பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு

Para Asian Games: Chief Minister Vijay announces a cash incentive of Rs. 75 lakh for gold medal-winning badminton player Naveen Sivakumar

  • வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் நித்ய ஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சமும், வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு ரூ.30 லட்சமும் உயரிய ஊக்கத் தொகை

சென்னை, அக். 23

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் எஸ்எல்4 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் நவீன் சிவகுமார், பெண்கள் ஒற்றையர் எஸ்யூ5 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை துளசிமதி முருகேசன், பெண்கள் ஒற்றையர் எஸ்ஹெச்6 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ, டேபிள் டென்னிஸ் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் எம்டி4 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டொரப் மதன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகத்தான சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சமும், வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் நித்ய ஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சமும், வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு ரூ.30 லட்சமும் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இந்தச் சாதனைகளை படைத்துள்ளதோடு, தமிழ்நாட்டின் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளனர்.

இந்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து உயர்ந்த இலக்குகளை நோக்கிப் பயணித்து, சர்வதேச அரங்கில் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles