
இந்தியாவில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் | மக்களவையில் ராகுல் காந்தி அனல் பேச்சு
you have killed bharat maatha | hot speech by raghul gandhi in lok sabha
-
மக்களவையில் இன்று மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2 வது நாள் விவாதம்
-
ஸ்மிருதி இரானிக்கு ட்விட்டரில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன் ஆலோசனை
சென்னை, ஆக. 09
இந்தியாவில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள்: மக்களவையில் இன்று மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2 வது நாள் விவாதம் நடைபெற்றது. நேற்று பேசாத ராகுல் காந்தி, இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எழுந்து பேசினார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவர் மிகவும் ஆவேசமாக உரையாற்றினார்.

இந்தியாவில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள்
நான் மணிப்பூருக்கு சென்றேன். நமது பிரதமர் இன்று வரை மணிப்பூருக்கு செல்லவில்லை. அவர்களை பொருத்தவரை மணிப்பூர் இந்தியாவில் இல்லை. அவர்கள் மணிப்பூரை இரு துண்டாக உடைத்து உள்ளார்கள். மணிப்பூர் இன்னும் அமைதியாகவில்லை என்பதே எதார்த்தம். மணிப்பூரில் அவர்கள் இந்தியாவை கொன்றுவிட்டார்கள். நீங்கள் இந்தியாவின் பாதுகாவலர் இல்லை. இந்தியாவை கொன்றவர்கள் நீங்கள்.
மக்களவையில் பறக்கும் முத்தம்
மணிப்பூரில் இந்தியாவின் குரலை கொன்று விட்டீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள். பாரதம் என்பது என்னுடைய தாய். எனது தாயை நீங்கள் கொலை செய்து உள்ளீர்கள். முதலில் மணிப்பூர். தற்போது அரியானா. நீங்கள் நாடு முழுவதும் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தீர்கள். தற்போது அது தீப்பிடித்து எரிகிறது.” என்றார். ராகுல் காந்தி பேசி முடித்தவுடன் மக்களவையில் பறக்கும் முத்தம் கொடுத்து அங்கிருந்து சென்றார்.
இதையும் படியுங்கள் : கல்வியிலும் திராவிட மாடல் | முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் அளிக்க முடியாமல் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் திணறினர். அவரை பேச விடாமல் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதனிடையே ராகுல் காந்தி பேசி அமரும்போது பறக்கும் முத்தம் கொடுத்ததை பா ஜ க எம்பி க்கள் பிரச்சனை ஆக்கினர். இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் இதனை கண்டித்து உள்ளார். “பெண்கள் மீது வெறுப்பு கொண்ட நபரால்தான் இப்படி செய்ய முடியும். இதுபோன்ற கண்ணியம் குறைவான செயலை நான் இதுவரை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை” என்றார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார்
அவரது இந்த நடவடிக்கை அநாகரிகமானது என மத்திய அமைச்சர் சோபா புகாரளித்து உள்ளார். ஸ்மிருதி இரானி தலைமையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தியின் இந்த செயல் குறித்து புகாரளித்து உள்ளார்கள் இந்த நிலையில் ஸ்மிருதி இரானிக்கு ட்விட்டரில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன் ஆலோசனை வழங்கி உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன் ஆலோசனை
அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, “தயவு செய்து பறக்கும் முத்தத்தை பாலியலில் சேர்க்காதீர்கள் மேடம்! நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு பறக்கும் முத்தம் கொடுப்போம். வயதில் மூத்தவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுப்போம். அனைத்து பாலினத்தை சேர்ந்த நண்பர்களுக்கும் முத்தம் கொடுப்போம். எங்கள் சகோதரர்கள், சகோதரிகள், கணவன், மனைவி என அனைவருக்கும் பறக்கும் முத்தம் கொடுப்போம். எங்களின் உணர்வுகள் தூய்மையானவை. வளருங்கள். முடிந்தால் வேறு ஏதாவது தவறை கண்டுபிடியுங்கள்.” என்று தெரிவித்து உள்ளார்.

இதனிடையே பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி செய்தியாளர்களிடம் பேசும் போது, மக்களவையில் ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததை தான் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.