
எனது கணவரை கைது செய்தது சட்ட விரோதம் ; ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி
Wife of TN Minister V Senthil Balaji files Habeas Corpus plea before Madras High Court against Balaji’s arrest by ED
-
கைது செய்யப்படும் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி
-
சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை என அமலாக்கத்துறையினர் மீது குற்றசாட்டு
சென்னை, ஜூன் 14
தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையின் முன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: நீட் தேர்வு : தமிழ் நாட்டை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம்
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி, அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. கைது தொடர்பாக குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை என அமலாக்கத்துறையினர் மீது குற்றசாட்டுகளை கூறியுள்ளார். மேலும் மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.