Home செய்திகள் பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடிக்கு ரெயில் இயக்கப்படவில்லை | தெற்கு ரெயில்வே

பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடிக்கு ரெயில் இயக்கப்படவில்லை | தெற்கு ரெயில்வே

0
பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடிக்கு ரெயில் இயக்கப்படவில்லை | தெற்கு ரெயில்வே

பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடிக்கு ரெயில் இயக்கப்படவில்லை | தெற்கு ரெயில்வே

Due to maintenance work Tuticorin train not running to Tuticorin | Southern Railway

  • ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் யார்டு பகுதியில் மீட்புப் பணி நடந்து வருகிறது. எனவே எழும்பூர்-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று மதுரை வரை மட்டும் இயக்கப்பட்டது.

  • மழைநீர் வடிந்ததை தொடர்ந்து சீரமைக்கும் பணி விரைந்து நடைபெற்றது. மதுரை டிவிசனில் இருந்து 100-க்கணக்கான ஊழியர்கள் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையுடன் இந்த பணி நிறைவடைந்தது.

சென்னை, டிச. 21

பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடிக்கு ரெயில் இயக்கப்படவில்லை | தெற்கு ரெயில்வே; தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதில் தண்டவாளம் சேதம் அடைந்தது. பாதையில் உள்ள கற்கள் மற்றும் மணல் அடித்து செல்லப்பட்டதால் தண்டவாளம் தொங்கியது. தூத்துக்குடி-மீளவாட்டான் இடையே ஏற்பட்ட சேதத்தால் ரெயில் சேவை கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்டது.

மழைநீர் வடிந்ததை தொடர்ந்து சீரமைக்கும் பணி விரைந்து நடைபெற்றது. மதுரை டிவிசனில் இருந்து 100-க்கணக்கான ஊழியர்கள் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலையுடன் இந்த பணி நிறைவடைந்தது. இதே போல தூத்துக்குடி யார்டு பகுதியும் மிகவும் சேதமடைந்திருந்தன. மழைநீர் வெளியேற்றிய பிறகு முழுவீச்சில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கு ரெயில் சேவை இன்று தொடங்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.

இதையும் படியுங்கள்: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்  | ’மாநில நிதியைக் கொடுங்கள்’ – மம்தா பானர்ஜி பிரதமர் மோடி சந்திப்பு 

சீரமைக்கப்பட்ட தண்டவாளத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ரெயில்களை இயக்கக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ரெயில்வே அதிகாரிகளின் முழு ஆய்வுக்கு பிறகு இன்று காலை முதல் ரெயில் சேவை இந்த வழித்தடத்தில் தொடங்கியது. மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் இன்று காலையில் முதல் ரெயிலாக இந்த பாதையில் இயக்கப்பட்டது.

மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதுவரையில் இந்த பாதையில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது விலக்கி கொள்ளப்பட்டதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இருப்பினும் ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் யார்டு பகுதியில் மீட்புப் பணி நடந்து வருகிறது. எனவே எழும்பூர்-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று மதுரை வரை மட்டும் இயக்கப்பட்டது.பராமரிப்பு பணி காரணமாக இந்த ரெயில் தூத்துக்குடிக்கு இயக்கப்படவில்லை என்று தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.