
தமிழ்நாடு வக்ஃபு வாரிய புதிய தலைவரானார் நவாஸ் கனி எம்.பி.: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து
Nawaz Gani MP becomes new chairman of Tamilnadu Wakfu Board: Meets and congratulates Chief Minister M.K.Stalin
ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராக தேர்வு
புதிய தலைவர் நவாஸ் கனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
சென்னை, செப். 19
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி, வக்ஃபு வாரிய புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ., பாத்திமா முஷப்பர் உள்ளிட்டோர் இருந்தனர்.
தொடர்ந்து சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானையம் நவாஸ் கனி சந்திதார். இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை பேரில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு புதிய தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ் கனி கூறுகையில், “வக்ஃபு வாரிய அலுவலகத்தில் இன்று வக்ஃபு வாரிய சிறப்பு கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முன்னிலையில் வக்ஃபு வாரிய தலைவராக என்னை தேர்ந்தெடுத்தார்கள். முக்கிய கால கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : இந்திய வணிகர்கள், தொழில் வல்லுநர்கள் பதிவு செய்துகொள்ள வெப்சைட் உருவாக்கப்படும் – சவூதி அரேபிய புதிய இந்திய துணை தூதர் உறுதி
தமிழக முதலமைச்சருக்கும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கும் என் இதயபூர்வ நன்றி, பரிந்துரை செய்த தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கும் நன்றி. வக்ஃபு வாரியம் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறுப்பினர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம்.
வக்ஃபு வாரிய நிலங்களை பாதுகாப்பது, இருக்கும் நிலங்களை முறையாக பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவோம். ஏற்கனவே இருந்த நடைமுறையில் எளிதாக சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் முறையாக அடையாளம் காணப்படும் என்று வக்ஃபு வாரிய தலைவர் நவாஸ் கனி கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்