Home Blog Page 109

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு: பெயர் பட்டியல் வெளியீடு; திருத்தம் செய்ய பிப். 10 கடைசி

சென்னை, பிப் . 05

தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள் : பொது பணி, நெடுஞ்சாலை துறையில் 1083 காலி பணியிடங்கள் : விண்ணப்பிக்கும் தேதி அறிவித்தது – டிஎன்பிஎஸ்சி

அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்.10-க்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும்.

இதில், உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

பொது பணி ,நெடுஞ்சாலை துறையில் 1083 காலி பணியிடங்கள் : விண்ணப்பிக்கும் தேதி அறிவித்தது – டிஎன்பிஎஸ்சி

சென்னை, பிப் . 05

  • நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியில் 236, பொதுப் பணித் துறை இளநிலை வரைதொழில் அலுவலர் பதவியில் 18, நகர ஊரமைப்பு துறை வரைவாளர் நிலை பணியில் 10, தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை போர்மேன் பணியில் 25 என ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பதவிகளில் 1,083 காலி பணியிடங்கள் உள்ளன.
  • இத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களின் ஹால் டிக்கெட்www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப்பதவிகளில் காலியாக உள்ள 1,083 பணியிடங்களை நிரப்ப மே மாதம் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண் ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மார்ச் 4-ம் தேதி கடைசி நாள் – ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பதவிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சித் துறையில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பதவி யில் 794 காலி பணியிடங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள் : ஈரோடு இடை தேர்தல் : ஒபிஸ் அணி வேட்பாளர் வாபஸாகிறார்?

இதுதவிர, நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியில் 236, பொதுப்பணித் துறை இளநிலை வரைதொழில் அலுவலர் பதவியில் 18, நகர ஊரமைப்பு துறை வரைவாளர் நிலை பணியில் 10, தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறை போர்மேன் பணியில் 25 என ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பதவிகளில் 1,083 காலி பணியிடங்கள் உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு மே 27-ம் தேதி காலை, மாலை என இரு வேளைகளில் நடத்தப்பட உள்ளது. தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 4-ம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய மார்ச் 9 முதல் 11-ம் தேதிஅவகாசம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் வழிமுறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீன்வளத் துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான கணினி வழி தேர்வு பிப்.7-ம் தேதி நடக்கஉள்ளது.

இத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களின் ஹால் டிக்கெட்www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்

ஈரோடு இடை தேர்தல் : ஒபிஸ் அணி வேட்பாளர் வாபஸாகிறார்?

ஈரோடு, பிப்.05

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். மனுவில் கட்சி என்ற இடத்தில் அ.தி.மு.க. என்றும் சின்னம் என்ற இடத்தில் நிரப்பாமலும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

எனவே ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளர் முருகானந்தத்திடம் கேட்ட போது, வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்து கட்சி தலைமையிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை என்றார்.

எனவே வருகிற 10-ந் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். எனவே அன்றைய தினமே அவர் வாபஸ்பெறலாம் என்று கூறப்படுகிறது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார்.

0
  • லாகூர் உயர் நீதிமன்றம், பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
  • 2001-ல் பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற முஷாரப், காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய், பிப். 05

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 79. நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். தேச பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம் பெயர்ந்தது.

1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார். நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து 1999-ல் அதிகாரத்தை கைப்பற்றினார் .

ராணுவ ஆட்சியை பிரகடன் செய்த முஷாரப், பாகிஸ்தான் பாராளுமன்றதை கலைத்து அரசியல் சட்டத்தையும் முடக்கினார். 2001-ல் பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற முஷாரப், காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக் கூறி, பாகிஸ்தானிலிருந்து முஷாரப் வெளியேறி துபாய் சென்றுவிட்டார். பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார்.

முன்னதாக தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை எதிர்த்து முஷாரப் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் முஷாரப் உடல்நிலை மோசமாகி துபாயில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

  • கொலீஜியம் பரிந்துரைபடி புதிய நீதிபதிகள் நியமனத்தை கிடப்பில் போட்டது ஏன் என உச்ச நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது.

  • உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கும் புதிய நீதிபதிகள் நியமனத்துக்கும் தொடர்பு இல்லை என்று ஒன்றிய அரசின் உயர் அதிகாரி தகவல்

புதுடெல்லி, பிப். 04

உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று 5 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசனுதின் அமானுல்லா, அகலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SUPREME COURT OF INDIA

மேலும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், பாட்னா உயர் நீதிமன்றம், மணிப்பூர் உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் மூத்த நீதிபதிகள் அவற்றின் பொறுப்பு தலைமை நீதிபதிகளாக செயல்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு மணிந்தர மோகன் ஸ்ரீவத்சவாவும், பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு சக்ரதாரி ஷரண் சிங்கும், மணிப்பூர் உயர் நீதிமன்றத்துக்கு முரளிதரனும் பொறுப்பு தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதின் அமானுல்லா, அகலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த டிசம்பர் 13-ம் தேதி பரிந்துரை செய்தது.

இதையும் படியுங்கள் : கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

உச்ச நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், இது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (பிப். 5ம் தேதிக்குள்) இதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிடும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கும் இந்த அறிவிப்புக்கும் தொடர்பு இல்லை என்று ஒன்றிய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகளும் அடுத்தவாரம் பதவி ஏற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கும். மொத்த உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 34 என்பது குறிப்பிடத்தக்கது. 2 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் : சந்தேக வழக்கு பதிந்தது போலீஸ்

  • தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை வாணி ஜெயராம் பாடியுள்ளார்.

  • இவரது மரணம் சந்தேக மரணம் 174 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு

சென்னை, பிப். 04

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.

‘வீட்டுக்குவந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ முதலான படங்களில் பாடியிருந்தாலும் ‘தீர்க்கசுமங்கலி’ படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.

இதையும் படியுங்கள் : சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து, வாணி ஜெயராம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாடகி வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சம்பவ இடத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இந்த வழக்கு சந்தேக மரணம் 174 என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு

  • சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி.

  • சாலை வெட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து அனுமதி அளிப்பர்.

சென்னை, பிப்.04

நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

சென்னை மாநகராட்சியில் ‘டோரன்ட் கியாஸ்’ நிறுவனம் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. சென்னை மாநகராட்சியில் இதை செயல்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

சென்னையில் உள்ள சாலைகள், சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றிடம் இருப்பதால் இந்த திட்டத்துக்கான நிலையான வழி காட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் -சந்தேக வழக்கு பதிந்தது போலீஸ்

கியாஸ் குழாய் புதை வடம், மற்ற நிறுவனங்களின் கேபிள்களுக்கும், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய் ஆகியவற்றுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும்.

கல்வெட்டுகள், பாலங்கள், போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட வழி காட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் தார் சாலைகள் புதை வடத்தில் கியாஸ் குழாய் இணைப்பு அமைக்க 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.20 லட்சம் வைப்புத் தொகையும், கான்கிரீட் சாலைக்கு ரூ.21.75 லட்சம் வைப்புத்தொகையும் செலுத்த வேண்டும்.

சாலை வெட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள்.

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல் குறித்து தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளது. இதை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்திச்சேனலை காணுங்கள்.

கண் மருந்தில் கலப்படமா? : சென்னை மருந்து நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை – ஒருவர் பலி எதிரொலி

  • குளோபல் ஃபார்மா நிறுவனம் ஏற்கெனவே தங்களது மருந்துகளை யாராவது வைத்திருந்தால் அதை உடனே திருப்பி அனுப்புமாறு அறிவித்துவிட்டார்கள்.

  • இந்த நிறுவனம் ஓர் ஒப்பந்த உற்பத்தி ஆலை. அமெரிக்க சந்தைக்கு மற்றவர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட மருந்து இந்தியாவில் விற்கப்படுவதில்லை.

சென்னை, பிப். 04

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, “எஸ்ரிகேர் ஆர்டிஃபீஷியல் டியர்ஸ் என்ற மருந்தில் கலப்படம் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதால்” யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று நுகர்வோருக்கு எச்சரிக்கை செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சென்னையில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் நள்ளிரவு 2 மணி வரை சோதனை நடந்துள்ளது.

இந்த நிறுவனம் ஓர் ஒப்பந்த உற்பத்தி ஆலை. அமெரிக்க சந்தைக்கு மற்றவர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட மருந்து இந்தியாவில் விற்கப்படவில்லை.

அந்தச் செய்தியின்படி, மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு இணைந்து, அந்த மருந்து நிறுவனத்தின் கண்களுக்கான சொட்டு மருந்து குறித்த விசாரணையை முன்னெடுத்துள்ளன.

இரண்டு அமைப்புகளையும் சேர்ந்த மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு, சென்னைக்கு அருகில் அமைந்துள்ள மருந்து நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் நள்ளிரவில் சோதனை நடத்தச் செல்வதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நள்ளிரவில் சோதனை நடந்துள்ளது. இரவு 2 மணி வரை சோதனை நடைபெற்றுள்ளது.

நள்ளிரவில் நடந்த சோதனை குறித்து தமிழ்நாட்டின் சுகாதாரத்துறைச் செயலர் செந்தில் குமார் கூறியதாவது: தமிழ்நாடு அரசு மூலமாகச் சோதனை நடைபெறுவதற்கு முன்பாகவே குளோபல் ஃபார்மா நிறுவனம் தனது தயாரிப்புப் பணிகளை நிறுத்தி வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

”அமெரிக்க அரசின் தகவல் கிடைத்ததும், குளோபல் ஃபார்மா நிறுவனம் ஏற்கெனவே தங்களது மருந்துகளை யாராவது வைத்திருந்தால் அதை உடனே திருப்பி அனுப்புமாறு அறிவித்துவிட்டார்கள். எங்கள் அதிகாரிகள் சோதனை செய்யச் சென்ற நேரத்தில் அங்கு எந்தத் தயாரிப்புப் பணிகளும் நடைபெறவில்லை. ஏற்கெனவே தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத மாதிரிகளை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மருந்து தொகுப்பில் இடம்பெற்றிருந்த அதே மருந்துகளிலிருந்து மாதிரிகளைச் சோதனை செய்ய எடுத்துள்ளோம்” என்று செந்தில்குமார் தெரிவித்தார்

மேலும், அமெரிக்க அரசின் ஆய்வறிக்கையின் இறுதி முடிவுகளை வைத்துத்தான் குளோபல் ஃபார்மா நிறுவனத்தின் மருந்தில் கோளாறுகள் இருந்ததா என்று உறுதி செய்யமுடியும் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனமும் தனிப்பட்ட முறையில் மாதிரிகளைச் சோதனை செய்யும் என்றும் செந்தில் குமார் தெரிவித்தார்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, குலோபல் ஃபார்மா பிரைவேட் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதையும் தடுத்து நிறுத்தியுள்ளது.

அதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த மருந்துகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை இது தடுத்து நிறுத்தும். உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, நுகர்வோரையும் மருத்துவர்களையும் எஸ்ரிகேர் ஆர்டிஃபீஷியல் டியர்ஸ் அல்லது டெல்சாம் ஃபார்மாவின் ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் பொருளை வாங்க வேண்டாமென்று எச்சரிக்கிறது.

அதில் பாக்டீரியல் கலப்படம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கலப்படமான சொட்டு மருந்தைப் பயன்படுத்துவது கண் பார்வையை இழப்பது முதல் இறப்பு வரை கொண்டு செல்லக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

குலோபல் ஃபார்மா நிறுவனம், நிறுவனம் தாமாக முன்வந்து சந்தையிலுள்ள மருந்துகளையும் நுகர்வோர்களிடம் இருக்கும் மருந்துகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.

மேலும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, “அந்த நிறுவனத்தின் தற்போதைய நல்ல உற்பத்தி நடைமுறை மீறல்கள், பொருத்தமான நுண்ணுயிர் சோதனைகள் இல்லாமை, உற்பத்தியில் சிக்கல்கள் (நிறுவனம் போதுமான பாதுகாப்பு இல்லாமல் பலமுறை பயன்படுத்தும் பாட்டில்களில் கண் மருந்துகளைத் தயாரித்து விநியோகம் செய்கிறது) உள்ளிட்ட காரணங்களால் இந்த மருந்தை திரும்பப் பெறுமாறு“ கூறியதாக தனது அறிக்கையில் தெரிவித்தது.

GLOBAL PHARMA

நேற்று நள்ளிரவில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டாளர், மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள், குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னைக்கு தெற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் இந்த மருந்து நிறுவனம் அமைந்துள்ளது.

அமெரிக்காவில் குறைந்தது 55 நோயாளிகளுக்கு நோய்த்தொற்றுகள், கண் பார்வைக் குறைபாடு மற்றும் பாதகமான நிகழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் உற்பத்தியாளரின் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்தி வைக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் உற்பத்தி ஆலைக்கு, தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான உரிமம் உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம், புதன்கிழமையன்று எஸ்ரிகேர் எல்.எல்.சி மற்றும் டெல்சாம் ஃபார்மா ஆகியவற்றால் அமெரிக்காவில் விநியோகிக்கப்பட்ட காலாவதியாகாத கண் சொட்டு மருந்துகளை நுகர்வோர் மட்டத்தில் தாமாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இதையும் படியுங்கள்: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

எஸ்ரிகேர் ஃபார்மா புதன்கிழமையன்று ஓர் அறிக்கையில், கண் சொட்டு மருந்தின் விநியோகம் மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ளதாகவும் அதன் உற்பத்தியோடு பாக்டீரியல் கலப்படத்தை “உறுதியாகத் தொடர்புபடுத்தும்” எந்தச் சோதனை குறித்தும் தனக்குத் தெரியாது என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

testing lab

டெல்சாம் ஃபார்மாவின் செய்தித் தொடர்பாளர், “இந்த மருந்து தயாரிப்புகளை கேட்டுக்கொண்டபடி நிறுவனம் அகற்றியுள்ளது. அந்த மருந்துகளில் பாதுகாப்பு முத்திரை உள்ளதாகவும் அவற்றுக்கும் வாடிக்கையாளர்களின் பிரச்னைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் ஓர் ஒப்பந்த உற்பத்தி ஆலை. அமெரிக்க சந்தைக்கு மற்றவர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட மருந்து இந்தியாவில் விற்கப்படுவதில்லை.

குளோபல் ஃபார்மா நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தின் பயன்பாடு என்ன என்றும் அதுபோன்ற கண்சொட்டு மருந்தில் கலப்படம் இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் மருத்துவர் பிரகாஷ் கூறியுள்ளார்.

”குளோபல் ஃபர்மா நிறுவனம் குறித்து இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. இந்த நிறுவனம் அமெரிக்காவுக்கு மட்டும் மருந்துகளை அனுப்பியுள்ளது என்பதால் நம் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. குறிப்பாக ‘artificial tears lubricant’ என்ற மருந்தை கண்களில் வறட்சி உள்ள நபர்களுக்குத்தான் பரிந்துரை செய்வோம்.

முதியவர்களுக்குத்தான் இந்த மருந்து அதிகம் பரிந்துரைக்கப்படும். கண்ணீர் சுரக்கும் சுரப்பியில் பிரச்னைகள் இருந்தால் இந்த மருந்து தேவைப்படும். இதை பல மாதங்கள் பயன்படுத்தவேண்டியிருக்கும். ஒருவேளை இந்த மருந்தில் கலப்படம் இருந்தால், ‘கார்னியா’ என்று சொல்லப்படும் விழியின் வெண்படலத்தில் புண் ஏற்படும்,”என்கிறார் பிரகாஷ்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்திச்சேனலை காணுங்கள்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

  • கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சென்னை காவல் மற்றும் சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழும அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்.

  • ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வளாகத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள், வளாகத்தில் அமைந்து உள்ள புறக்காவல் நிலையத்தை சீரமைத்தல் மற்றும் தனி காவல் நிலையம் அமைத்திட நடவடிக்கை

சென்னை, பிப்.04

சென்னை பெருநகர மையப்பகுதியில் வியாபார நிமித்தத்தால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கோயம்பேடு மொத்த அங்காடி வளாகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இவ்வளாகத்தில் காய்கறிகள், பழங்கள், மலர்கள், உணவு தானியங்கள் விற்பனைக்காக 3,941 கடைகள் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்து பயன்பெற்று வருகின்றனர்.

இவ்வளாகத்தினை நவீனப்படுத்தி, மேம்படுத்திட சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே. சேகர்பாபு தலைமையில், நேற்று கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னை மாநகராட்சி, சென்னை காவல் மற்றும் சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழும அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : அமெரிக்க பென்டகன் மீது ரகசிய பலூன் : உளவு பார்க்கவில்லை சீனா மறுப்பு

இக்கூட்டத்தில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தினை மேம்படுத்திடும் வகையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை நவீனமயமாக்குதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறினை களைந்து, சீரான போக்கு வரத்திற்கு உரிய ஏற்பாடுகளை செய்தல், வளாகப் பகுதியில் உலவிடும் கால்நடைகளால் ஏற்படும் பிரச்சினைகளை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சரிசெய்தல்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வளாகத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துதல், வளாகத்தில் அமைந்து உள்ள புறக்காவல் நிலையத்தை சீரமைத்தல் மற்றும் தனி காவல் நிலையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து விரிவாக கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, சென்னை கமிஷனர் சங்கர் ஷிவால், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கூடுதல் காவல் ஆணையர் டி.எஸ். அன்பு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

ஈரோடு இடைத்தேர்தல்: விதவை கோலத்தில் மனுதாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்

  • சுயேச்சை வேட்பாளர்கள் வினோதமான முறையில் வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல்

  • தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் மது குடித்து இறந்த விதவை மனைவிமார்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல் வேட்பாளர்கள் கொடுப்பேன் – ஆறுமுகம்

ஈரோடு, பிப். 04

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

சில சுயேச்சை வேட்பாளர்கள் வினோதமான முறையில் வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 5-வது நாளாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் நடைபெற்றது.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நுழைவாயிலில் அவரை தடுத்து நிறுத்தி இதே கோலத்தில் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினார். இதனை எடுத்து அவர் சாதாரண உடை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையும் படியுங்கள்: நித்யானந்தாவுக்கு புளூகார்னர் நோட்டீஸ் : குஜராத் அறிவிப்புக்கு சர்வதேச போலீஸ் மறுப்பு

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக பாட்டில் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன்.

எதற்காக விதவை கோலத்தில் வந்தேன் என்றால் கரூரில் குடியரசு தின விழா அன்று டாஸ்மாக் கடையில் அதிக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களைவிட மது குடித்து இறந்தவர்களின் விதவை மனைவிகள் எண்ணிக்கை அதிகம்.

மது குடிப்பவர்கள் எப்பவும் தெளிவாக இருப்பார்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள். தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால் மது குடித்து இறந்த விதவை மனைவிமார்களுக்காக நான் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளேன்.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயாரானால் எனது மனுவை நான் வாபஸ் பெறுவேன் என்றார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.