
மதுரையில் தமிழக முதலமைச்சரின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சிய கண்காட்சி
(70 years history exhibition of Tamil Nadu Chief Minister in Madurai)
-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் பொது வாழ்க்கைப் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி கடந்த 19 தேதி தொடங்கி வரும் 28 ன் தேதி வரை நடை பெறும்.
-
சிறப்பு புகைப்பட கண்காட்சியை மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சென்று பார்வையிட பள்ளித் நிர்வாகி முகமது இதிரிஸ், தலைமையாசிரியர் ஷேக் நபி ஆகியோர் ஏற்பாடு
மதுரை, மார்ச். 23
மதுரை நத்தம் சாலை மேனேந்தல் யாதவா ஆண்கள் கல்லூரி அருகே மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் பொது வாழ்க்கைப் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 19 தேதி தொடங்கி வரும் 28 ன் தேதி வரை நடை பெறு ம் இந்த கண்காட்சியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நடிகர் வடிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு புகைப்பட கண்காட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட, இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள்,
இதையும் படியுங்கள் : அமெரிக்க வணிக மற்றும் சுற்றுலா விசாவில் வேலைக்கும் விண்ணப்பிக்கலாம்
குளிரூட்டப்பட்ட பிரமாண்ட அரங்கு
70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்கள், தத்ரூப காட்சி வடிவமைப்புகள் என குளிரூட்டப்பட்ட அரங்கில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சென்று பார்வையிட பள்ளித் நிர்வாகி முகமது இதிரிஸ், தலைமையாசிரியர் ஷேக் நபி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி பள்ளி மாணவர்களை, பள்ளி பேருந்துகளில் கண்காட்சி அரங்குக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் அடைக்கப்பட்டிருந்த கொடுஞ்சிறையின் மாதிரி வடிவம், பேனா சிலை மாதிரி வடிவம் போன்ற பல்வேறு அரங்குகள் மற்றும் புகைப்படங்களை பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி, மாணவர்களுக்கு காண்பித்து விளக்கினார்.
வக்பு வாரியக் கல்லூரி ஆட்சி மன்ற உறுப்பினர் அப்துல்லா, 8வது வட்டச் செயலாளர் மணிராஜ், கண்ணனேந்தல் மற்றும் ஆனையூர் பகுதி செயலாளர்கள் கெளரி சங்கர், மருது பாண்டியன், ஒன்றிய பெருந்தலைவர் ராகவன், மகாலிங்கம், வர்த்தக அணி பகுதி அமைப்பாளர் சம்சுதீன், வட்டத் துணைச் செயலாளர் ஜாகிர் உசேன், உதவித்தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லா மற்றும் ஆசிரிய அலுவலர்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.
தமிழக முதலமைச்சரின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சிய கண்காட்சியினை கண்டுகளிக்க ஏற்பாடு செய்த வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.