தமிழ் வெல்லும்” பல்சுவை போட்டி:
கவிதை பிரிவில் தென்கொரிய முனைவர் ஞானராஜூக்கு விருது

Tamil Government’s “Tamil Vellum” Palsavai Competition:
South Korean Doctor Gnanaraju wins award in poetry category

  • உலகெங்கிலும் இருந்து 2,198 பேர் மின்னஞ்சல் மற்றும் QR code வாயிலாக தங்கள் படைப்புக்களை அனுப்பினர்.
  • கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் தே. ஞானராஜ், தற்போது தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA ) செயலாளராக பங்காற்றி வருகிறார்.

சென்னை, ஜூலை. 04-

தமிழக அரசின் “தமிழ் வெல்லும்” பல்சுவை போட்டி: கவிதை பிரிவில் தென்கொரிய முனைவர் ஞானராஜூக்கு விருது: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் “தமிழ் வெல்லும்” எனும் தலைப்பில் பல்வேறு போட்டிகளை நடத்தியது.

இதில் கவிதை போட்டியில் உலகெங்கிலும் இருந்து 2,198 பேர் மின்னஞ்சல் மற்றும் QR code வாயிலாக தங்கள் படைப்புக்களை அனுப்பினர். “தமிழே, தமிழர் உயிரே!” எனும் தலைப்பில் முனைவர் தே. ஞானராஜ் எழுதிய கவிதை வெற்றி கவிதைகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.

 

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 3-ந் தேதி அன்று நடை பெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் தே. ஞானராஜ், தற்போது தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA ) செயலாளராக பங்காற்றி வருகிறார். அவர் தமிழ்-ஆங்கிலம் என பன்மொழி புலமையும், சமூக பற்றும் கொண்டவர்.

அவர் எழுதிய “Two Portraits of Tamil: Decoding the Iconography, Identity and Ideology” எனும் ஆங்கில கட்டுரை “News click” மற்றும் “Indian Cultural Forum” போன்ற ஊடகங்களில் வெளியானது.

கவிதை போட்டியில் வெற்றி பெற்ற முனைவர் தே. ஞானராஜூக்கு தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு வாழ்த்து தெரிவித்து இருக்கிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ரயில் கட்டணம் உயர்வு – இந்தியன் ரயில்வே

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ரயில் கட்டணம் உயர்வு – இந்தியன் ரயில்வே அறிவிப்பு

Train fares to increase across the country from July 1 – Indian Railway announces

  • புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கு கட்டண உயர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

  • இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

புதுடெல்லி, ஜூன்.25

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ரயில் கட்டணம் உயர்வு – இந்தியன் ரயில்வே : கட்டணங்களை உயர்த்தப் போவதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள 3 கோடிக்கும் அதிகமான ரயில் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும், குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா வீதமும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கு கட்டண உயர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நகர்ப்புறங்களில் புறநகர் ரயில்களில் அலுவலகம் மற்றும் வேறு பணிகளுக்காக சென்று வருவோர் எண்ணிக்கை அதிகம். சாதாரண மக்கள் பயணிக்கும் இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கு மிகவும் சொற்பமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணத்திலும் உயர்வு இல்லை என்ற அறிவிப்பு ஏழை, எளிய மக்களின் மீது சுமையை ஏற்றக் கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகவே தெரிகிறது.

இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இருந்தாலும் நெடுந்தூரம், அதாவது 500 கிலோ மீட்டருக்கு அதிகமான பயணத்துக்கான டிக்கெட்களில் கிலோ மீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் உயர்வு அறிவித்திருப்பது மிகவும் சொற்பமானதே. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் பயணி 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு 35 ரூபாய் மட்டுமே கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் பேருந்துகளில் பண்டிகை நாட்களில் ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை கட்டணக் கொள்ளை நடைபெறும் சூழலில், ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ள கட்டண விகிதம் நியாயமானதே.
தத்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயம் என்ற நடைமுறையும் வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க இந்த கட்டுப்பாடு கொண்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது மட்டுமின்றி, ஜூலை 15-ம் தேதி முதல் ஆதார் அடிப்படையில் ‘ஓடிபி’ எண்ணைப் பெற்று, அதை பதிவு செய்தால் மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும் என்ற கூடுதல் கட்டுப்பாடும் அமலாகவுள்ளது.

தத்கல் டிக்கெட்கள் 5 நிமிடங்களுக்குள் காலியாகிவிடும் நிலை இருக்கும்போது, ‘ஓடிபி’ எண்ணைப் பெற்று அதை பதிவிடுவது காலதாமதத்தை ஏற்படுத்தி நடைமுறைச் சிக்கலுக்கு வழிவகுக்கும். புதிய நடைமுறை அமலுக்கு வந்ததும் அதிலுள்ள சிக்கல்களைக் கேட்டறிந்து மாற்றங்களைச் செய்வது அவசியம்.

பயணிகள் நலன்கருதி ரயில்வே நிர்வாகம் கொண்டு வரும் மாற்றங்கள் நியாயமானதாக இருந்தாலும், பெருகிவரும் மக்கள்தொகையின் தேவைக்கேற்ப ரயில் போக்குவரத்து இல்லை என்ற குறை நீடிக்கவே செய்கிறது. இரண்டு வழித்தடங்கள் இருக்கும் இடங்களில் நான்கு வழித்தடங்கள் அமைத்தால் மட்டுமே அதிகரித்துவரும் தேவையை சமாளிக்க முடியும்.

 

 

 

 

 

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்