‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை அறிவித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம் ; 25% ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை அறிவித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம் ; 25% ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

Microsoft Announces ‘Voluntary Retirement’ Scheme; 25% of Workforce at Risk of Job Loss

  • மனிதர்கள் இனி பூமியில் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினம் அல்ல

  • ஏஐ பயன்பாட்டுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் கூடுதல் வரி விதிக்க பரிந்துரை

சென்னை, அக். 28

‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை அறிவித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம் ; 25% ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித வேலையை பறிப்பது பற்றி பில்கேட்ஸ் கவலை தெரிவித்த நிலையில், 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் இரு தினங்களுக்கு முன்பு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “செயற்கை நுண்ணறிவு (ஏஐ) யுகம் ஒரு பரிணாம நிகழ்வு.

இதில் மனிதர்கள் இனி பூமியில் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினம் அல்ல. ஏசி அறை பணி தொடங்கி, தொழிற்சாலை பணி மற்றும் உடல் உழைப்புப் பணிகள் வரை அனைத்தையும் ஏஐ தன்வசம் எடுத்துக் கொள்ளும்.

குறிப்பாக, ‘ரோபோவை வேலைக்கு அமர்த்துங்கள், மனிதனை பணிநீக்கம் செய்துவிட்டு திரும்பிப் பார்க்காதீர்கள்’ என்ற கொள்கையை கடைபிடிக்கிறார்கள்.
இது அரசுகளுக்கு ஒரு பெரிய சவாலாக அமையும். ரோபோக்கள் வேலை செய்யத் தொடங்குவதால் மனிதர்களின் வேலை குறைந்து, அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயும் குறையும்.

இதற்கு தீர்வாக, ஏஐ பயன்பாட்டுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் கூடுதல் வரி விதிக்க வேண்டும்” என்று அவர் பரிந்துரை செய்துள்ளார்.

இவருடையே பேட்டி வெளியான மறுநாளே, மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுமார் 60,000 ஊழியர்களுக்கு ‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 25% ஆகும்.

லெவல் 70 மற்றும் அதற்கு கீழுள்ள பணியாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். இதை ஏற்கும் ஊழியர்களுக்கு, அவர்களின் லெவலுக்கு ஏற்ப பணிநீக்க ஈட்டுத்தொகை வழங்கப்படுகிறது.

ஏஐ முதலீடுகளுக்காகவும், நிறுவனத்தின் செலவைக் குறைப்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பில் கேட்ஸின் எச்சரிக்கையும், மைக்ரோசாப்டின் இந்த ஆட்குறைப்பு அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகி உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப உழைப்பாளர் சமூகத்திற்கு இது எதிர்காலத்தில் ஒரு முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.

பில் கேட்ஸ் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ நிர்வாகப் பதவியோ அல்லது இயக்குநர் வாரியப் பதவியோ வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles