Home Blog Page 7

சென்னையில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி – மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி – மாநகராட்சி அறிவிப்பு

Digital smart parking facility in Chennai – Corporation announcement

  • பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும்.

  • பொதுமக்கள் எளிய வழியில் வரி செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், தற்போது கூடுதலாக QR Code வசதி ஏற்படுத்தித் தருதல். சொத்து வரி மதிப்பீடு, பெயர் மாற்றம் திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள், தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி

 

சென்னை, மார்ச். 19

சென்னையில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி – மாநகராட்சி அறிவிப்பு : சென்னை மாநகராட்சியில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். ஸ்மார்ட் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ரூ.681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.4464 கோடிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் உருவாக்கப்பட்ட நிலையில், 2025-2026 நிதி ஆண்டிற்கு ரூ.5145.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வளர்ந்து வரும் மாநகரமாக உயர்ந்துள்ளது. மிகை அளவிலான வணிக நிறுவனங்கள், கடைகள் பெருகி வருவதால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பேருந்து வழித்தடங்கள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், பாதசாரிகளுக்கு நடந்து செல்வதில் சிரமமும், பாதுகாப்பின்மையும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க சாலையோரங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் வாகன நிறுத்துமிடத்தை (Smart Parking) கண்டறிவதற்கு செயலி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இதனை பொது மற்றும் தனியார் பங்குதாரர்கள் (Public Private Partnership) முறையில் செயல்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாகன நிறுத்துமிடத்தை அறிந்து கொள்ளவும், முன்பதிவு செய்து உபயோகப்படுத்தவும் இயலும்.இதனால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும். பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும். இதனால், வாகன நெரிசல்கள் குறைவதுடன் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி (மண்டலம் 2 வார்டு 21), IOCL (மண்டலம் 4 வார்டு 38), டோல்கேட் (மண்டலம் 4 வார்டு 39 மற்றும் சாலிகிராமம் (மண்டலம் 10 வார்டு 128) ஆகிய நான்கு இடங்களில் அமைந்துள்ள பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேம்பாலங்கள் மற்றும் இரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியினை அழகுபடுத்திட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூபாய் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.அதேபோல, சென்னை மாநகராட்சிக்கு, பொதுமக்கள் எளிய வழியில் வரி செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், தற்போது கூடுதலாக QR Code வசதி ஏற்படுத்தித் தருதல். சொத்து வரி மதிப்பீடு, பெயர் மாற்றம் திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள், தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி ஏற்படுத்தப்படும்.

இதனால், எவ்வித சிரமும் இன்றி உடனடியாக வரிகளை செலுத்த இயலும். வாட்ஸ் அப் சேவை பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளை செய்யும் அலுவலர்கள் செயல்திறன் மிக்க வகையில் செயல்படவும், பொது மக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும், எளிதாக அணுகக்கூடிய வகையிலும் வழங்குவதில் மாநகராட்சி பல முக்கியமான சவால்களை எதிர்கொள்கின்றது. தற்போது இணையதளங்கள் மற்றும் பயன்பாட்டில் மொபைல் உள்ள செயலிகளை பயன்படுத்துவோர் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். உலகளவில் மிகப் பெரிய பயனர் அடிப்படையைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாட்டு தளத்தைப் பயன்படுத்தி, இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி, ஒரு நவீன மற்றும் திறன்வாய்ந்த சேவைகளை செயல்படுத்தி அதற்கான தீர்வை வழங்க முடியும். இதற்கு 4.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற சுகாதார மற்றும் நல மையங்கள், 16 சமுதாய நல மையங்கள், 1 தொற்று நோய் மருத்துவமனை, 2 பகுப்பாய்வு மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் புளியந்தோப்பில் உள்ள 1 காச நோய் மருத்துவமனை ஆக மொத்தம் 303 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் தாய் சேய் நல சேவைகள், தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை வசதிகள், தடுப்பூசி சேவைகள், அவசரகால சேவைகள் மற்றும் ஆய்வக சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது மூட்டு வலி, எலும்பு, தசை சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் மனநலம் சார்ந்த நோய்களுக்கான சிகிச்சை பெற வரும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆகவே, முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதியோர் நலப் பிரிவுகள் தொடங்குவது அவசியமாகிறது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

பாஜக அரசின் பாரபட்சமான பார்வை ரயில்வே துறைக்கும் விதிவிலக்கல்ல – இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கே.நவாஸ்கனி

 

பாஜக அரசின் பாரபட்சமான பார்வை ரயில்வே துறைக்கும் விதிவிலக்கல்ல – இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கே.நவாஸ்கனி

The BJP government’s biased view of the railway sector is no exception, says Indian Union Muslim League Vice President K. Navaskani

  • மத்திய அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு ரூ.6,626 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு ரயில்வேக்கு ரூ.14,745 கோடி ஒதுக்கீடு

  • கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாம்பன் ரயில் பால பணிகளுக்காக ராமேசுவரத்திற்கு செல்லக்கூடிய ரயில்கள் நிறுத்தப்பட்டு மண்டபம் வரை மட்டுமே இப்போது ரயில் இயக்கப்படுகிறது. இது ராமேசுவரம் வரை செல்லும் பொதுமக்களுக்கும் ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

புதுடெல்லி, மார்ச்.18

பாஜக அரசின் பாரபட்சமான பார்வை ரயில்வே துறைக்கும் விதிவிலக்கல்ல – இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கே.நவாஸ்கனி: “மத்திய அரசு சார்பில் தெற்கு ரயில்வேக்கு ரூ.6,626 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு ரயில்வேக்கு ரூ.14,745 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த பாரபட்சம்” என ரயில்வே துறை மானியக் கோரிக்கையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கே.நவாஸ்கனி கேள்வி எழுப்பினார்.

இது குறித்து ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்பியான கே.நவாஸ்கனி பேசியதாவது: ரயில்வே துறைக்கு என்று தனியாக இருந்த நிதிநிலை அறிக்கையை ஒழித்து விட்டு, இப்போது மானிய கோரிக்கையாக விவாதிக்க கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, இது, ரயில்வே துறையை எந்த அளவிற்கு பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்துகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நாடு முழுவதும் நடந்துள்ளன. கிட்டத்தட்ட 351 பேர் உயிரிழந்துள்ளார்கள், 970 பேர் காயமடைந்திருக்கிறார்கள்,

கடந்த 2024 முதல் 5 மாதங்களில் மட்டும் 18 ரயில் விபத்துகள் பதிவாகி இருக்கின்றன, இத்தகைய விபத்துகளின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்வேக்கு கிட்டத்தட்ட ரூ.313 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பங்கள் மாபெரும் வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் இத்தனை ரயில் விபத்துகள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாஜக அரசின் பாரபட்சமான பார்வை ரயில்வே துறைக்கும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்துகின்றது

.
தெற்கு ரயில்வேக்கு ரூ.6,626 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு ரயில்வேக்கு ரூ.14,745 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்கின்றோம். தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மானாமதுரையில் இருந்து அபிராமம் பார்த்திபனூர் கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே நாங்கள் தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த புதிய ரயில் பாதை வழியாக ரயில்கள் இயக்கப்பட்டால், தென் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள், இதேபோல காரைக்கால் பகுதியில் இருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ரயில்வே வழித்தட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பணியமர்த்தப்படும் ரயில் நிலைய ஊழியர்கள் நிச்சயமாக அந்தந்த பிராந்திய மொழிகளை கற்றுத் தெரிந்திருக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அவர்களை அணுகும் அடித்தட்டு மக்கள் அவர்களுக்கான தேவைகளை கேட்டு பெறுவதற்கு இந்தி கற்க முடியாது. இதுவும் ஒரு வகையிலான உங்களின் மொழி திணிப்பு என்று பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. எனவே, தமிழ் தெரிந்தவர்களை தமிழ்நாட்டில் நியமிக்க வேண்டும். பாம்பன் ரயில் பாலம் எப்போது தான் திறக்கப்படும் என்று எங்களுடைய மாவட்ட மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கின்றார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாம்பன் ரயில் பால பணிகளுக்காக ராமேசுவரத்திற்கு செல்லக்கூடிய ரயில்கள் நிறுத்தப்பட்டு மண்டபம் வரை மட்டுமே இப்போது ரயில் இயக்கப்படுகிறது. இது ராமேசுவரம் வரை செல்லும் பொதுமக்களுக்கும் ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டது. பிரதமரின் நேரத்திற்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகிறது, நீங்கள் காலதாமதம் செய்வதால் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். உடனடியாக அந்த பாம்பன் ரயில் பாலத்தை திறக்க வேண்டும்.அதே நேரத்தில் அந்த புதிய ரயில் பாலத்தில் அதிர்வுகள் இருப்பதாகவும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், ரயில்வே அதிகாரிகளே தெரிவித்தனர். அதையெல்லாம் சரி செய்துவிட்டு மக்களின் அச்சத்தை போக்கிவிட்டு துவங்க வேண்டும். அந்த பகுதியினுடைய மீனவர்கள் மிகப்பெரிய சோகத்தில் கண்ணீரோடு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். அதனை எல்லாம் மீட்டுக் கொடுத்து மீனவர்களை விடுதலை செய்து மீனவர்களின் துயரங்களை போக்கிவிட்டு அங்கு வந்து பிரதமர் பாலத்தை திறந்து வைத்தால், மீனவர்கள் அவர்களை மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். பாம்பன் பாலத்தையும் காஷ்மீரில் அமைந்துள்ள உயரமான செனாப் ரயில்பாலத்தை இணைக்கும் வகையில் அம்ரித் பாரத் ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும்.

ராமேஸ்வரம் மதுரை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை-ராமேஸ்வரம் இடையே இரு மார்க்கமும் திருச்சி, விருத்தாசலம் வழியாக பகல் நேர விரைவு வண்டி, தினசரி இன்டர்சிட்டி வகை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயிலை மூன்று முறை இயக்க வேண்டும், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி (22621/22622) இரு மார்க்கமும் ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீட்டர்கேஜ் முறையில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை பிராட் கேஜ் முறையில் மாற்றப்படும்போது நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம்- கோயம்புத்தூர், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக இரு மார்க்கமும், ராமேஸ்வரம் – பாலக்காடு பயணிகள் வண்டி இரு மார்க்கமும், ராமேஸ்வரம் – திருச்சி இரவு நேர பயணிகள் வண்டி இரு மார்க்கமும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் : சேவைகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம்

சென்னை – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – திருப்பதி அந்தியோதயா விரைவு வண்டிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். திருவனந்தபுரம் – மதுரை புனலூர் – பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். ராமேஸ்வரம் திருப்பதி (16779/16780) விரைவு வண்டி அதிகமாக பக்தர்கள் பயன்படுத்தக்கூடிய வழித்தடம். தற்போது வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வரும் இந்த வண்டியை தினசரி வண்டியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படக்கூடிய சிலம்பு விரைவு வண்டியை தினசரி வண்டியாக மாற்ற வேண்டும். அந்த ரயில் திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதியில் நிறுத்தங்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றோம், அங்கு அந்த ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும். பொது மக்களும் அதிகம் அதன் மூலம் பயனடைய முடியும்.

எனவே, மதுரை வழியாக விரைவு வண்டிகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன, ஆனால் இரண்டு ரயில்களிலும் பெட்டிகள் மிக பழைய பெட்டிகளாக அமைந்துள்ளது.

அது பயணிகளுக்கு பல்வேறு அசவுகரித்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. இதனை புதிய பெட்டிகளாக மாற்ற வேண்டும் என நெடு நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றோம். எனவே சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு புதிய பெட்டிகள் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கே.நவாஸ்கனி தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் : சேவைகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் : சேவைகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம்

Bank employees strike: Services may be disrupted for 4 days

  • அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரூபம் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க முன்வராததால் வேலைநிறுத்த போராட்டத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம்.

  • வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு வரையிலும் என 48 மணி நேரம் தொடர் வேலைநிறுத்த போராட்டம்

சென்னை,  மார்ச். 18

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் : சேவைகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம். வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு வரையிலும் என 48 மணி நேரம் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 8 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரூபம் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க முன்வராததால் வேலைநிறுத்த போராட்டத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சிரமம் ஏதேனும் ஏற்பட்டால், அதனை பொறுத்துக்கொண்டு எங்களுடைய வேலைநிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:  சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் 

வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை ஆகும். அந்தவகையில், 4-வது சனிக்கிழமை வருகிற 22-ந்தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாளான 23-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாகும். இதற்கு அடுத்த 24, 25-ந்தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிச்சேவைகள் முடங்கும் அபாயம் இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல வங்கி சேவைகளை பெறுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு வங்கி ஊழியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

Sunita Williams returns to Earth from the International Space Station

  • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அங்கு பணிகளைத் தொடர்வார்கள்.

  • சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் அந்த விண்கலம் இந்திய நேரப்படி நாளை (19/03/2025) அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடையும். இதற்கான நேரலையை இந்திய நேரப்படி நாளை (19/03/2025) அதிகாலை சுமார் 2.15 மணியளவில் நாசா தொடங்குகிறது.

மார்ச். 18

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக கடந்த ஜூன் 5-ஆம் தேதி சென்றார்.  சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் அங்கே மாதக்கணக்கில் தங்க நேரிட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து  289 நாட்களுக்குப்  பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புகிறார்.

புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகின்றார்.

அவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அங்கு பணிகளைத் தொடர்வார்கள்.

நாசா ஏற்கனவே அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்படுவதற்கு சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் தயாராகி வருகிறார்கள். அதற்காக, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர், நிக் ஹாக் மற்றும் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் தங்கள் பொருட்களுடன் இருக்கைகளில் தயாராகும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. அதற்கு முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்களுடன் உடன் பணிபுரிந்த மற்றும் புதிதாக இணைந்துள்ள வீரர்களுக்கு அவர்கள் விடை கொடுத்தனர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் தத்தமது இருக்கைகளில் அமர்ந்து, தயாரானதும் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. நாசா திட்டமிட்டிருந்தபடி, இந்திய நேரப்படி சரியாக காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது.

