டெல்லியில் இண்டியா கூட்டணி போராட்டாத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவு

டெல்லியில் இண்டியா கூட்டணி போராட்டாத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவு
Cockroach Janata Party (CJP) Extends Support to INDIA Bloc Protest in Delhi

  • நவம்பர் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி போராட்டம்

  • வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை (எஸ்ஐஆர்) மறுஆய்வு செய்வதற்கும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகவும் இந்தப் போராட்டம்

புதுடெல்லி, அக். 30

டெல்லியில் இண்டியா கூட்டணி போராட்டாத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவு: டெல்லியில் இண்டியா கூட்டணி போராட்டாத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவளித்துள்ளது. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை எதிர்க்கும் இந்த போராட்டம் குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி போராட்டம் நடத்துகிறது. வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை (எஸ்ஐஆர்) மறுஆய்வு செய்வதற்கும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இப்போராட்டத்திற்கு, சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே ஆதரவை தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது கட்சியின் தலைவர்கள் இண்டியா கூட்டணித் தலைவர்களுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்வார்களா என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை.
முன்னதாக, வேலைவாய்ப்புத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டம் நடத்தியது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற எம்பிக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இண்டியா கூட்டணியின் போராட்டம் மீது தனது எக்ஸ் தளத்தில் சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே பதிவிட்டுள்ளார்.

அதில், ஞானு (ஞானேஷ்குமார்) பதவி விலக வேண்டும். எங்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, இண்டியா கூட்டணியின் ‘நவம்பர் 1’ பேரணிக்கு ஆதரவை வழங்குகிறது. தேசமே முதன்மையானது. ‘ஜெய் பீம் ஜெய் ஹிந்த்’

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நம்பிக்கையை ஞானேஷ்குமார் இழந்துவிட்டார். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும் சுதந்திரமான தன்மையையும் மீட்டெடுக்க, அவர் பதவி விலகுவது அவசியம்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles