Home Blog Page 6

கொள்கை இல்லா கூட்டணி அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணி – முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

கொள்கை இல்லா கூட்டணி அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணி – முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

AIADMK-BJP alliance without policy is a losing alliance – Chief Minister M.K. Stalin strongly criticizes

  • எதைப் பற்றியும் உள்துறை அமைச்சர் பேசவில்லை. அதிமுக தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. மாறாக திமுகவையும் தி.மு.க. அரசையும், என்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர்

  • தமிழை ஒழிக்க இந்தி, தமிழர்களது வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள், தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்க தொகுதி மறுவரையறை – எனத் திட்டமிட்டு தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பாஜக தலைமை.

சென்னை, ஏப். 12

“இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான். பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.” என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக நேற்று, ‘‘அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் 2026 தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை சந்திக்க உள்​ளோம். பாஜக​வும், அதி​முக​வும் இணைந்து தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமைக்​கும்’’ என்று சென்னை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அறிவித்தார்.
இந்நிலையில் இந்தக் கூட்டணி அமைந்த பின்னர் அது தொடர்பான முதல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக – பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

நேற்றைய தினம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டி, அவர் வகிக்கும் பதவிக்குத் தகுதியானதாக இல்லை. அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்து கொள்வது அவரது விருப்பம் சார்ந்தது. ஆனால் எதற்காக இந்தக் கூட்டணியை உருவாக்கினார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்று சொல்லவில்லை. மாறாக, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கப் போவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

நீட் தேர்வை – இந்தித் திணிப்பை – மும்மொழிக் கொள்கையை – வக்பு சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறது அ.தி.மு.க.; தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது அதிமுக – இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் உள்துறை அமைச்சர் பேசவில்லை. அதிமுக தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. மாறாக திமுகவையும் தி.மு.க. அரசையும், என்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர் என்பதைப் பார்த்தவர்கள் அறிவார்கள்.

மாநில உரிமை – மொழியுரிமை – தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம்தான் திமுக. ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிரும் பாஜ. – அதிமுக கூட்டணி என்பது, இது அத்தனைக்கும் எதிரானது. பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை – தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை.

இதையும் படியுங்கள்போராட்டம் எதிரோலி : வக்பு சட்டத்தை அமல் படுத்தமாட்டோம் -மம்தா பானர்ஜி திட்ட வட்டம்

நீட் தேர்வைப் பற்றி ஊடகவியலாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பிய போது அதற்கு சரியான பதிலை உள்துறை அமைச்சரால் சொல்ல முடியவில்லை. ‘நீட் தேர்வு சரியானது’ என்றாவது தனது வாதத்தை அவர் வைத்திருக்க வேண்டும். மாறாக, ‘நீட் தேர்வு எதிர்ப்பு என்பதே திசை திருப்புவது’ என்ற திசை திருப்பும் பதிலையே உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். 20-க்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருக்கிறார்கள். இவர்களும் திசை திருப்பும் வகையில் தான் தற்கொலை செய்து கொண்டார்களா? இங்கு மட்டுமல்ல, பிஹாரிலும் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இதற்கு உள்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்?

ஐந்து மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ வழக்குத் தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருவதும், மாணவர்கள் சிலரும் பெற்றோர் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாவது உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா? சிபிஐ யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? விசாரிக்கவும். அதன் பிறகு ‘நீட் தேர்வு எதிர்ப்பு’ என்பது திசை திருப்புவதற்காகச் சொல்லப் படுகிறதா மருத்துவக் கல்வியைக் காப்பதற்காகச் சொல்லப்படுகிறதா என்பதை உள்துறை அமைச்சர் அறிவார்.

உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஓர் அமைச்சர், ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்று வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். ஒன்றரை ஆண்டுகளாக 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை பாஜக ஆண்டது. அங்கே போய் அமைதியை நிலைநாட்ட முடியாத உள்துறை அமைச்சர், அமைதியான மாநிலத்துக்குள் வந்து அமைதியைக் குலைக்கப் பார்க்கிறார். அமைதியான மாநிலம் என்பதால் தான் அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது தமிழ்நாடு. இதனை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே ஒப்புக் கொள்கின்றன. ஆனால், சட்டம் ஒழுங்கு மோசம் என்று உள்துறை அமைச்சர் பொறுப்பற்ற வகையில் பீதியைக் கிளப்பிச் சென்றிருக்கிறார்.

அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்த மேடையில் ஊழலைப் பற்றி உள்துறை அமைச்சர் பேசிய காட்சியைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கவே செய்வார்கள். ஊழலுக்காக இரண்டு முறை முதலமைச்சர் பதவியை விட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது பேசத் தகுதியான வார்த்தையா ஊழல் என்பது?

இன்றைய அதிமுக பொறுப்பாளர்களது உறவினர் குடும்பங்களைச் சுற்றியும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பாஜக தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழல்’ தான் என்பதை அனைத்தும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்.

பழைய கொத்தடிமைக் கூடாரமான அதிமுகவின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

போராட்டம் எதிரோலி : வக்பு சட்டத்தை அமல் படுத்தமாட்டோம் -மம்தா பானர்ஜி திட்ட வட்டம்

போராட்டம் எதிரோலி : வக்பு சட்டத்தை அமல் படுத்தமாட்டோம் -மம்தா பானர்ஜி திட்ட வட்டம்

Protest against Waqf Act in West Bengal: Act will not be implemented – CM Mamata Banerjee assures

  • நேற்று நடைபெற்ற போரட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல். பதற்றமான சூழல்

  • டைமண்ட் ஹர்பர் பகுதியில் சாலையை மறித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் , போலீசார் 10 பேர் காயம்

கொல்கத்தா, ஏப். 12

போராட்டம் எதிரோலி : வக்பு சட்டத்தை அமல் படுத்தமாட்டோம் -மம்தா பானர்ஜி திட்ட வட்டம்:

வக்பு சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக முர்ஷிதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவியது. போலீசார் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன.
வக்பு வாரிய திருத்த சட்டம் நாடளுமான்றத்தில் நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நீடித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிமிதிதா மற்றும் சுதி ஆகிய இரண்டு இடங்களில் நேற்று நடைபெற்ற போரட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நிமிதிதா ரயில் நிலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

ரயில் போக்குவரத்தை முடக்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். இந்த போராட்டத்தினால் ரயில்வே சொத்துக்களும் சேதம் அடைந்தன. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களும் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் சிலர் காயம் அடைந்தனர். பதற்றத்தை தணிக்க எல்லை பாதுகாப்பு படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி நிலைமை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், டைமண்ட் ஹர்பர் பகுதியில் சாலையை மறித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக போலீசார் 10 பேர் காயம் அடைந்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ; 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ; 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

A low pressure area over South Tamil Nadu; Light to moderate rain likely at one or two places till 12th

  • தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 7-ம் தேதி (இன்று) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

  • 10-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை, ஏப். 07

தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 7-ம் தேதி (இன்று) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இதையும் படியுங்கள் : அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி. அருண் நேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

தென்தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 7 செ.மீ., சுருளக்கோடில் 6 செ.மீ., பேச்சிப்பாறை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி. அருண் நேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி. அருண் நேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

Enforcement Department officials raid places belonging to Minister K.N. Nehru and Perambalur Lok Sabha MP Arun Nehru

  • சென்னையில் 10 இடங்களில்.. சென்னையில் மட்டும் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோவையில் அமைச்சரின் சகோதரருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் இருப்பதாகவும், அது தொடர்பாக சிங்காநல்லூர், அவினாசி சாலை, மசக்காளி பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுவதாகவும் தகவல்.

  • தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் திமுக மூத்த அமைச்சர், அவரது மகன், சகோதரர், சகோதரி வீடுகள், தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையின் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி சோதனை கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஏப். 07

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பரலூர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு, அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மற்றும் அமைச்சரின் சகோதரி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்கி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இச்சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் வங்கிப் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுவதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 10 இடங்களில்.. சென்னையில் மட்டும் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோவையில் அமைச்சரின் சகோதரருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் இருப்பதாகவும், அது தொடர்பாக சிங்காநல்லூர், அவினாசி சாலை, மசக்காளி பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சரின் வீடு, அவரது சகோதரி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி தில்லை நகரில் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தத் தொடங்கியவுடன் அங்கு திமுக தொண்டர்கள் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு அவர்கள் அமைதி காக்கும்படி அறிவுறுத்தப்பட்டதின் பேரில் தற்போது சோதனை பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது.

திமுக ஷாக்! தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் திமுக மூத்த அமைச்சர், அவரது மகன், சகோதரர், சகோதரி வீடுகள், தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையின் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி சோதனை கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, துரை முருகன், பொன்முடி எனப் பலரும் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ரெய்டுகளை சந்தித்துவிட்ட நிலையில் மற்றொரு மூத்த அமைச்சர் வீடு, தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து வரும் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து வரும் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

Protest on the 8th to condemn the central government’s amendment to the Waqf Board Act – Liberation Tigers of Tamil Nadu leader Thirumavalavan

  • இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று சொல்ல கூடிய அளவுக்கு வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது பாஜக அரசு

  • வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பிஹாரில் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்

திருச்சி, ஏப். 05

“வக்பு வாரிய சட்டம் நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து வரும் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், காட்டத்தூரில் உள்ள பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று சொல்ல கூடிய அளவுக்கு வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.

இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. ஆளும் பாஜக அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இதனை அரங்கேற்றி உள்ளது. வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களிலும் தலையிடாத மத்திய அரசு, வக்பு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது. வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத நபர்களை நியமிப்பதற்காக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதற்கு பாஜக வெளிப்படைத் தன்மை எனக் கூறுகின்றனர். பவுத்த மதத்தில்,புத்த விகாரில் பவுத்தர் அல்லாதவர்களை நியமித்து இன்று வரை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இதனை எதிர்த்து புத்த பிட்சுகள் போராடி வருகின்றனர். மத்திய அரசின் மத விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து, வரும் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர உள்ளோம். மக்களவையில் 232 பேர் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளோம். மாநிலங்களவையில் 95 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளோம்.

தமிழகத்தில் அதிமுகவும் எதிர்த்து வாக்களித்தது ஆறுதல் அளித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பாஜக இதனை சாதித்திருக்கிறார்கள் . அரசியல் காரணங்களுக்காக கூட்டணி கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. பிரதமர் மோடியின் இலங்கை பயணம் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மோடி இதுகுறித்து பேசுவார் என எதிர்பார்க்கிறோம்.

நீட் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. இந்த சூழலில் 9-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை தமிழக முதல்வர் கூட்டி உள்ளார். அவரது முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம். நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தாமல் அனைத்து கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும். திமுக அரசு பதவி ஏற்ற காலத்தில் இருந்து நீட் எதிர்ப்பை முழு மனதோடு கடைபிடித்து வருகிறது.

அவ்வாறு முயற்சி எடுக்காமல் இருந்தால், வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார்கள் என்று கூறலாம். விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் மத்திய ஆட்சியாளர்கள் தான். தமிழக ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் பள்ளிக் கல்வித்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. மரத்தடி வகுப்புகள் இன்றும் நடக்குமானால் அதற்கு உடனடியாக உரிய தீர்வு காணப்பட வேண்டும். பள்ளி வகுப்பறை எண்ணிக்கைகளை பெருக்க வேண்டும்.

வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பிஹாரில் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர். ஆதாய அரசியல் செய்யும் கூட்டணி கட்சிகளுக்கு இது பெரிய சவுக்கடி. பாஜக கூட்டணிக்கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக செயல்படக் கூடாது. மக்களின் விருப்பத்தை கொண்டே செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். பேட்டியின்போது, திருச்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றல் அரசு, குரு அன்புச்செல்வன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கும் 25 ஆயிரம் வீரர்களுக்கு இந்த ஆண்டு முதல் காப்பீடு திட்டம் – சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கும் 25 ஆயிரம் வீரர்களுக்கு இந்த ஆண்டு முதல் காப்பீடு திட்டம் – சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Insurance scheme to be launched this year for 25,000 state and national players – Deputy Chief Minister Udhayanidhi Stalin in the Legislative Assembly

  • ‘எலைட்’ திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை 25-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்படும். சென்னை வேளச்சேரி ஏஜிபி வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் ரூ.18 கோடியில் மறுசீரமைக்கப்படும்

  • உலக வங்கியுடன் இணைந்து ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0’ இந்த ஆண்டில் தொடங்கப்படும். கிராமப்புறத்தை சேர்ந்த 42 ஆயிரம் இளைஞர்களுக்கு ரூ.66 கோடியில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி

சென்னை, மார்ச். 29

உலக வங்கியுடன் இணைந்து ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0’ இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது துறைகள் மீதான மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

தமிழகத்தில் சுமார் 1.15 கோடி மகளிர் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை பெறுகின்றனர். கடந்த 19 மாதங்களில் மட்டும் ரூ.21,657 கோடிக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறாத தகுதி வாய்ந்த மகளிர், புதிதாக விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, இந்தியாவிலேயே நம்பர்-1 இடத்தை நோக்கி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த ஆட்சியில் இதுவரை மொத்தம் 104 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில், விளையாட்டு வீரர்கள் யாருக்காவது போட்டிகளில் பங்கேற்க நிதி உதவி தேவைப்பட்டால்
www.tnchampions.sdat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க சொல்லுங்கள். நிச்சயம் திறமைக்கு ஏற்ப, நிதி உதவி அளிக்கப்படும்.
சென்னை, மதுரையில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி ரூ.55 கோடி செலவில் நடத்தப்பட உள்ளது. இளைஞர்களிடம் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து வட்டார, மாவட்ட அளவில் ரூ.45 கோடியில் முதல்வர் இளைஞர் விளையாட்டு திருவிழா நடத்தப்படும். மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கும் 25 ஆயிரம் வீரர்களுக்கு இந்த ஆண்டு முதல் காப்பீடு திட்டம் உருவாக்கப்படும்.

‘எலைட்’ திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை 25-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்படும். சென்னை வேளச்சேரி ஏஜிபி வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் ரூ.18 கோடியில் மறுசீரமைக்கப்படும். தமிழகத்தில் இந்த ஆண்டு ஸ்குவாஷ் உலக கோப்பை, இ-ஸ்போர்ட்ஸ், ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப், ஆசிய இளையோர் படகோட்டுதல் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளும் நடத்தப்படும். வரும் நிதி ஆண்டில் 40 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கங்கள் (மினி ஸ்டேடியம்) ரூ.120 கோடியில் அமைக்கப்படும்.

இந்த ஆண்டில் உலக வங்கியுடன் இணைந்து ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0’ தொடங்கப்படும். கிராமப்புறத்தை சேர்ந்த 42 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ரூ.66 கோடியில் வழங்கப்படும். ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 2,500 புதிய சமுதாய திறன் பள்ளிகள் ரூ.25 கோடியில் உருவாக்கப்படும். சிறப்பு சுயஉதவி குழுக்களுக்கு ரூ.25 கோடி வாழ்வாதார நிதி, 6,000 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.90 கோடி சமுதாய முதலீட்டு நிதி, 15,000 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.22.50 கோடி சுழல் நிதி வழங்கப்படும். சென்னையை தொடர்ந்து 5 மண்டலங்களில் உணவு திருவிழா நடத்தப்படும். 100 சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு மின் ஆட்டோக்கள் வழங்கப்படும்.

‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் ஷெல் நிறுவனம் மூலம் காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை மாவட்டங்களில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன கட்டமைப்புடன் கூடிய உயர் திறன் மையங்கள் அமைக்கப்படும். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூலம் 2 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஏஐ உயர்திறன் மையங்கள் நிறுவப்படும். இதன்மூலம் 25 ஆயிரம் பெண்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.

அரசு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த, தரவு சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் அரசுத் துறைகளில் பொருளியல், புள்ளியியல் பிரிவு அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

மதுரை மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

மதுரை மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

Budget presentation for 2025-26 in Madurai Corporation

  • 2025-2026 நிதி ஆண்டில் மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.1,439.40 கோடியாகவும், செலவினம் ரூ.1,480.13 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், ரூ.40 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டாக மேயர் தாக்கல் செய்தார். மேயர் இந்திராணி பொறுப்புக்கு வந்தபிறகு தற்போதுதான் முதல் முறையாக பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்
  • கவுன்சிலர்களுக்கான வார்டு நிதி சென்ற ஆண்டைபோல் ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும் என மேயர் அறிவித்தார்.ஆனால், தொகை விவரத்தை முழுமையாக கேட்காத கவுன்சிலர்கள், மேஜையை தட்டி ஆரவாரம்

மதுரை, மார்ச். 27

மதுரை மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் ரூ.1,439.40 கோடியாகவும், செலவினம் ரூ.1,480.13 கோடியாகவும் மதிப்பிடப்பட்டு ரூ.40 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் பற்றி விவாதிக்க அனுமதி கோரி மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் கூச்சல் போட்டனர். அவர்களுக்கு எதிராக திமுக கவுன்சிகளும் குரல் எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. ஆணையர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கியதும், மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில், அக்கட்சி கவுன்சிலர்கள் எழுந்து, பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், அவர்கள் நலனை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்றனர்.
மேலும், பட்ஜெட்டை பற்றி விவாதிக்க எதிர்கட்சி கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றனர். அவர்களை அமர சொல்லி கோஷமிட்ட திமுக கவுன்சிலர்கள், “பட்ஜெட்டை வாசிக்கவில்லை, அதற்குள் குறை சொல்லக்கூடாது, வெற்று அரசியலுக்காக பேசக்கூடாது, அமருங்கள்,” என்றனர். சில நிமிடங்கள் நீடித்த திமுக-அதிமுக கவுன்சிலர்கள் கூச்சல் முடிந்தபிறகு, மேயர் இந்திராணி பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.