விண்கலம் தற்போது பூமியை நோக்கிய சுமார் 17 மணி நேர பயணத்தில் உள்ளது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் அந்த விண்கலம் இந்திய நேரப்படி நாளை (19/03/2025) அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடையும். இதற்கான நேரலையை இந்திய நேரப்படி நாளை (19/03/2025) அதிகாலை சுமார் 2.15 மணியளவில் நாசா தொடங்குகிறது.
சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் போயிங் ஸ்டார்லைனர் மூலமாக ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். அவர்களுடன் பூமிக்குத் திரும்பும் ஹேக், கோர்புனோவ் ஆகிய இருவரும் 6 மாத பயணமாக ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் கடந்த செப்டம்பரில் அங்கு சென்றனர். திட்டக்காலம் நிறைவடைந்துவிட்டதால் அவர்களும் சுனிதா, வில்மோருடன் இணைந்து பூமிக்குத் திரும்புகின்றனர். அவர்களை பூமிக்கு அழைத்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கலத்தில் 4 இருக்கைகள் உள்ளன.
விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் பயணம் ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினரை சுமந்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கலம் அதிவேகமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். அப்போது சுமார் 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அது தாங்க வேண்டியிருக்கும். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் இருவரையும் இந்த அதீத வெப்பத்தில் இருந்து வெப்பப் பாதுகாப்புக் கவசங்கள் காத்து நிற்கும்.

புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் டிராகன் கலம் விரைவாகவே தனது வேகத்தை இழந்துவிடும். அப்போது, கலத்திற்குள் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமான ஈர்ப்பு விசையை எதிர்கொள்வார்கள். இறுதிக்கட்டத்தில் 4 பெரிய பாராசூட்கள் விரியும். அப்போது, கலத்திற்குள் இருக்கும் நால்வரும் அதிர்வை உணர்வார்கள். ஆனால், இந்த செயல்தான் டிராகன் கலம் தனது வேகத்தை குறைத்து, பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்க வழிவகுக்கும்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது எப்போது என்பது குறித்த கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது.

மார்ச் 18

இந்திய நேரப்படி காலை 8:15 மணி – சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் மற்ற குழுவினர் டிராகன் விண்கலத்திற்குள் செல்வார்கள்.

இந்திய நேரப்படி காலை 10:35 மணி – டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு பிரியும் (Undocking)

மார்ச் 19

இந்திய நேரப்படி அதிகாலை 2:15 மணி – பூமிக்கு திரும்புவதற்கான பயணம் NASA+ இல் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்

இந்திய நேரப்படி அதிகாலை 2:41 மணி – விண்கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் (நேரம் தோராயமானது)

இந்திய நேரப்படி அதிகாலை 3:27 மணி – விண்கலத்தின் வேகம் குறைந்து, பாரசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் இறங்கும் (நேரம் தோராயமானது)

இந்திய நேரப்படி காலை 05:00 மணி – பூமிக்கு அவர்கள் திரும்பிய பிறகு நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள்

 

சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் ‘எக்ஸ்பெடிஷன் -14’ குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது. 1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாக பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.

1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராக தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி என்று குறிப்பிடுகிறார் உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி. சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாக தன்னுடைய பணியை துவங்கினார். சுனிதா வில்லியம்ஸ் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். இதன் மூலம், விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஆனால் இது சுனிதாவின் முதல் வரலாற்று சாதனை அல்ல. 2006-07 ஆண்டில் தனது முதல் விண்வெளி பயணத்தின் போது, ​​அவர் 29 மணி நேரம் 17 நிமிடங்கள் விண்வெளியில் நடந்தார். இதுவே இதுவரை ஒரு பெண் பதிவு செய்த மிக நீண்ட விண்வெளி நடையாகும். மேலே குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் அவர் நான்கு முறை விண்வெளியில் நடந்துள்ளார். முன்னதாக இந்த சாதனையை விண்வெளி வீராங்கனை கேத்தரின் வசமிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் 21 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளி நடையை மேற்கொண்டு சாதனை புரிந்திருந்தார். இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம். மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார். 2013-ஆம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றும் போது, ​​சுனிதா விண்வெளிக்கு சமோசாக்களை எடுத்துச் சென்றதாகக் கூறியிருந்தார். இதனுடன், உபநிடதங்கள் மற்றும் கீதையையும் படிக்க எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.

இந்திய உணவைப் புகழ்ந்து பேசிய அவர், இந்திய உணவுகளைப் பார்த்து யாருக்கும் சலிப்பே ஏற்படாது என்றார். அமெரிக்க அரசாங்கத்தின் தரநிலைப்படியே நாசாவிலும் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் விண்வெளி வீரர்களுக்கான (civilian astronauts) GS-13 மற்றும் GS-15 தர ஊதியமும் அடங்கும். அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் GS-01 முதல் GS-15 வரையிலான தர ஊதியத்தின்படி சம்பளம் வழங்கப்படுகிறது. GS-15 தர ஊதியம் என்பது இங்கு மிக அதிகமான சம்பளத்தை குறிக்கிறது. இந்த தரநிலைப்படியே சுனிதாவும் சம்பளம் பெறுகிறார். GS-13: இந்த பிரிவில் ஆண்டுக்கு $81,216 முதல் $105,579 வரை (தோராயமாக ரூ. 70 லட்சம் முதல் 92 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது. GS-14: இந்த பிரிவில் ஆண்டுக்கு $95,973 முதல் $124,764 வரை (தோராயமாக ரூ.83 லட்சம் முதல் ஒரு கோடியே 8 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது. GS-15: இந்த பிரிவில் ஆண்டுக்கு $112,890 முதல் $146,757 வரை (தோராயமாக ரூ.98 லட்சம் முதல் ஒரு கோடியே 27 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு ‘பேனா முனை’ விருது : ஐ.டி. கே. நிறுவனம் வழங்கி கவுரவிப்பு

இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு ‘பேனா முனை’ விருது : ஐடிகே. நிறுவனம் வழங்கி கவுரவிப்பு 

Director Nanda Periyasamy honored with ‘Pena Munai’ award

சென்னை, பிப். 08

இந்திய மாணவர்களுக்கு மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நாடுகளில் உயர் கல்வி வாய்ப்புகளை உருவாக்கி தரும் சிறந்த நிறுவனம் ஐடிகே எஜூகேஷன் சர்வீஸ் பி.லிட்.

itk award
itk award

இந்த ஐடிகே. நிறுவனம், மகளிர் தினத்தை சென்னை ஆழ்வார்திருநகர் பிளாக் பாரெஸ்ட் ரெஸ்டாரண்ட்டில் கொண்டாடியது. நிகழ்வில் பல்வேறு துறையில் சாதனை படைத்த பெண்கள் பாராட்டப்பட்டனர். கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

itk award
itk award

நிகழ்ச்சியில் அண்மையில் வெளிவந்து மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட திரு.மாணிக்கம் திருப்படத்தை இயக்கிய இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு, ஐடிகே நிறுவனம், “மக்கள் எழுத்தாளர் 2025” விருது வழங்கி கவுரவித்தது.

itk award
itk award

இந்த விருதை சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி டீன் (புதுமை) Dr. ரெனே ராபின் வழங்க, நந்தா பெரியசாமி பெற்றுக்கொண்டார். ஐடிகே தலைவர் Dr. ஜோசப், தான் வரைந்த வாழ்த்து மடலை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் விநாயகா மிஷின் ஆராய்ச்சி அறக்கட்டளை டீன் மார்த்தா கிரிசில்டா, ஸ்டடி மலேஷியா திருமாவளவன், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன், பெத்தேல் பள்ளி தலைவர் டோறீன் ராபின், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர்கள் ஷாஜினி, ஏஞ்சலின், கிறீன்பீல்டு சென்னை இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் அலெயம்மா மாத்தியூ, முதல்வர் சந்தியா பிரதீப், புதிய பரிமாணம் தொலைக்காட்சி நிறுவனர் புஹாரி ஷரீஃப், தொழில் அதிபர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உலகத்தர கல்வி பயில, தமிழக உயர் கல்வி நிறுவனங்களுக்கு மலேஷியா சுற்றுலாத்துறை அழைப்பு

உலகத்தர கல்வி பயில, தமிழக உயர் கல்வி நிறுவனங்களுக்கு மலேஷியா சுற்றுலாத்துறை அழைப்பு

Malaysia Tourism invites Tamil Nadu higher education institutions to pursue world-class education

சென்னை, பிப். 28

சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள மலேஷிய சுற்றுலாத்துறை அலுவலகத்தில், வியாழன் (27-ந் தேதி) காலை “ஸ்டடி மலேஷியா அகாடமிக் கனெக்ட் 2025” சிறப்பு கருத்துகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்டடி மலேஷியா மற்றும் ஐ.டி.கே. சர்வதேச கல்விச்சேவை நிறுவனத்துடன் இணைந்து மலேஷிய சுற்றுலாத்துறை நடத்திய நிகழ்விற்கு தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கான மலேஷிய சுற்றுலாத்துறை இயக்குநர் ஹிஷாமுத்தீன் முஸ்தபா தலைமை தங்கினார். டூரிஸம் மலேஷியா வர்த்தக அதிகாரி சைய்யது வரவேற்று பேசினார்.

Oplus_131072

ஐ.டி.கே. எஜூகேஷன் குரூப் ஆப் கம்பெனிஸ் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஜோசப் பேசும்போது,  தமிழ்நாட்டு மாணவர்கள் சர்வதேச உயர் கல்வி பெற வேண்டியதின் அவசியம் மற்றும் வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்டார்.

ஸ்டடி மலேஷியா சென்னை நிறுவன இயக்குநர் திரு பேசும்போது, மலேஷியாவில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள், சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.

Oplus_131072

நிகழ்ச்சியில் பெத்தேல் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் இயக்குநர் தோறீன் ராபின்,  ஆரோ எஜூகேஷன் சி.இ.ஓ. மாலதி, விநாயகா மிஷின் ரிசர்ச் பவுண்டேஷன் டீன் டாக்டர் மார்த்தா கிரிசில்டா, எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பேராசிரியர் டாக்டர் மினு, சத்தியபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பேராசிரியர் டாக்டர் நாகராஜன், க்ரீன்பீல்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல் சி.இ.ஓ. டாக்டர் ஆலயம்மாள் மேத்தியூ, முஹம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் சீனிவாசன், முஹம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குநர் விக்னேஷ், பெண்கள் கிறிஸ்டின் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஷாஜினி ஜூடித் டயானா, பெண்கள் கிறிஸ்டின் கல்லூரி பேராசிரியர் ஏஞ்சலினா ஸ்ரீதேவி, சாய் ராம் இன்ஜினியரிங் இயக்குநர் (புதுமை) டாக்டர் ரினே ராபின், புதிய பரிமாணம் டிவி நிறுவனர், ஆசிரியர் புஹாரி ஷரீப் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Oplus_131072

