Wednesday, December 18, 2024

பிளஸ் 2 துணை தேர்வு : ஜுன் 24-ம் தேதி தொடக்கம் – அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு 

 

பிளஸ் 2 துணை தேர்வு : ஜுன் 24-ம் தேதி தொடக்கம் – அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு

Plus 2 Supplementary Exam : Commencement on 24th June – Notification by Director of Government Examinations

  • தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார்

  • தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்திருந்தது

சென்னை, ஜுன். 03

பிளஸ் 2 துணை தேர்வு ஜுன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி முடிவடைகிறது. அதேபோல், பிளஸ் 1 துணை தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்.1-ல் தொடங்கி 13-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதையும் படியுங்கள் : முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் – தலைமை தேர்தல் ஆணையர் உறுதி 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்திருந்தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றிருந்தனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றிருந்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles