
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு | வனக்காப்பாளர் நீதிமன்றத்தில் சரண்
vachathi sexual abuse case | forest conservator surrender in court
-
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி வழக்கு தொடர்பாக தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
-
தண்டனை பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை உறுதி செய்து 6 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு
தருமபுரி, நவ. 22
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு | வனக்காப்பாளர் நீதிமன்றத்தில் சரண் ;தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முதன்மை வனக்காப்பாளர் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி வழக்கு தொடர்பாக தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு வனத்துறை (ஐஎப்எஸ்) அதிகாரிகள் உட்பட வனத்துறை ஊழியர்கள் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது, மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியுமான எம். பாத்திமா பீவி காலமானார்
இதனை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை உறுதி செய்து 6 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முதன்மை வன காப்பாளர் பாலாஜி (வயது 66 )நேற்று தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு ) மோனிகா முன்னிலையில் சரணடைந்தார், அவரை வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.