-
. சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒருமுனையில் நங்கூரம் போல் நின்று சதம் அடித்த கேப்டன்
-
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக சதம் அடித்த வீரர்கள் பட்டியல் 1. தில்சன் (இலங்கை) 2. ஃபாஃப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா) 3. பாபர் அசாம் (பாகிஸ்தான்) 4. ரோகித் சர்மா (இந்தியா).
நாக்பூர் , பிப் 10
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட் ,அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.
அதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதையும் படியுங்கள் : சாகுந்தலம் சரித்திர கதையில் நடிகை சமந்தா- ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியீடு
அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது. ரோகித் 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒருமுனையில் நங்கூரம் போல் நின்ற கேப்டன் சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் கேப்டனாக விராட் கோலி, டோனியால் செய்ய முடியாத சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக 4 வீரராக ரோகித் உள்ளார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக சதம் அடித்த வீரர்கள் பட்டியல் 1. தில்சன் (இலங்கை) 2. ஃபாஃப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா) 3. பாபர் அசாம் (பாகிஸ்தான்) 4. ரோகித் சர்மா (இந்தியா).
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.