Home News புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு

0
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு
Students can apply to get Rs.1000 per month under the Innovation Girl Scheme - Ramanathapuram District Collector Notification

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு

Students can apply to get Rs.1000 per month under the Innovation Girl Scheme – Ramanathapuram District Collector Notification

  • புதுமைப்பெண் திட்டத்தின் மூலம், யாக யுஜி பட்டப்படிப்பு/டிப்ளமோ/ஐடிஐ/ வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி

  • இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலமாக 6-ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும்

ராமநாதபுரம், ஜூன். 01

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு : பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு படிக்க, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், நிதி உதவியாக யுஜி பட்டப்படிப்பு/டிப்ளமோ/ஐடிஐ/ வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இது தொடர்பாக தமிழக வெளியிட்ட விரிவான அறிவிப்பில், “தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, இந்த மாணவிகளின் கல்வி தடைபடாமல், அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

உதவி தொகை பெற தகுதி

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் மூலம் 1000 உதவி தொகை பெற யாருக்கெல்லாம் தகுதி உள்ளது? 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் அவசியம். அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலும்.

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலமாக 6-ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும். கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ITI, இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த படிப்புகள் ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியருக்கு, அப்படிப்புக்கான உதவித்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.

திட்டத்தின் சிறப்பம்சம்

ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும். அஞ்சல்வழிக் கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது. வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.

ஏற்கெனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும், மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கென புதிய மறுசீரமைக்கப்பட்ட வலைதளம் (https://www.pudhumaipenn.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரைக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திட இயலும்.

வழிகாட்டுக் குழு மற்றும் கண்காணிப்புக் குழு:

இத்திட்டம் தொடர்பான அனைத்து நிலைகளிலும் கண்காணித்திட மாநில அளவில் அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்களைக் கொண்டு வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆண்டிற்கு இரண்டு முறை கூடும். மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவானது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் அவர்களின் தலைமையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து நிலைகளிலும் கண்காணித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்து, மாநில அளவிலான வழிகாட்டுதல் (§c குழுவிற்கு அறிக்கையினை அளித்தல். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமயில் மாவட்ட சமூக நல அலுவலரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது மாதந்தோடும் கூட்டப்பட்டு இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்” முதலமைச்சர் ஸ்டாலினால் 05.09.2022 அன்று முதல் கட்டமாகவும், 08.02.2023 அன்று 2-ஆம் கட்டமாகவும் துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது” இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு படிக்க, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்