2025-2026 நிதி ஆண்டில் மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.1,439.40 கோடியாகவும், செலவினம் ரூ.1,480.13 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால், ரூ.40 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டாக மேயர் தாக்கல் செய்தார். மேயர் இந்திராணி பொறுப்புக்கு வந்தபிறகு தற்போதுதான் முதல் முறையாக பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெடில் குறிப்பிட்டுள்ளவை பற்றி மேயர் இந்திராணி பேசியதாவது: மாநகராட்சியால் ஈட்டப்படும் ஒவ்வொரு ரூபாயும் எந்த அளவு திறமையாக செலவிடப்படுகிறது என்பதை விளக்குவதே பட்ஜெட்டின் நோக்கம். இந்த பட்ஜெட் வெறும் செலவினத்தை மட்டும் இலக்காக கொண்டதல்ல, சாதனை, இலக்கை எய்தல், செலவினத்தின் மதிப்பை ஆய்தல் போன்றவற்றையும் அடிப்படையாக கொண்டது. மாநகராட்சி பள்ளிகளில் படித்த இரண்டு மாணவர்கள் மருத்துவப் படிப்புகளிலும், ஒரு மாணவி பல் மருத்துவத்திலும், 6 மாணவர்கள் பொறியியல் படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், மனநல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாட்டுத்தவாணி பேருந்து நிலைய கழிப்பறைகள் மட்டுமில்லாது, தற்போது கீழசித்திரைவீதி, தெற்கு சித்திரை வீதி, தமுக்கம் மைதானம், மாநகராட்சி வளாகப்பகுதியில் உள்ள கழிப்பறைகள் இலவசமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.1609.69 கோடியில் நிறைவேற்றப்படும் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

இதையும் படியுங்கள்: வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் – தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

மக்கள் தொகை பெருக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. பாத்திமா கல்லூரி முதல் பரவை மார்க்கெட் வரை ரூ.1.45 கோடியிலும், குருவிக்காரன் சாலை முதல் விரகனூர் சந்திப்பு வரை ரூ.1.55 கோடியில் தெருவிளக்குகள் அமைக்கப்படுகிறது. மாநகராட்சியில் ரூ.314 கோடியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. பெரியாறு பேருந்து நிலையத்தில் ரூ.112 கோடியில் கட்டிய வணிக வளாகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

புதிய அறிவிப்புகள்:

மாநகராட்சி தூய்மைப்பணியாளர் குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வத்தினை மேம்படுத்தும் நோக்கில் 10ம் வகுப்பு, ப்ளஸ்-2 தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் 3 இடங்களை பெறுவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மாநகராட்சியின் 24 பள்ளிகளில் அதிவீன படிப்பகங்கள் (Smart Reading Room) ரூ.3 லட்சம் வீதம் பல்துறை அறிஞர்களை கொண்டு அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியின் தொன்மை, கலாச்சாரம், எதிர்கால படிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள அறிவுசார் சான்றோரை கொண்டு வழிகாட்டுதல், ஊக்குவித்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ.15 லட்சத்தில் வார இதழ்கள், தினசரி பத்திரிக்கைகள் மற்றும் பிற நூல்களை ஒருங்கிணைத்து நூலகம் அமைக்கப்படும்.
மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள், ஒளிஒலி அமைப்புகள் ரூ.2 கோடியில் ஏற்படுத்தப்படும்.
மாநகராட்சி உரக்கிடங்கு அமைந்துள்ள வெள்ளக்கல் பகுதியில் சுற்றுச்சூழல் துறை பங்களிப்புடன் பசுமை வனக்காடுகள் அமைக்கப்படுகிறது.
மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உணவு சுற்றுலா முக்கியத்துவம் பெறும் மதுரையில், மாட்டுத்தாவணி பகுதியில் ரூ.3 கோடியில் உணவு வீதி (Food Street) அமைக்கப்படுகிறது.
மாநகராட்சிக்குட்பட்ட மேம்பால ஓரங்களில் அலங்கார மின்விளக்குகள், அலங்கார செடிகள் அமைத்து அழகுப்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாநகராட்சிப்பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் சாலைகளை கண்டறிந்து ‘ஸ்மார்ட் ரோடு’(Smart Road) அமைக்கப்படும்.
மாகநராட்சிப் பகுதிகளில் ரூ.10 கோடியில் இரு அறிவியல் பூங்கா அமைக்கப்படும்.
மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்கா ரூ. 2கோடியில் பராமரிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.


மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாநகராட்சி பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை. அரைத்த மாவையே மீண்டும் அரைத்துள்ளனர். அதனால், பட்ஜெட் அப்பளம் போல் உடைந்துப் போய்விட்டது. தரமான குடிநீர், சுகாதாரம், விடுப்பட்ட வார்டுகளில் தெருவிளக்கு, சாலைகள், பிரதான மழைநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும், கழிவுநீரை முழுமையாக சுத்திரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் போன்றவைதான் மக்களின் எதிர்பார்ப்புகள். ஆனால், இதற்கான மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை,” என்றார்.

பட்ஜெட் தாக்கல் கூட்டம் 10.30 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 11 மணிக்கு மிக தாமதமாக தொடங்கியது. மேயர் இந்திராணி, சுமார் ஒரு மணி நேரம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சிறப்பு அம்சங்களை வாசித்தார். கவுன்சிலர்கள் இதுவரை நடந்த கூட்டங்களில், கழிவுநீர், சாலைகள், தெருவிளக்கு, குடிநீர், மாநகராட்சி பள்ளிகள் போன்றவை பற்றி பொதுமக்களுக்காக பலமுறை பேசியிருப்பார்கள். இவை தொடர்பாகதான் மேயர் பட்ஜெட்டில், அடுத்த ஒரு ஆண்டில் மாநகராட்சி நிறைவேற்றப்போகும் திட்டங்கள், அறிவிப்புகள், மாநகராட்சியின் நிதி நிலை, செலவினங்கள் போன்ற முக்கியமானவற்றை குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், பெரும்பாலான கவுன்சிலர்கள் , அவரது பேச்சை சுத்தமாக கேட்கவே இல்லை. மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், தங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டது மட்டுமில்லாது அடுத்தடுத்த இருக்கைகள், எதிர் திசையில் இருப்பவர்களையும் சத்தம் போட்டு அழைத்தும், சைகை காட்டியும் சத்தமாக தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கவுன்சிலர்களுக்கான வார்டு நிதி சென்ற ஆண்டைபோல் ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும் என மேயர் அறிவித்தார்.

ஆனால், தொகை விவரத்தை முழுமையாக கேட்காத கவுன்சிலர்கள், மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். அதிமுக கவுன்சிலர், வார்டு நிதி கூட்டவில்லை, இது போன ஆண்டு நிதிதான் என்றதால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட திமுக கவுன்சிலர்கள், மேயரிடம் முறையிட்டனர். மேயர், ஆணையர் சித்ராவிடம் அவர்களது கோரிக்கையை பரிந்துரைத்தார்.

கவுன்சிலர்கள் இந்த பொறுப்பில்லாத செயல், பேச்சு, சிரிப்பு, சத்தங்களுக்கு மத்தியில் மேயர் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். கவுன்சிலர்களின் இந்த பொறுப்பற்ற செயல், மாமன்ற கூட்டத்தை பார்க்க வந்த பொதுமக்கள், அதிகாரிகளை முகம் சுழிக்க வைத்தது. கவுன்சிலர்கள் அரசியல்வாதிகள் என்பதால் அவர்களை அழைத்து கண்டிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாமல் கூட்டரங்கில் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் – தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் 

வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் – தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

The Waqf Board Amendment Bill should be completely withdrawn – separate resolution in the Tamil Nadu Legislative Assembly

  • வக்பு நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை ஆதரிப்பதாகவும், மத உரிமைகளைப் பாதிப்பதாகவும், மத்திய அரசின் சட்டத்திருத்தங்கள் இருந்ததால், அதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம்.

  • இந்தியைத் திணித்து, இந்திப் பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலமாக வஞ்சிக்கிறது. சமூகநீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது.

சென்னை, மார்ச் 27

“சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தை திருத்துவதற்கு, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது” என்று சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

பேரவையில் இன்று (மார்ச் 27) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிரான தனித்தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசியதாவது: “வேற்றுமையில் ஒற்றுமைகண்டு நாட்டுமக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு வாழும் நாடு இந்தியா. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய நாட்டின் மக்கள் என்ற உண்மை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய நாட்டை ஆளும் அரசும், இத்தகைய உணர்வு கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும்.

ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசானது தனது செயல்பாடுகள் அனைத்தையும் ஒருவிதமான உள்நோக்கம் கொண்டதாக செய்து வருகிறது. எதை செய்தாலும், குறிப்பிட்டத் தரப்பை வஞ்சிக்கும் வகையில்தான் திட்டங்களைத் தீட்டுகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் வஞ்சித்தது.

இந்தியைத் திணித்து, இந்திப் பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலமாக வஞ்சிக்கிறது. சமூகநீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது.

நீட் மற்றும் தேசியக் கல்விக் கொள்கையானது அடித்தட்டு மக்களை பாதிப்பதாக அமைந்ததை அனைவரும் அறிவோம். இந்த வரிசையில் கொண்டு வரப்படும், வக்பு வாரிய சட்டத் திருத்தமானது சிறுபான்மையின இஸ்லாமிய மக்களை வஞ்சிப்பதாக அமைந்ததை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: குன்னூர் மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து ; 15 கடைகள் எரிந்து, பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

வக்பு சட்டமானது 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய மத்திய பாஜக கூட்டணி அரசு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்வரவினை கடந்த 8.8.2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்பு நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை ஆதரிப்பதாகவும், மத உரிமைகளைப் பாதிப்பதாகவும், மத்திய அரசின் சட்டத்திருத்தங்கள் இருந்ததால், அதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம்.

எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள். இந்த சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வக்பு சட்டத்தை திருத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் ஏற்படும். வக்பு சட்டத்தை மத்திய அரசு திருத்த நினைக்கிறது. இதன்மூலம் மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரிய கட்டமைப்புகள் மாற்றப்பட்டு அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது.

இது வக்பு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும். வக்பு நிலங்களை நில அளவை செய்யும் அதிகாரம், நில அளவையரிடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக வக்பு நிலங்கள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் வக்பு வாரியத்திடம் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்பு சொத்து இந்த சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்பு சொத்தாக கருதப்படாது என்று இந்த சட்டம் கூறுகிறது.

இது அரசுக்கு சொத்துகளை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒரு நபர் மட்டும் வக்பு அறிவிக்க முடியும் என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்பு சொத்துகளை செல்லாதவை என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது. இஸ்லாமிய மக்களின் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்கு தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். மாநில வக்பு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்பு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை, சேர்க்க வேண்டும் என்று இந்த சட்டம் கட்டாயப்படுத்துகிறது.

இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும். வக்பு சொத்துக்களை பதிவு செய்யும் முன்பு மாவட்ட ஆட்சியர் சரிபார்க்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இது அரசு இந்த சொத்துக்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள். வக்பு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது. வக்பு வாரிய சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26-ன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவதாகும். வக்பு பயனர் என்ற பிரிவை நீக்கத் திட்டமிட்டுள்ளார்கள். நீண்டகால பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது.

இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. காலவரையறைச் சட்டம் வக்பு சொத்துக்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள், இனி வக்பு என கருதப்படமாட்டாது. இத்தகைய பிரிவுகள் முஸ்லிம் சமூகங்களின் எதிர்ப்புக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை மத்திய அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை. இந்த அடிப்படையில் வக்பு நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை அதிகரிப்பதாக, மத்திய அரசின் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது.

இது சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளைப் பாதிப்பதாகவும் இருக்கிறது. இதனை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் 30.9.2024 அன்று தமிழக அரசு தெளிவாக கூறியிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருக்கக் கூடிய திமுக உறுப்பினர்களான ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா ஆகியோர் கடுமையாக தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். திமுக மட்டுமின்றி இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திருத்தங்களை நாடாளுமன்றக் கூட்டுக்குழு நிராகரித்திருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கிவிட்டது. இந்நிலையில், வக்பு திருத்த சட்டமானது எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் இந்த சட்டத்துக்கு எதிராக நமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரமென்று நான் கருதுகிறேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான மதசுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, வக்பு நோக்கத்துக்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற, பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் இருக்கின்றன.

இந்த திருத்த சட்டமானது வக்பு அமைப்பையே காலப்போக்கில் செயல்படவிடாமல் முடக்கிவிடும். எனவே, நாம் இதனை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மதநல்லிணக்கம், அனைவருக்குமான அரசியல் என்ற இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தீர்மானம்: இந்திய திருநாட்டில் மதநல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு, அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அமைப்புகளுக்கு உள்ளது. ஆனால், அதற்கு மாறாக சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தை திருத்துவதற்கு, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை வலியுறுத்துகிறது,” என்று முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

குன்னூர் மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து ; 15 கடைகள் எரிந்து, பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

குன்னூர் மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து ; 15 கடைகள் எரிந்து, பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

Major fire breaks out in Coonoor market; 15 shops gutted, goods worth crores damaged

உதகை, கோத்தகிரி மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி

இரவை பகலாக்கும் வகையில் கொழுந்து விட்டு எரிந்த இந்த தீ விபத்து தொடர்பாக குன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை

குன்னூர், மார்ச். 27

குன்னூர் மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், 15 கடைகள் எரிந்து, பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமான 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.நேற்று இரவு 10 மணி அளவில் மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மள, மளவென காட்டு தீ போல் அருகே உள்ள கடைகளுக்கும் பரவியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து அங்கும்,இங்கும் தலைத் தெறிக்க ஓடினர்.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தவுடன் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் தீ பற்றி எரிந்தது. இதனால் நகரப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக தண்ணீரை எடுத்து வர இயலாததால் தீயணைப்பு துறையினர் திண்டாடினர். பின்னர் உதகை, கோத்தகிரி மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.

இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறையால் வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பெயிண்ட் கடையில் உள்ள பொருட்களால் தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.என்.நிஷா, குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, நகராட்சி ஆணையர் இளம் பருதி, குன்னூர் டிஎஸ்பி ரவி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர் உசேன்,சையது மன்சூர் ஆகியோர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
இந்த திடீர் தீ விபத்தில் துணி, பெயிண்ட், மளிகை கடைகள் என கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் பல கோடி மதிப்பிலான பொருட்களும் தீக்கிரையானது. இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மவுண்ட்ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர்வாசிகளும், வியாபாரிகளும் அதிகளவில் குன்னூர் சப் டிவிஷன் மற்றும் உதகையில் இருந்து நூற்றுக்கணக்கான போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இரவை பகலாக்கும் வகையில் கொழுந்து விட்டு எரிந்த இந்த தீ விபத்து தொடர்பாக குன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் தீ விபத்து குறித்து காரணம் குறித்து தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வரை தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் புகை மூட்டம் அதிகரித்து வருவதால் தீயணைப்பு துறையினர் அதனை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இதன் காரணமாக குன்னூர் மார்க்கெட் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சரக்கு லாரிகள் அணிவகுத்து நின்றது. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்களும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

No riots for vote politics against the three-language policy – Tamil Nadu Chief Minister M.K. Stalin’s response to UP Chief Minister Yogi Adityanath

“இருமொழிக் கொள்கை, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான, வலுவான குரல் தேசிய அளவில் ஒலிப்பதால் பாஜக கலக்கமடைந்துள்ளது

நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஆதிக்கத்தை, திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இது வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல. நீதிக்கான, மாண்புக்கான போர்.”

சென்னை, மார்ச். 27

“மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இருமொழிக் கொள்கை, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான, வலுவான குரல் தேசிய அளவில் ஒலிப்பதால் பாஜக கலக்கமடைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் அளிக்கும் பேட்டியில் அது புலப்படுகிறது.


உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நமக்கு வெறுப்பு பற்றி பாடம் எடுக்கிறார். எங்களை விட்டுவிடுங்கள். அவர் வெறுப்பு பற்றி பாடமெடுப்பது நகை முரண். அரசியல் அவல நகைச்சுவையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.
நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஆதிக்கத்தை, திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இது வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல. நீதிக்கான, மாண்புக்கான போர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஏஎன்ஐ ஊடகத்திற்கு யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில், “மொழி என்பது மக்களைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும். தமிழ் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று. மேலும் அதன் வரலாறு சமஸ்கிருதத்தைப் போலவே பழமையானது. காசி தமிழ் சங்கமம் வாரணாசியில் நடக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மீது மரியாதை வைத்துள்ள நிலையில், அவர்கள் ஏன் இந்தியை வெறுக்க வேண்டும்?

இது வெறும் குறுகிய அரசியல். திமுகவின் வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாக உணர்ந்ததால், மாநிலங்கள் மற்றும் மொழி அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். மக்கள் எப்போதும் இதுபோன்ற பிளவுவாத அரசியலுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழிகளை கற்பிக்கும்போது, தமிழக பல்கலைக் கழகங்களில் இந்தியை கற்பிப்பதில் என்ன தவறு.

தொகுதி மறுவரையறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கிவிட்ட பின்னரும் அரசியலுக்காக ஸ்டாலின் அதுகுறித்து குற்றம்சாட்டுகிறார்.” என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்