நிகழ்வில் தலைமையுரையாற்றிய மலேஷிய சுற்றுலாத்துறை இயக்குநர் ஹிஷாமுதீன் முஸ்தபா, மிக குறைந்த கட்டணத்தில் தமிழக மாணவர்கள் உயர் கல்வி கற்க விருப்பமான இடமாக மலேஷியா திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சி மூலம் தமிழக கல்வி நிறுவனங்களுடனான புரிதல்கள் வலுவடைந்துள்ளது.

வரும் கல்வியாண்டில் மலேஷிய உயர்கல்வி கட்டமைப்புகள், மாணவர்களுக்கான கல்வி பயணக்குழு திட்டங்கள், சலுகைகள், கலாச்சார புரிதல் ஏற்படும் வகையில் தமிழக கல்வி நிறுவன பிரதிநிதிகள் குழுவை மலேஷியாவிற்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Oplus_131072

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பை பாராட்டி மலேஷிய சுற்றுலாத்துறை இயக்குநர் ஹிஷாத்தீன் முஸ்தபா, ஐ.டி.கே. சர்வதேச கல்விச்சேவை நிறுவன சி.இ. ஓ. டாக்டர் ஜோசப்பிற்கு சுற்றுலாத்துறை சிறப்பு மெமண்டோ வழங்கி கவுரவித்தார்.

Oplus_131072

2026 ஆண்டுக்கான மலேஷிய சுற்றுலாத்துறையின் வீரா மற்றும் மஞ்சா என்ற இரு சூரிய கரடியின் புதிய லோகோவை இயக்குநர் ஹிஷாத்தீன் முஸ்தபா வெளியிட, ஐ.டி.கே. குரூப் கம்பெனி நிறுவனர் டாக்டர் ஜோசப் பெற்றுக்கொண்டர்.

முடிவில் நிகழ்ச்சியில்  அனைத்து கல்வி நிறுவன பிரதிநிதிகளுக்கு பதக்கம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

‘ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திடமாட்டேன் ‘ – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திட்ட வட்டம்

‘ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திடமாட்டேன் ‘ – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திட்ட வட்டம்

‘Even if they give Rs. 10 thousand crores, I will not sign the National Education Policy’ – Chief Minister M. K. Stalin

  • தமிழகம் முழுவதிலும் 132 அரசுப் பள்ளிகளில் ரூ.177.38 கோடியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், உண்டு உறைவிட பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

  • நாம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், ரூ.2,152 கோடியை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை இது.

விருத்தாசலம், பிப். 23

சமூக நீதிக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தேசிய கல்விக் கொள்கை. ரூ.10 ஆயிரம் கோடி தருவதாக சொன்னாலும், அத்திட்டத்தில் கையெழுத்திட மாட்டேன். தமிழ் சமுதாயத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளும் பாவத்தை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ 7-வது மண்டல மாநாடு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திருப்பெயர் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு. தமிழகம் முழுவதிலும் 132 அரசுப் பள்ளிகளில் ரூ.177.38 கோடியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வக கட்டிடங்கள், உண்டு உறைவிட பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

'Even if they give Rs. 10 thousand crores, I will not sign the National Education Policy' - Chief Minister M. K. Stalin 
‘Even if they give Rs. 10 thousand crores, I will not sign the National Education Policy’ – Chief Minister M. K. Stalin

மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் கல்வித் தரத்தை மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் மனமார பாராட்டியுள்ளனர். அதேநேரம், தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கின்றனர். நாம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், ரூ.2,152 கோடியை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை இது.
சமூகநீதிக்கும், தமிழுக்கும். தமிழர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தேசிய கல்விக் கொள்கை. நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது ஆபத்தை தரும். ‘இந்தியை திணிக்கிறார்கள்’ என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே தேசிய கல்விக் கொள்கையை நாம் எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளியைவிட்டு துரத்தும் கொள்கை அது. 6-ம் வகுப்பு முதல் ‘தொழில் கல்வி’ எனும் பெயரில் குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி, குலத்தொழில், சாதித் தொழில் என்று மனுநீதி சொல்லும் அநீதியை, படித்து முன்னேற நினைப்பவர்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்.

இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டால் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும்’ என்று சொன்னால்கூட நாங்கள் கையெழுத்து போட மாட் டோம். ரூ.2 ஆயிரம் கோடிக்காக இன்று நாங்கள் இதில் கையெழுத்திட்டால் நம் தமிழ் சமுதாயம் 2 ஆயிரம் ஆண்டுக்கு பின்னோக்கி சென்று விடும். அந்த பாவத்தை ஒருபோதும் செய்ய மாட்டேன்.

