Home Blog Page 5

அமெரிக்​கா​வில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேர் கைது; மக்கள் போராட்டம் 

அமெரிக்​கா​வில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேர் கைது; மக்கள் போராட்டம்

44 people arrested for illegally staying in America; People protest

  • கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. ‘கைது செய்தவர்களை விடுவிக்கவும். அவர்கள் இங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கவும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • நகரத்தின் வளர்ச்சி சார்ந்து பல்வேறு வழிகளில் பங்களிக்கும் புலம்பெயர்ந்தோர் மீதான இந்த நடவடிக்கையை கண்டு கோபமடைந்துள்ளேன். இது நமது சமூகத்தில் பயங்கரவாதத்தை விதைக்க வழிவகுக்கும்.

    மேலும், நகரத்தின் பாதுகாப்பு கொள்கைகளை சீர்குலைக்கும் வகையில் உள்ளது” என அவர் கூறினார்.

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன். 07

அமெரிக்​கா​வில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேர் கைது; மக்கள் போராட்டம் :

அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம். இது அமெரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், இந்த நகரில் சில இடங்களில் சோதனை மேற்கொண்டு சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு துறையின் விசாரணையில் 3 இடங்களில் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சுமார் 7 இடங்களில் இந்த சோதனை நடந்ததாக புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவு அளிக்கும் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. ‘கைது செய்தவர்களை விடுவிக்கவும். அவர்கள் இங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கவும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் பணிபுரியும் வணிக நிறுவனங்களை டார்கெட் செய்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோபமடைந்த மேயர் 

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், இந்த சோதனைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் தரும் நகரத்தின் மேயராக இதை நான் சொல்கிறேன். நகரத்தின் வளர்ச்சி சார்ந்து பல்வேறு வழிகளில் பங்களிக்கும் புலம்பெயர்ந்தோர் மீதான இந்த நடவடிக்கையை கண்டு கோபமடைந்துள்ளேன். இது நமது சமூகத்தில் பயங்கரவாதத்தை விதைக்க வழிவகுக்கும்.
மேலும், நகரத்தின் பாதுகாப்பு கொள்கைகளை சீர்குலைக்கும் வகையில் உள்ளது” என அவர் கூறினார்.

இருப்பினும் இந்த நடவடிக்கை நியாயமான ஒன்றுதான் என்றும். இதன் மூலம் சமூகத்துக்கு அச்சுறுத்தல் அளித்து வருபவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாக குடியேற்ற அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அதிபர் ட்ரம்ப். இது அவரது அரசு நிர்வாகத்தின் கொள்கை ரீதியான முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழகத்தில் கொரோனாவால் இறப்பு இல்லை – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் இறப்பு இல்லை – தமிழக அரசு அறிவிப்பு

No deaths due to Corona in Tamil Nadu – Tamil Nadu Government Announcement

  • இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 5,364 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 4,724 பேர் குணமடைந்துள்ளனர்.

  • தமிழகத்தில் இறந்த 4 பேரும் தீவிர இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், இறப்புக்கான பிரதான காரணம் கொரோனா இல்லை.

சென்னை, ஜூன், 07

தமிழகத்தில் கொரோனாவால் இறப்பு இல்லை – தமிழக அரசு அறிவிப்பு/ தமிழகத்தில் இணைநோய் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் விரைவில் குணமடைகின்றனர். பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவர்கள், முதியவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 5,364 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 4,724 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம், மகாராஷ்டிராவில் 17, கேரளாவில் 11, டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா 7 பேர், தமிழகத்தில் 4 பேர் என மொத்தம் 55 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்குள் கொரோனாவால் இறந்த 4 பேரும் இணை நோய்கள் பாதிப்புள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் என்பதால், கொரோனா இறப்பாகக் கருத முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தமிழகத்தில் அச்சப்படும் வகையில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. அதேநேரம், கர்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவர்கள், முதியவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோல், அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.

தமிழகத்தில் இறந்த 4 பேரும் தீவிர இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், இறப்புக்கான பிரதான காரணம் கொரோனா இல்லை. கொரோனாவால் பாதிக்கப்படும் 99 சதவீதம் பேர் எவ்வித தீவிர பாதிப்பும் இல்லாமல் குணமடைந்து விடுகின்றனர். அதனால்தான் அவர்களின் இறப்பை, கரோனா இறப்பில் சேர்ப்பதில்லை” என்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏன் ? இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறது இந்திய ராணுவம்

பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏன் ? இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறது இந்திய ராணுவம்

Why attack Pakistan? The Indian Army will meet the press at 10 am today

டெல்லி, மே. 07
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளது. இன்று அதிகாலை பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க போகிறது.

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.

india attack
india attack

ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இன்று அதிகாலை 1:44 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவர்கள் செயல்படும் இடங்களை குறிவைதது இந்தியாவின் முப்படைகள் துல்லிய தாக்குதல்களை நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’- என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தாக்கியது. பாகிஸ்தான் இராணுவ தளங்கள் எதையும் இந்தியா குறிவைக்கவில்லை.

பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள தீவிரவாத முகாம்களில் மட்டும் துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி இருந்தன. இந்த தாக்குதலில் பயங்கராவதிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்பு துறை அமைச்சகம், “சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் மிஷனை முன்னெடுத்தது. அதன்வழி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் மீது தீவிரவாதத் தாக்குதலை தொடுக்கத் திட்டம் தீட்டிய தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி உள்ளோம். மொத்தமாக 9 இடங்களைக் குறிவைத்து தாக்கி உள்ளோம்.

எங்களின் (இந்திய) இராணுவம் தெளிவாகத் திட்டமிட்டு குறிவைத்து இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தின் முகாம்கள் எதையும் நாங்கள் தாக்கவில்லை. மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிக்காத வகையில்தான் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஹல்காமில் தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி 25 இந்தியர்களையும் ஒரு நேபாள நாட்டவரையும் சுட்டுக்கொன்றதற்கான எதிர்வினைதான் இந்த சிந்தூர் தாக்குதல். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி இன்றைய நாளில் பின்னர் விரிவாக கூறுகிறோம்.” இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் சிந்தூர் தாக்குதல் குறித்து நாட்டு மக்களுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்திய ராணுவம் தாக்குதல்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்திய ராணுவம் தாக்குதல்

Retaliation to Pahalgam attack: Indian Army strikes Pakistan at midnight

டெல்லி, மே. 07

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடியை தொடங்கியிருக்கிறது. இந்த பதிலடியில் பீரங்கிகள் முக்கிய பங்காற்றியுள்ளன. குறிப்பாக எந்தவித தடையும் இன்றி பீரங்கி குண்டுகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்திருக்கின்றன.

நாடு முழுவதும் இன்று போர் ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இன்று அதிகாலை 1:44 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவர்கள் செயல்படும் இடங்களை குறிவைதது இந்தியாவின் முப்படைகள் துல்லிய தாக்குதல்களை நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’- என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தாக்கியது. பாகிஸ்தான் இராணுவ தளங்கள் எதையும் இந்தியா குறிவைக்கவில்லை.

indian army
indian army

இந்த தாக்குதலில் பீரங்கிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

தனுஷ் ஹவிட்சர், எம்777 கே9, வஜ்ரா, பூஃபோர்ஸ், எஃப் எச் 77பி, அட்டாக்ஸ் என நவீன பீரங்கிகள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பொதுவாக இந்த வகை பீரங்கிகள் சில நூறு மீட்டர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்த கூடும். அதிகபட்சம் ராணுவ கவச வாகனத்தை துளைக்கும் திறன் கொண்டது. ஆனால் ஒரே நேரத்தில் பல பீரங்கிகள் ஒன்று சேரும்போது நிலைமை மோசாமாகலாம். இது மிகப்பெரிய ராணுவ படையை கூட சிதறி ஓட விடும் அளவுக்கு திறன் கொண்டதாக இருக்கும். இந்த குண்டுகளை இடைமறிப்பது சாத்தியமில்லாதது. காரணம் இது அதி வேகத்தில் பயணிக்கும்.

உதாரணத்திற்கு தனுஷ் ஹவிட்சர் பீரங்கியின் குண்டு 1 கி.மீ தொலைவை 1 விநாடியில் கடந்துவிடும். இவ்வளவு வேகமாக குண்டை தடுக்க துல்லியமான கண்காணிப்பு அமைப்பு தேவை. இஸ்ரேலிடம் உள்ள ஐயன்டோம் போன்ற அமைப்புகளால்தான் இது சாத்தியம். ஆனால் அதற்காக செலவு அதிகமாக இருக்கும். இந்த குண்டுகள் பீரங்கிகளை கூட அழிக்கும் திறன் கொண்டது என்பதால் எதிரிகள் கவனமாக இருக்க வேண்டும்.

ஐசிசி வருடாந்திர தரவரிசை பட்டியல் வெளியீடு : ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் இந்திய அணி முதலிடம்

ஐசிசி வருடாந்திர தரவரிசை பட்டியல் வெளியீடு : ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் இந்திய அணி முதலிடம்

ICC Annual Ranking List Released: Indian Team Tops in ODI and T20 Formats

  • இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதன் மூலம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்திய அணி மதிப்பீட்டு புள்ளிகளை 122 முதல் 124 ஆக உயர்த்தியுள்ளது.

  • ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

துபாய், மே. 06

ஐசிசி வருடாந்திர தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த தரவரிசையில் மே 2024 முதல் விளையாடிய அனைத்து போட்டிகளும் 100 சதவீதமாகவும், முந்தைய இரண்டு ஆண்டுகளின் போட்டிகளில் 50 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசையில், 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதன் மூலம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்திய அணி மதிப்பீட்டு புள்ளிகளை 122 முதல் 124 ஆக உயர்த்தியுள்ளது.

நியூஸிலாந்து (109), ஆஸ்திரேலியா (109), இலங்கை (104), பாகிஸ்தான் (104), தென் ஆப்பிரிக்கா (96), ஆப்கானிஸ்தான் (91), இங்கிலாந்து (84), மேற்கு இந்தியத் தீவுகள் (83), வங்கதேசம் (76) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.

டி 20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. முதல் முறையாக வருடாந்திர டி 20 தரவரிசையில் உலகில் உள்ள 100 அணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 8 ஆட்டங்கள் விளையாடி அணிகள் தரவரிசை பட்டியலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து (113), தென் ஆப்பிரிக்கா (111), இந்தியா (105), நியூஸிலாந்து (95), இலங்கை (87), பாகிஸ்தான் (78), மேற்கு இந்தியத் தீவுகள் (73), வங்கதேசம் (62), அயர்லாந்து (30) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

“இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை’ என்கிறோம்”- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சாடல் 

“இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை’ என்கிறோம்”- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சாடல்

“We say that sending Hindi forward and sending Sanskrit behind is the national education policy” – School Education Minister Anbil Mahesh

  • “மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா

  • ‘வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்”

சென்னை, மே. 05

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை இந்தியை திணிப்பதாக கூறி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், “இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

amit shah
amit shah

“மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இது தொடர்பான செய்தி துணுக்கை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது” என்று பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவர்கள். இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம்.

‘வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்” என்கிறோம். “இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை’ என்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி

Ponmudi and Senthil Balaji resign from ministerial posts

  • போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு மின்துறையும், வீட்டுவசதி, நகர்ப்புறமேம்பாட்டு துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனம், காதி துறை ஒதுக்கீடு

  • முதல்வரின் பரிந்துரையை, ஏற்று பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார் என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

சென்னை, ஏப். 28

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் அவர் மீண்டும் அவர் அமைச்சரானார்.

இதுகுறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘‘ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் (இன்று) முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று கெடு விதித்தது.இதேபோல, சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்கு சென்று, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால், அவர் மீண்டும் அமைச்சரானார். இதற்கிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அன்பகத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அமைச்சர் பதவியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த விவகாரத்தில், அவர் மீது வழக்கு பதிவு செய்யவும், இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், அமைச்சரவையில் இருந்து இருவரும் நீக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பதவியை பொன்முடி, செந்தில் பாலாஜி இருவரும் நேற்று ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையை 6-வது முறையாக மாற்றம் செய்வது தொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனம், காதி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் ராஜினாமாவை ஏற்குமாறு ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு மின்துறையும், வீட்டுவசதி, நகர்ப்புறமேம்பாட்டு துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனம், காதி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 28-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு பதவிபிரமாண நிகழ்வு நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வரின் பரிந்துரையை, ஏற்று பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார் என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜுக்கு, தற்போது ராஜகண்ணப்பனிடம் இருக்கும் பால்வளத் துறை மீண்டும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவை கடந்த 2024 செப்டம்பரில் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டது. அப்போதுதான் செந்தில் பாலாஜியும் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டு, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

‘தொல்காப்பியம், தற்கால அறிவியலுக்கு முன்னோடியாக திகழ்கிறது’- தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு கருத்தரங்கில் அறிஞர்கள் கருத்து

‘தொல்காப்பியம், தற்கால அறிவியலுக்கு முன்னோடியாக திகழ்கிறது’- தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு கருத்தரங்கில் அறிஞர்கள் கருத்து

Tholkappiyam is a pioneer of modern science’ – Scholars’ opinion at the South Korean Tamil Research Organization seminar

  • “தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமல்ல, அது அக்காலத்திய அறிவியல் சிந்தனைகளின் களஞ்சியமாகவும் திகழ்கிறது,” என வாசுதேவன் தெரிவித்தார்.

  • தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஆரோக்கியராஜ், “தமிழ் பாரம்பரியத்தை உலக அளவில் பரப்பும் நோக்கத்துடன் எங்கள் அமைப்பு தொடர்ந்து செயல்படும். வரும் காலங்களில் பல்வேறு கலாச்சார மற்றும் அறிவியல் தொடர்பான நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

சியோல், ஏப்ரல் 25

தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு நடத்திய “தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள்” என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நேற்று ஜூம் இணைய வழியாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கருத்தரங்கில் கனடா, ஹாங்காங், கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் பல்கலைக்கழகத்தின் முனைவர் ஆய்வு மாணவர் எஸ். வாசுதேவன் ஆய்வுரை நிகழ்த்தினார். தொல்காப்பியத்தில் காணப்படும் அறிவியல் கோட்பாடுகள் குறித்து விரிவாக விளக்கிய அவர், பண்டைய தமிழ் இலக்கண நூலில் உள்ள, அறிவியல் கருத்துக்கள், தற்கால அறிவியலுக்கு முன்னோடியாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

“தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமல்ல, அது அக்காலத்திய அறிவியல் சிந்தனைகளின் களஞ்சியமாகவும் திகழ்கிறது,” என வாசுதேவன் தெரிவித்தார். ஒலியியல், உயிரியல், வானியல் மற்றும் சூழலியல் தொடர்பான பல முன்னோடி கருத்துக்கள் தொல்காப்பியத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் செயலாளரான முனைவர் ஞானராஜ், “உலகளாவிய தமிழ் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்ததாக கூறினார்.

Tolkappiyam is a pioneer of modern science'
Tolkappiyam is a pioneer of modern science’

தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஆரோக்கியராஜ், “தமிழ் பாரம்பரியத்தை உலக அளவில் பரப்பும் நோக்கத்துடன் எங்கள் அமைப்பு தொடர்ந்து செயல்படும். வரும் காலங்களில் பல்வேறு கலாச்சார மற்றும் அறிவியல் தொடர்பான நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூரியநாராயணன் தமது வாழ்த்துரையில், “தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களுக்கு இடையிலான இந்த அறிவுப் பரிமாற்றம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்,” என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹாங்காங்கை சேர்ந்த முனைவர் மெய்சித்திரா, “பண்டைய தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகளைத் தேடி கண்டறிவது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தொல்காப்பியம் போன்ற பழைய நூல்களை நவீன கண்ணோட்டத்துடன் ஆராய்வது, நமது பாரம்பரியத்தின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது” என பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த, தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் துணைத்தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ இறுதியில் நன்றியுரை நிகழ்த்தினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

சமத்துவ நாள் விழா : அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமத்துவ நாள் விழா : அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Equality Day Celebrations: Chief Minister M.K. Stalin garlands Ambedkar statue

  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார்

  • நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம்

சென்னை, ஏப். 14

டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் சமத்துவ நாள் விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார். அங்கு அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார். உறுதி மொழியை அவர் வாசிக்க அங்கிருந்த அனைவரும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றனர். அந்த வாசகம் வருமாறு:-

சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன். இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள் என்று ஆசை காட்டி, திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள் – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 

திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள் என்று ஆசை காட்டி, திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள் – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

They tried to break the DMK alliance by trying to get me to leave the DMK team – VCK leader Thirumavalavan

  • திமுக பலவீனமாகவும் இல்லை. திமுகவை வீழ்த்துவோம் என்றால், விசிகவையும் வீழ்த்துவோம் என்று பொருள்

  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, அதிக வாக்குகளை பெற்றதாக தங்களை முன்னிறுத்த பாஜக முயற்சிக்கிறது.

தஞ்சாவூர்,  ஏப். 14

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிலைகளைத் திறந்துவைத்தனர். இதில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் திருமாவளவன் பேசியதாவது: திமுக அரசியல் இயக்கமாகவும், ஆளும் கட்சியாகவும் வீரநடை போடுகிறது. எனவே, இன்னொரு கட்சி திமுகவுக்கு முட்டுக்கொடுக்க வேண்டிட அவசியமில்லை. திமுக பலவீனமாகவும் இல்லை. திமுகவை வீழ்த்துவோம் என்றால், விசிகவையும் வீழ்த்துவோம் என்று பொருள். எனவே, எங்கள் அரசியல் கோட்பாட்டை எதிர்ப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

கூடுதலாக தொகுதி, ஆட்சியில் பங்கு தருகிறோம், திமுக அணியை விட்டு வெளியே வாருங்கள் என்று ஆசை காட்டி, திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள். இதுபோன்ற அரசியல் நகர்வுகளுக்கு என்றும் நாங்கள் இடமளித்தது கிடையாது. என்னை துருப்புச்சீட்டாக வைத்து, திமுக கூட்டணியை உடைத்துவிடலாம் என்ற அவர்களது முயற்சி தோற்றுப்போனது.

அதிமுக-பாஜக கூட்டணியை பழனிசாமிதான் அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், அமித்ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி சுதந்திரமாக முடிவெடுக்கிறார் என்பதை எப்படி நம்ப முடியும். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, அதிக வாக்குகளை பெற்றதாக தங்களை முன்னிறுத்த பாஜக முயற்சிக்கிறது. மேலும், அதிமுகவை வீழ்த்தி, கரைந்து போகச் செய்யும் யுக்தியையும் பாஜக கையாள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்