Wednesday, December 18, 2024

விவசாயிகள் விரோத பா.ஜ.க.வை தோற்கடிக்க திமுக.விற்கு ஆதரவு : எஸ். ஆர்.பாரதியிடம் தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேல் முருகன் கடிதம்

 

விவசாயிகள் விரோத பா.ஜ.க வை தோற்கடிக்க திமுக விற்கு ஆதரவு ; எஸ். ஆர். பாரதியிடம் தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேல் முருகன் கடிதம்

Support DMK to defeat anti-farmer BJP; TAMILAGA UZHAVAR UZHAIPALAR KATCHI President Vel Murugan letter to S. R. Bharthy

  • தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ந் தேதி வாக்கு பதிவும், ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

  •  தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேல்முருகன், அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் எஸ்.ஆர். பாரதியிடம் ஆதரவு கடிதம் கொடுத்தார்.

சென்னை, மார்ச். 25

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி, ஜூன் 01-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ந் தேதி வாக்கு பதிவும், ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் எஸ்.ஆர்.பாரதியை, தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் வேல்முருகன், தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து திமுகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார். அதற்கான கடிதத்தை எஸ்.ஆர்.பாரதியிடம், அவர் கொடுத்தார்.

அப்போது தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி மாநில இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நெப்போலியன், நிலக்கோட்டை வட்டார தலைவர் வேலுச்சாமி, வட்டாரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, காளிப்பட்டி வட்டார தலைவர் ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படியுங்கள் : ‘பாரத மாதா கி ஜே’ முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

பின்னர் புதிய பரிமாணம் செய்தியாளருக்கு, தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் வேல்முருகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, விவசாயிகளை கடுமையாக வஞ்சித்து, கொலை வெறித் தாண்டவம் ஆடிவருகிறது. தொடர்ந்து மக்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருகிறது. பாஜக.வின் கொடுங்கோல் ஆட்சியை ஒழித்து இந்தியா கூட்டணியின் நல்லாட்சி மலர, வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பது என்று ஏக மனதாக தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் எஸ்.ஆர்.பாரதியை, சந்தித்து தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற நானும், எனது கட்சி நிர்வாகிகளும், விவசாயிகளும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்போம். நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.

இவ்வாறு தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் வேல்முருகன் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles