Home செய்திகள் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

0
ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

Teachers’ salaries for the month of September will be released today – School Education Minister Anbil Mahesh

  • பள்ளி கல்வித் துறை சார்பில் மக்களவை உறுப்பினர்களுடன் டெல்லிக்குச் சென்று மத்திய கல்வி அமைச்சரிடம் கோரிக்கை

  • 32,298 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் வழங்காததால் அவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறி

திருப்பத்தூர், அக். 09

ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் : மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை விடுவிக்காத நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எஸ்எஸ்ஏ என்கிற ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்காக கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் நடப்பு கல்வி ஆண்டுக்கு ரூ.3,585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இத்திட்டத்தில் மத்திய அரசின் சார்பில் 60 சதவீத தொகை அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத தொடக்கத்தில் இதற்கான முதல் தவணை பெறப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை அந்த தொகை விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினார். இருப்பினும் நிதியை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறையும் கோரிக்கை விடுத்துவிட்டார். நான் நேரடியாக பள்ளி கல்வித் துறை சார்பில் மக்களவை உறுப்பினர்களுடன் டெல்லிக்குச் சென்று மத்திய கல்வி அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், இதுவரை நான்கு தவணையாக வரவேண்டிய நிதி வரவில்லை.

இதைத்தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் நிதி வராததால் 32,298 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் வழங்காததால் அவர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாக கூடிய நிலைமை உள்ளது.

முதல் தவணை என்று சொல்லும்போது ரூ. 573 கோடி உடனடியாக வழங்க வேண்டும். கடந்த ஆண்டு 4வது தவணையாக ரூ.249 கோடி பாக்கியாக வைத்துள்ளனர். அதனையும் மத்திய அரசு சேர்த்து வழங்க வேண்டும். இதுகுறித்து துணை முதல்வரிடம் எடுத்து கூறியுள்ளேன். இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் போடப்பட்டுள்ளது.

இது நம்முடைய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதால் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும். செப்டம்பர் 1 ஆம் தேதி, இரண்டாம் தேதி சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இதனை நம்முடைய தமிழக அரசு நிதியில் இருந்து எப்படி பங்கீட்டு சம்பளத்தை வழங்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

திராவிட மாடல் அரசு ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது. தமிழக அரசு அவர்களை என்றும் கைவிடாது. அதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபடுத்திக் கொள்வோம் என்று முதல்வரின் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஒவ்வொரு அமைச்சரும் தங்களது துறைகளில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வரின் உத்தரவை ஏற்று, ஒவ்வொரு தொகுதியாக சென்று 219 தொகுதியாக நிறைவு செய்து இருக்கின்றோம் என்று கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்