இந்தியாவில் சுமார் 52 மொழிகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன. ‘இந்தி பெல்ட்’ எனப்படும் மாநிலங்களில் மட்டும் 25 மொழிகள் அழிந்துள்ளன. தாய்மொழியை இழந்து இந்தி ஆதிக்கத்துக்கு பலியான மாநிலங்கள் இப்போதுதான் மெல்ல விழிப்படைந்து வருகின்றன.

நிதியை தருமாறு கேட்டால், ‘தமிழ் மீது பிரதமருக்கு அக்கறை இருக்கிறது’ என்கிறார் மத்திய அமைச்சர். அவர்களது அக்கறை தமிழுக்கு என்ன செய்தது? சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சம்ஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.1,488 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வெறும் ரூ.74 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இதுதான் நீங்கள் தமிழை வளர்ப்பதா?
நாங்கள் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. இந்தியும் எங்களுக்கு எதிரி இல்லை. இந்தி பயில வேண்டும் என நினைப்பவர்களை தமிழகம் ஒருபோதும் தடுத்தது இல்லை. ஆனால், இந்தியை எங்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள். மீறி திணித்தால். ‘தமிழர் என்றொரு இனம் உண்டு; தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பதை தமிழகம் காண்பித்துவிடும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

மாநாட்டுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை வகித்தார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அவர் 77 முறை ஆய்வு நடத்தியதை விளக்கும் காட்சிகள் கொண்ட ‘234/77 ஒருமைக்கண்’ செயலி, தமிழ்நாடு பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் ‘அப்பா’ எனும் செயலி ஆகியவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக காட்சிக் கூடத்தை திறந்து வைத்து, மாநாட்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

மாநாட்டில் அமைச்சர்கள் பொன்முடி, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சிவசங்கர், கடலூர் எம்.பி. விஷ்ணு பிரசாத், எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், ராதாகிருஷ்ணன், சபா ராஜேந்திரன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி, பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

‘விடாமுயற்சி’ படம் விஸ்வரூப வெற்றி, தமிழகத்தில் மட்டும் ரூ.68 கோடி வசூல்

‘விடாமுயற்சி’ படம் விஸ்வரூப வெற்றி, தமிழகத்தில் மட்டும் ரூ.68 கோடி வசூல்

The movie ‘Vidamuyarchi’ was a smash hit ; Tamil Nadu alone, collecting Rs 68 crores

  • வெளிநாடுகளைப் பொறுத்தவரையில், முதல் 3 நாட்களில் ரூ.33 கோடி அளவில் வசூல் செய்தது. அடுத்த மூன்று தினங்களையும் சேர்த்து இதுவரை ரூ.36 கோடி அளவில் வசூல்

  • ஹாலிவுட்டின் ‘பிரேக் டவுன்’ படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படத்துக்காக அஜித்தின் சம்பளம் ரூ.110 கோடியில் இருந்து ரூ.120 கோடி வரை இருக்கக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், இதன் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.200

சென்னை, பிப். 12

விடாமுயற்சி’ படம் விஸ்வரூப வெற்றி, தமிழகத்தில் மட்டும் ரூ.68 கோடி வசூல்; மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியான முதல் 6 நாட்களில், உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.118 கோடி வசூலை எட்டியுள்ளது. உலக அளவில் ரூ.100 கோடி வசூலுக்குப் பிறகு, கடந்த இரு தினங்களாக சற்று ‘நிதான’மாகவே வசூல் செய்து வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகவும், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். விமர்சன ரீதியில் ‘ஆவரேஜ்’ எனக் குறிப்பிடப்படும் இந்தப் படம், அஜித் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ தன்மைகளைத் தாண்டிய புதுவிதமான திரை அனுபவம் தந்துள்ளது.

இதையும் படியுங்கள்: முதல்வர் மருந்தகம் : தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்ய 840 பேருக்கு உரிமம்

பிப்ரவரி 6-ம் தேதி வெளியான இப்படம், முதல் நாளில் இந்திய அளவில் ரூ.26 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாளில் ரூ.11 கோடி, மூன்றாவது நாளில் ரூ.14 கோடி, நான்காவது நாளில் ரூ.14 அளவிலும் வசூலை ஈட்டிய ‘விடாமுயற்சி’, இந்திய அளவில் மட்டும் முதல் 4 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.65 கோடியை ஈட்டியது. அதன்பின், ஐந்தாவது மற்றும் ஆறாவது நாளில் தலா ரூ.3.5 கோடி அளவில் மட்டும் இந்தியாவில் வசூல் செய்தது. தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.68 கோடி அளவில் இப்படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், வெளிநாடுகளைப் பொறுத்தவரையில், முதல் 3 நாட்களில் ரூ.33 கோடி அளவில் வசூல் செய்தது. அடுத்த மூன்று தினங்களையும் சேர்த்து இதுவரை ரூ.36 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. ஆக, இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக உலக அளவில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் முதல் 6 நாட்களில் ரூ.118 கோடியை எட்டியுள்ளதாக திரை வர்த்தக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஹாலிவுட்டின் ‘பிரேக் டவுன்’ படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படத்துக்காக அஜித்தின் சம்பளம் ரூ.110 கோடியில் இருந்து ரூ.120 கோடி வரை இருக்கக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், இதன் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.200 எனத் தெரிகிறது. தியேட்டர் வருவாயின் இறுதி நிலவரம், டிவி – ஓடிடி ரைட்ஸ் உள்ளிட்ட வருவாய்களைக் கணக்கில் கொண்டால், ‘விடாமுயற்சி’ வெற்றிப் படமா என்பது மதிப்பிடப்படும். பெரிதாக லாபம் இல்லை என்றாலும், பெரும் நஷ்டத்துக்கு இழுத்துச் செல்லும் படமாக இது இருக்காது என்று திரை வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

முதல்வர் மருந்தகம் : தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்ய 840 பேருக்கு உரிமம்

முதல்வர் மருந்தகம் : தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்ய 840 பேருக்கு உரிமம்

Muthalvar Marunthagam: License to 840 people to sell generic drugs in Tamil Nadu

  • முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்.

  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 லட்சதுக்கு மருந்துகள் வழங்கப்படும்.

சென்னை, பிப். 12

தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு இதுவரை 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், மூலப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்று கொள்ளப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஆந்திராவில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதித்து ‘ரெட் அலர்ட்’

இதுவரை நேரடியாக விண்ணப்பித்தவர்களில் 340 பேருக்கும், கூட்டுறவுத் துறை மூலமாக விண்ணப்பித்தவர்களில் 500 பேருக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் இருந்தால், அதற்கான சான்றிதழ்களாக சொத்துவரி ரசீது அல்லது குடிநீர்வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது சமர்ப்பிக்க வேண்டும். வாடகை இடமாக இருந்தால், இடத்துக்கான உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

Muthalvar Marunthagam: License to 840 people to sell generic drugs in Tamil Nadu
Muthalvar Marunthagam: License to 840 people to sell generic drugs in Tamil Nadu

முதல்வர் மருந்தகம் அமைக்கும், தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்து தரப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 லட்சதுக்கு மருந்துகள் வழங்கப்படும். இவைதவிர விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க உள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ஆந்திராவில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதித்து ‘ரெட் அலர்ட்’

ஆந்திராவில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதித்து ‘ரெட் அலர்ட்’

‘Red Alert’ banning sale of farm chickens in Andhra Pradesh

  • வெளிநாட்டு பறவைகள் கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரியில் நம் நாடுகளுக்கு இனப்பெருக்கத்திற்காக வந்தபோது, அதன் மலக்கழிவுகள் தண்ணீரில் கலந்துள்ளன.

  • கோழி முட்டையை சுமார் 100 டிகிரி வெப்பத்தில் சமைப்பதால் அவற்றால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது எனவும் கால்நடை துறை அதிகாரிகள் விளக்கம்

கோதாவரி, பிப்.12

ஆந்திர மாநிலத்தில் இரு கோதாவரி மாவட்டங்களிலும் சுமார் 5 லட்சம் கோழிகள் இறந்து போனதற்கு பறவை காய்ச்சலே காரணம் என மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதனால் கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதித்து ‘ரெட் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திராவில் கறிக்கோழியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் திடீரென 4 லட்சம் பண்ணை கோழிகள் இறந்து போயின. அதன் பிறகு மேலும் ஒரு லட்சம் பண்ணை கோழிகளும் இறந்தன. இதனால், பண்ணை வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அச்சம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இவ்விரண்டு மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி, இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து, அவற்றை போபால் மற்றும் விஜயவாடாவில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதன் அறிக்கை நேற்று வந்தது. அதில், பாதிக்கப்பட்ட பண்ணை கோழிகள் அனைத்தும் பறவை காய்ச்சலால் (எச்-5-என் – 1) இறந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ், வெளிநாட்டு பறவைகள் கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரியில் நம் நாடுகளுக்கு இனப்பெருக்கத்திற்காக வந்தபோது, அதன் மலக்கழிவுகள் தண்ணீரில் கலந்துள்ளன. அந்த தண்ணீர் இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள பண்ணை கோழிகளுக்கு கொடுத்ததால், அவைகளுக்கு பறவை காய்ச்சல் வந்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு : ரூ.7,375 கோடி புதிய முதலீடு

இதன் காரணமாக இவ்விரு மாவட்டங்கள் மட்டும் பண்ணை கோழிகள் விற்பனை தடை செய்யப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது மற்ற மாவட்டங்களுக்கு பரவவில்லை என்பதால் மக்கள் பீதி அடைய தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது.

கோழி முட்டையை சுமார் 100 டிகிரி வெப்பத்தில் சமைப்பதால் அவற்றால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது எனவும் கால்நடை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த பறவை காய்ச்சல் பீதியால் ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக இதர மாவட்டங்களில் பண்ணை கோழிக்கறி கிலோ ரூ.95-க்கு வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்