பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மீண்டும் ஒத்தி வைப்பு
tn graduate teachers transfer counsilling date again changed
- ஒன்றியத்துக்குள் பணியிட மாறுதல் பெற்று செல்ல விரும்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு
- பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிப்பு
சென்னை, மே .21
தமிழ்நாடு முழுவதும் நாளை (22-ந்தேதி) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒன்றியத்துக்குள் பணியிட மாறுதல் பெற்று செல்ல விரும்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது.
பணியிட மாறுதல் கலந்தாய்வு
இந்நிலையில் நாளை நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : வேலை வாய்ப்புத்திறன்கள் பாடத்தில் மதுரை கே. புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை
மீண்டும் கலந்தாய்வு ஒத்தி வைப்பு
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.