உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடத்தை பிடிக்க வி.ஐ.டி முயற்சி
vit strives to rank among the top 200 universities in the world
-
இங்கு எண்ணிக்கை மட்டும் அல்ல கல்வியில் தரமும் இருக்கிறது.
-
அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்தில் இதுவரை ரூ.8.5 கோடி அளவில் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை
வேலூர், ஏப்.11
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தினவிழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இங்கே விருது வாங்கியவர்களில் மாணவிகள் தான் அதிகமாக இருந்தனர். இது பாராட்டப்பட வேண்டியது.
80 ஆயிரம் மாணவ, மாணவிகள்
மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் பங்கெடுக்க வேண்டும். இது உங்கள் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உள்ள 4 வளாகங்களிலும் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு எண்ணிக்கை மட்டும் அல்ல கல்வியில் தரமும் இருக்கிறது. அதனால் தான் இந்திய அளவிலும், உலகளவிலும் சிறந்து விளங்குகிறோம்.
இதையும் படியுங்கள் : கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் ; மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
முதல் 200 இடத்தை பிடிக்க வி.ஐ.டி முயற்சி
உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடத்தை பிடிக்க வி.ஐ.டி முயற்சி மேற்கொண்டுள்ளது. வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கடந்த ஆண்டு 970 கம்பெனிகள் வந்தது. இந்த ஆண்டு இதுவரை 820 கம்பெனிகள் மூலம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாணவிகளுக்கு உதவித்தொகை
அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்தில் இதுவரை ரூ.8.5 கோடி அளவில் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கியிருக்கிறது. இதில் 50 சதவீதம் வி.ஐ.டி பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது.
இவ்வாறு வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.