தமிழறிஞர் செவாலியர் வி.ஜி. சந்தோசம், தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவருடன் சந்திப்பு

தமிழறிஞர் செவாலியர் வி.ஜி. சந்தோசம், தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவருடன் சந்திப்பு

Meeting between Tamil Scholar Chevalier V.G. Santhosam and the President of the South Korea Tamil Research Association

  • அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, தென் கொரியா என 205 நாடுகளில் திருவள்ளுவர் திருவுருவச் சிலைகளை நிறுவி வருகிறார்

  • வள்ளுவன் தந்த வாழ்வியலை ஆய்வு செய்து ஆய்வாளர்களையும், ஆய்வுகளையும் நடத்தி வரும் தென் கொரியா தமிழ் ஆய்வு அமைப்பின் தலைவர் முனைவர் பேராசிரியர் செ.ஆரோக்கியராஜை சந்தித்து, அவரது தமிழ் தொண்டாற்றை  பாராட்டி வாழ்த்தினார்

சியோல், நவ. 05
திருவள்ளுவர் புகழை உலகெங்கும் பரப்பிவரும் கலைமாமணி செவாலியர் வி.ஜி. சந்தோசம், தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவருடன் சந்திப்பு: அன்னை தமிழை இப்பூவுலகிற்கு தந்த பெரும் சொத்து திருவள்ளுவப் பெருமான். அவர் தந்த உலக பொதுமறை திருக்குறளையும், அதன் செழுமை மாறா தமிழ் இலக்கியத்தையும் உலகெங்கும் பரப்பி, பரவச் செய்து வரும் தமிழறிஞர் கலைமாமணி செவிலியர் வி.ஜி. சந்தோசம்.
உலகத் தமிழர்களை இணைக்கும் வகையில் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தை நிறுவி நடத்தி வரும் இவர், அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, தென் கொரியா என 205 நாடுகளில் திருவள்ளுவர் திருவுருவச் சிலைகளை நிறுவி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் கொரியா சென்ற செவிலியர் வி.ஜி. சந்தோசம், தலைநகர் சியோலில் வள்ளுவன் வாக்கான திருக்குறள் மாநாடு நடத்தி, வள்ளுவன் தந்த வாழ்வியலை ஆய்வு செய்து ஆய்வாளர்களையும், ஆய்வுகளையும் நடத்தி வரும் தென் கொரியா தமிழ் ஆய்வு அமைப்பின் தலைவர் முனைவர் பேராசிரியர் செ.ஆரோக்கியராஜை சந்தித்து, அவரது தமிழ் தொண்டாற்றை  பாராட்டி வாழ்த்தினார்.
சியோல் ஹோட்டல் சரவண பவன் வளாகத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பின்போது ஹோட்டல் சரவண பவன் மற்றும் சக்ரா இந்தியன் ரெஸ்டாரண்ட் தலைமைச் செயல் அதிகாரியும், தென் கொரியா தமிழ் ஆய்வு அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளருமான சாந்தி பிரின்ஸ் மற்றும் துணைத்தலைவர் கவிஞர் சகாயம் டைபீ உடனிருந்தனர்.
கடந்த ஆண்டு தென் கொரியாவின் செஜோங் பல்கலைக்கழகத்தில்  முதலாம் சர்வதேச திருக்குறள் மாநாட்டை கோலாகலமாக நடத்தி தமிழ் ஆய்வாளர்களை ஊக்குவித்த தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் செ.ஆரோக்கியராஜ் மற்றும் பொறுப்பாளர்களை செவிலியர் வி.ஜி. சந்தோசம் பாராட்டினார்.
தென் கொரியாவில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை மேம்படுத்துவதற்காக தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு  மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்பாடுகளை விளக்கிய முனைவர் செ.ஆரோக்கியராஜ், முதலாம் சர்வதேச திருக்குறள் மாநாட்டில் வெளியிடப்பட்ட திருக்குறள் கவிதைத் தொகுப்பு நூலை வி.ஜி. சந்தோசத்துக்கு வழங்கினார்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles