Home செய்திகள் இந்திய ராணுவத்துக்காக அமெரிக்கா அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணி தீவிரம்

இந்திய ராணுவத்துக்காக அமெரிக்கா அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணி தீவிரம்

0
இந்திய ராணுவத்துக்காக அமெரிக்கா அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
The work of making Apache helicopters for the Indian Army is in full swing

இந்திய ராணுவத்துக்காக அமெரிக்கா அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணி தீவிரம்

The work of making Apache helicopters for the Indian Army is in full swing

  • இந்திய ராணுவத்துக்காக ரூ.5,691 கோடியில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க 2020-ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

  • அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் மாதத்துக்குள் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

புது டெல்லி, நவ. 06

அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்க ராணுவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் ஆதரவு நாடுகளான இங்கிலாந்து, இஸ்ரேல் உள்பட 18 நாடுகள் ராணுவத்தில் இந்த வகை ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதையும் படியுங்கள் : திமுகவினர் வாய்க்கு பூட்டுப்போடுங்கள்| உதயநிதியிடம் உளவுத்துறை எச்சரிக்கை

The work of making Apache helicopters for the Indian Army is in full swing
The work of making Apache helicopters for the Indian Army is in full swing

கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய விமான படைக்காக 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவை தற்போது விமான படையில் சேவையாற்றி வருகின்றன. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்துக்காக ரூ.5,691 கோடியில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க 2020-ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் மெசா பகுதியில் உள்ள போயிங் ஆலையில் இந்திய ராணுவத்துக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் மாதத்துக்குள் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.