கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு போக்குவரத்து துண்டிப்பு
Landslides on Kodaikanal Hill Road Disrupt Traffic
-
ஆங்காங்கே மரங்களும் சாலையில் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் சாலை அடித்து செல்லப்பட்டுள்ளதால், பிளவு ஏற்பட்டு பள்ளம் உருவாகியுள்ளது
-
இதனால் அடுக்கம் பகுதியில் உள்ள மலைக்கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
கொடைக்கானல், அக். 24
கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு போக்குவரத்து துண்டிப்பு:
கனமழை காரணமாக கொடைக்கானல் அருகே அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் பல இடங்களில் மண் சரிவும், சாலை அடித்தும் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் அடிக்கடி மரங்கள் முறிந்து விழுவதும், பாறைகள் உருண்டு விழுவதும் தொடர்கிறது. கொடைக்கானலுக்கு செல்ல வத்தலக்குண்டு, பழநி வழியாக வழக்கமான பொதுப் போக்குவரத்து நடைபெறுகிறது. மாற்று வழிப்பாதையான கொடைக்கானல், கொடைக்கானல் – அடுக்கம் – பெரியகுளம் சாலையில் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை.
இங்குள்ள கிராமப்பகுதியில் வசிப்பவர்கள் இருசக்கர வாகனம், விளைபொருட்களை சரக்கு வாகனங்களில் கொண்டு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இச்சாலையில் மழையின் போது அடிக்கடி மண் சரிவு ஏற்படுவது தொடர்கிறது.
இந்நிலையில் நேற்று (அக்.23) பெய்த கனமழை காரணமாக அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.
ஆங்காங்கே மரங்களும் சாலையில் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் சாலை அடித்து செல்லப்பட்டுள்ளதால், பிளவு ஏற்பட்டு பள்ளம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக
அடுக்கம் – பெரியகுளம் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதனால் அடுக்கம் பகுதியில் உள்ள மலைக்கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடங்கள், சேதமடைந்த சாலையை சரிசெய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.






