World’s Greatest Scientists List: Places 3 Korean Tamilians
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: 3 கொரியா தமிழர்களுக்கு இடம்
கலிபோர்னியா, அக். 09
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியல் : அமெரிக்காவின் ஸ்டாம்ஃபர்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிடுகிறது.
2022-23 ஆண்டுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த பல ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களில் தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழர்கள் மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர்.
பெரும்பாலும் வேதியியல், நானோ அறிவியல், மெக்கனிக்கல் இன்ஜினியரிங், மெடிரியல் சைன்ஸ், உயிர் தகவலியல், அட்டோமேஷன், எனர்ஜி, புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் தலைசிறந்த நிபுணர்கள் மட்டுமே இப்பட்டியில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் ஆரோக்கியராஜ் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட லொயோலா கல்லூரியிலும், மற்ற இருவரும் முறையே பாரதிதாசன், பாரதியார் பல்கலைக்கழகங்களிலும் படித்து பட்டம் பெற்றவர்கள்.
இதையும் படியுங்கள் : தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் சட்டசபை தேர்தல் தேதி வெளியீடு
தென்கொரியாவின் செஜோங் பல்கலைக்கழகம் உலக அளவில் 251 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, அந்தப் பல்கலைக்கழகம் 3.8 ஸ்டார்களைப் பெற்றுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.