தமிழக பள்ளிவாசல்களை தகர்க ஆர்.எஸ்.எஸ் திட்டம் : தாம்பரத்தை அடுத்து ஜெய் நகர் பள்ளிவாசலில் மர்மநபர் தாக்குதல்

தமிழக பள்ளிவாசல்களை தகர்க ஆர்.எஸ்.எஸ் திட்டம் : தாம்பரத்தை அடுத்து ஜெய் நகர் பள்ளிவாசலில் மர்மநபர் தாக்குதல்

RSS plan to demolish mosques in Tamil Nadu: After the incident in Tambaram, a mosque in Jai Nagar comes under attack by an unidentified individual.

  • தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் கே. நவாஸ்கனி MP, கோயம்பேடு துணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்

சென்னை,அக். 27

தமிழக பள்ளிவாசல்களை தகர்க ஆர்.எஸ்.எஸ் திட்டம் : தாம்பரத்தை அடுத்து ஜெய் நகர் பள்ளிவாசலில் மர்மநபர் தாக்குதல்: சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள் புகுந்த நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி நிர்வாகியும், அண்ணாநகர் அபுபக்கர் சித்திக் அவர்களும், IUML மாநில செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக்முஹம்மது அலி அவர்களிடம் தகவல் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, IUML பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் அவர்களுக்கும், மாநில துணைத்தலைவரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான கே. நவாஸ்கனி MP அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாகக் களத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மேற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் H முஹம்மது கடாபி, S.செய்யது ஜியாவுதீன், அண்ணாநகர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட IUML நிர்வாகிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் கே. நவாஸ்கனி MP, பள்ளிவாசலில் நேரில் ஆய்வு – காவல்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான அண்ணன் கே. நவாஸ்கனி MP அவர்கள் ஜெய்நகர் பள்ளிவாசலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, ஜமாத்தார்களிடம் சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர், கோயம்பேடு துணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டிருந்தாலும், இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, அவரின் பின்னணி மற்றும் இச்சம்பவத்திற்குப் பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா என்பதையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

RSS தொடர்பு உள்ளதா? காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் – வழக்கறிஞர் புழல் ஷேக்முஹம்மதுஅலி கோரிக்கை!
இதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக்முஹம்மதுஅலி அவர்கள் கூறியதாவது:
“நேற்றைய தினம் RSS பேரணி நடைபெற்றதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், இச்சம்பவத்திற்கும் RSS அமைப்புக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும். விசாரணையின் அடிப்படையிலேயே உண்மைகள் வெளிவர வேண்டும்.


தமிழகத்தில் பள்ளிவாசல்கள் கோயில்கள் தேவாலயாங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் முக்கியக் கடமையாகும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெறாமல் இருக்க, தமிழக அரசும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், காவல்துறையும் உளவுத்துறையும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.


இந்நிகழ்வின்போது மாவட்டச் செயலாளர் ஆதம்கான் மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் கனி உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்! குற்றத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles