-
சாகுந்தலம்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு
சென்னை, பிப்.10
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் பேனா-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘சாகுந்தலம்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்