Home Blog Page 2

தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு அக்​டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்​கள் இயக்கப்​படும் – ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ்

தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு அக்​டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்​கள் இயக்கப்​படும் – ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ்

Around 12,000 special trains will be operated from October 1 on the occasion of Diwali – Railway Minister Ashwini Vaishnav

  • சிறப்பு ரயில்​கள் அக்​டோபர் 1 முதல் 45 நாட்​களுக்​கும் மேலாக இயக்​கப்​படும். இதன் மூலம் கூடு​தலாக 3 கோடி பேர் பயணம் செய்​ய​லாம்.

  • கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்​ப​திவு தேவை​யில்​லாத முற்​றி​லும் பொதுப் பெட்​டிகளை கொண்ட 150 ரயில்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​படும்.

புதுடெல்லி, செப்​. 25

தீபாவளி மற்றும் சாத் பண்​டிகை முன்​னிட்டு அக்​டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்​கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: தீபாவளி மற்​றும் சாத் பண்​டிகை காலத்​தில் ரயில்​களில் கூட்ட நெரிசலை குறைப்​ப​தற்​காக சுமார் 12,000 சிறப்பு ரயில்​களை ரயில்வே இயக்க உள்​ளது. இதன் மூலம் கூடு​தலாக 3 கோடி பேர் பயணம் செய்​ய​லாம். இது, ஆஸ்​திரேலி​யா​வின் மக்​கள் தொகையை விட அதி​க​மாகும்.

இந்த சிறப்பு ரயில்​கள் அக்​டோபர் 1 முதல் 45 நாட்​களுக்​கும் மேலாக இயக்​கப்​படும். இவை தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்​ப​திவு தேவை​யில்​லாத முற்​றி​லும் பொதுப் பெட்​டிகளை கொண்ட 150 ரயில்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​படும்.

செப்​டம்​பர் 23-ம் தேதி செவ்​வாய்க்​கிழமை வரை 10,000 சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​ பட்​டுள்​ளன. தேவை​யின் அடிப்​படை​யில் படிப்​படி​யாக கூடு​தல் ரயில்​கள் அறிவிக்​கப்​படும். 70 ரயில்வே கோட்​டங்​களில் 29-ல் 90 சதவீதத்​திற்கு மேல் நேரம் தவறாமை எட்​டப்​பட்​டுள்​ளது. வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயில் தயார் நிலை​யில் உள்​ளது. இதன் மற்​றொரு ரயில் அக்​டோபர் 15-ம் தேதிக்​குள் வந்து விடும். அதன் பிறகே வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயில் அறி​முகப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார்.

கூடு​தலாக 1.5 கோடி பேர் பயணிக்​கும் வகை​யில்​ கடந்த ஆண்டு பண்​டிகை காலத்​தில் 7,724 சிறப்பு ரயில்​களை ரயில்வே இயக்​கியது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

 Tamil Nadu Government Announces Kalaimamani Awards

  • கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 பவுன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

  • சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

சென்னை, செப். 25

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, நடிகை சாய்பல்லவி, இசையமைப்பாளர் அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதியார் விருது ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது கே.ஜே. ஜேசுதாஸுக்கும், பால சரஸ்வதி விருது முத்துகண்ணம்மாளுக்கும் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல, பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

கலைமாமணி விருது வழங்கக் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாகப் பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

வல்லுநர் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட, தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியலுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2021-ம் ஆண்டில் நாடகப் பிரிவில் பூச்சி எஸ்.முருகன், திரைப்படப் பிரிவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய்பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 30 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.

2022-ம் ஆண்டில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட 30 பேருக்கும், 2023-ல் நடிகர் கே.மணிகண்டன், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட 30 பேருக்கும் விருது வழங் கப்படுகிறது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 பவுன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

மேலும், அகில இந்திய அளவில் பாரதியார் விருது (இயல்) ந.முருகேசபாண்டியன், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பால சரஸ்வதி விருது (நாட்டியம்) முத்துகண்ணம்மாள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 3 பவுன் எடையிலான தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

அதேபோல, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், சிறந்த கலை நிறுவனமாக சென்னை தமிழ் இசை சங்கம் (ராஜா அண்ணாமலை மன்றம்), சிறந்த நாடகக் குழுவாக மதுரை பாலமேடு கலைமாமணி எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதுகள் சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பு : மாருதி நிறுவனம் 30,000, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்று சாதனை

ஜிஎஸ்டி வரி குறைப்பு : மாருதி நிறுவனம் 30,000, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்று சாதனை

GST tax cut: Maruti sells 30,000, Hyundai 11,000 cars, sets record

  • ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார் விற்பனை சராசரியைவிட 5 முதல் 6 மடங்கு வரை உயர்வு

  • மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவற்றின் விலை ரூ.2.56 லட்சம் வரை குறைந்தது. டாடா பஞ்ச் மற்றும் கியோ சிராஸ் ஆகியவற்றின் விலை ரூ.1.6 லட்சம் வரை குறைந்தது.

புதுடெல்லி, செப். 24

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலான முதல் நாளில் மாருதி நிறுவனம் 30,000, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்று சாதனை படைத்தன. ஏ.சி., டி.வி. ஆகியவை 2 மடங்கு விற்பனையாகி வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நவராத்திரி முதல் நாளான கடந்த 22-ம் தேதி ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலானது. இதனால் கார்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து, புதிய கார்கள் வாங்குவோர் உற்சாகமடைந்தனர். வரி குறைப்பு அமலான நேற்று முன்தினம் மட்டும் 30,000 மாருதி கார்கள் விற்பனையாகின. அதேபோல, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்றது.

நவராத்திரி முதல் தீபாவளி வரை பண்டிகைக் காலமாகும். இத்துடன் ஜிஎஸ்டி வரி குறைப்பும் சேர்ந்துள்ளதால் கார் விற்பனை சராசரியைவிட 5 முதல் 6 மடங்கு வரை அதிகமாக உள்ளது. இதுகுறித்து மாருதி சுசுகி நிறுவன மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறும்போது, ‘‘கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கார் வாங்குவது பற்றி விசாரணைகள் நடைபெற்றன. ஏற்கெனவே 25,000 கார்கள் விற்கப்பட்ட நிலையில், ஒரே நாள் விற்பனை மட்டும் 30,000 ஆயிரத்தை எட்டியது.கடந்த 18-ம் தேதி ஜிஎஸ்டி வரி குறைப்புடன் நாங்கள் கூடுதல் விலை குறைப்பை அறிவித்ததில் இருந்து நாளொன்றுக்கு 15,000 பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 75,000 பேர் கார்கள் வாங்க முன்பதிவு செய்துள்ளனர். இது வழக்கத்தைவிட 50 சதவீதம் அதிகமாகும். டீலர்கள் கார்களை டெலிவரி செய்வதற்காக நள்ளிரவு வரை ஷோரூம்களை திறந்து வைத்துள்ளனர்’’ என்றார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன இயக்குனர் தரூண் கார்க்கூறும்போது, ‘‘ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் நவராத்திரி தொடக்கம் காரணமாக, கார் சந்தையில் விற்பனை நன்றாக உள்ளது. ஒரே நாளில் எங்கள் டீலர்கள் 11,000 கார்களை விற்றுள்ளனர். கடந்த 5 ஆண்டில் மிக அதிகளவில் நடைபெற்ற ஒரு நாள் விற்பனை இதுதான்’’ என்றார்.

அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை மக்கள் அடையும் வகையில் குறைத்தன. மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனம் கூடுதல் தள்ளுபடிகளை அறிவித்தது. இதனால் மாருதி எஸ்-பிரஸ்ஸோ காரின் விலை ரூ.1.29 லட்சம் வரை குறைந்தது. மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவற்றின் விலை ரூ.2.56 லட்சம் வரை குறைந்தது. டாடா பஞ்ச் மற்றும் கியோ சிராஸ் ஆகியவற்றின் விலை ரூ.1.6 லட்சம் வரை குறைந்தது.

கடந்த சில மாதங்களாக மிகவும் மந்தமாக இருந்த கார் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் வாகனங்களின் ஆண்டு விற்பனை 5 முதல் 7 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நேற்று முன்தினம் ஏ.சி. மற்றும் டி.வி. விற்பனையும் அதிகரித்தன. ஏ.சி மற்றும் டி.வி.களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் ஷோ ரூம்களிலும், இ-வர்த்தக தளங்களிலும் அதிகளவில் ஏ.சி. மற்றும் டி.வி.க்களை வாங்கினார். இதனால் இவற்றின் விற்பனை 2 மடங்கு அதிகரித்ததாக ஹேயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சதீஷ் கூறினார்.

ஏ.சி வாங்குவது குறித்து வாடிக்கையாளர்கள் அதிக அளவில் விசாரிப்பதால், செப்டம்பர் மாத விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையை விட 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் எம்.டி.தியாகாரஜன் கூறினார். டி.வி.க்களில் குறிப்பாக, 43 அங்குலம் முதல் 55 அங்குலம் வரையிலான டி.வி.க்களின் விற்பனை அதிகரித்தது.

நேற்று முன்தினம் முதல் நாள் விற்பனை 30 முதல் 35 சதவீதம் அதிகரித்ததாக சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். இவற்றில் அதிக அளவு பிளிப்கார்ட் மூலம் நடைபெற்றுள்ளது. இ-வர்த்தக தளங்கள் அதிகளவிலான தள்ளுபடி வழங்கியதால், இவற்றில் அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையும் அதிகரித்தன.

பெரும்பாலான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைந்ததால், ஏராளமான பொருட்களின் விலைகள் மாற்றியமைக் கப்பட்டன. இந்துஸ்தான் லீவர் உட்பட முன்னணி நிறுவனங்கள் சோப்பு, ஷாம்பு ஆகியவற்றின் விலைகளைக் குறைத்தன. பண்டிகை காலத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் விற்பனையும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க,  எளிதில் பெறக்கூடிய ‘கே’ விசாவை சீன அரசு அறிமுகம்

இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க,  எளிதில் பெறக்கூடிய ‘கே’ விசாவை சீன அரசு அறிமுகம்

China introduces easy-to-obtain ‘K’ visa to attract Indian software engineers

  • அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு திடீரென உயர்த்தியுள்ளது.

  • தற்போது எச்1பி விசா கெடுபிடியால் உயர் திறன்சார் பணியாளர்களை அமெரிக்கா இழக்க நேரிடும்

வாஷிங்டன்/ பெய்ஜிங், செப். 23

இந்திய மென்பொறியாளர்களை ஈர்க்க, அதிக நிபந்தனைகள் இல்லாத, எளிதில் பெறக்கூடிய ‘கே’ விசாவை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியதற்கு அந்த நாட்டு நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதன்மூலம், அமெரிக்க நிறுவனங்களில் இந்திய மென்பொறியாளர்கள் சேர்வதை தடுக்க மறைமுகமாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு அந்த நாட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தின் முன்னாள் மூத்தஅதிகாரி எஸ்தர் கிராபோர்டு கூறியதாவது: ‘ட்விட்டர்’ சமூக வலைதளத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்தார். ஆட்சி நிர்வாகம் மாறிய காலத்தில் எக்ஸ் வலைதளத்தில் பல்வேறு சவால்கள் எழுந்தன. அப்போது இந்திய பொறியாளர்களே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டனர். நேரம் காலம் பார்க்காமல் கூடுதலாக உழைத்தனர். எக்ஸ் தளத்தை தொடர்ந்து இயங்கச் செய்தனர். அவர்களோடு சீன பொறியாளர்களும் கடினமாக உழைத்தனர். இந்திய, சீன பொறியாளர்களால்தான் எக்ஸ் வலைதளம் காப்பாற்றப்பட்டது.

அமெரிக்கர்கள் மத்தியில் வெளிநாட்டு பணியாளர்கள் மீது கடும் அதிருப்தி காணப்படுகிறது. இது நாட்டின் நலனுக்கு எதிரானது. சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களால்தான் அமெரிக்காவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும். இவ்வாறு எஸ்தர் கிராபோர்டு தெரிவித்துள்ளார். இதேபோல ஏராளமான அமெரிக்க நிபுணர்கள், தொழிலதிபர்கள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

அவர்கள் கூறியதாவது: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் தகவல் தொழில்நுட்ப தலைமையகமாக கருதப்படுகிறது. இங்கு செயல்படும் முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தியர்களே தலைமை வகிக்கின்றனர். மேலும் சிலிகான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களில் 25 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர்.

நாசா, ஸ்பேஸ் எக்ஸ், கூகுள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐபிஎம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் மிக முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அமெரிக்க அரசின் எச்1பி விசா கட்டண உயர்வால் இந்திய பொறியாளர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை தங்கள் நாடுகளுக்கு ஈர்க்க தீவிர முயற்சி செய்து வருகின்றன. இது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி வீழ்ந்தது. அப்போது, ஜெர்மனியில் இருந்து மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்தனர். தற்போது எச்1பி விசா கெடுபிடியால் உயர் திறன்சார் பணியாளர்களை அமெரிக்கா இழக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.

வைரலாகும் எலான் மஸ்க் கருத்து:எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், அவரது முந்தைய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதில் மஸ்க் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் போன்ற முன்னணி நிறுவனங்களை உருவாக்கி உள்ளேன். ஆனால், எச்1பி விசா மூலமாகவே நான் அமெரிக்காவில் நுழைந்தேன். இந்த விவகாரத்தில் என்னோடு யார் விவாதம் செய்ய முயன்றாலும் அவர்களை எதிர்க்க தயாராக உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் ‘கே’ விசா அறிமுகம்: அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி அளிக்க வேண்டும். பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சூழலில், தற்போது எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா பலமடங்கு உயர்த்தியுள்ளது.

சீனா சார்பில் 12 வகையான விசாக்கள் நடைமுறையில் உள்ளன. வெளிநாட்டு பணியாளர்களுக்கு ஆர் விசா, இசட் விசா வழங்கப்படுகிறது. இதில் ஆர் விசாவில் 180 நாட்களும், இசட் விசாவில் ஓராண்டும் சீனாவில் தங்கியிருந்து பணியாற்ற முடியும்.இந்த சூழலில், புதிதாக கே விசாவை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அறிமுகம்செய்ய உள்ளோம். இதற்கான கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விசாவைப் பெற சீன நிறுவனங்களின் உத்தரவாதம் தேவையில்லை. அடிப்படை ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். நீண்டகாலம் சீனாவில் தங்கி பணியாற்றலாம்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் கே விசாவை எளிதாக பெறலாம். கல்வி பயிற்றுவித்தல், ஆராய்ச்சித் துறையில் இருக்கும் இளம் வல்லுநர்களும் கே விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். 2035-ல் உலகின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப தலைமையகமாக சீனாவை மாற்றஅதிபர் ஜி ஜின்பிங் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக இளம் ஆராய்ச்சியாளர், மிக சிறந்த ஆராய்ச்சியாளர் என்ற 2 திட்டங்களை சீன அரசு செயல்படுத்த உள்ளது. இவ்வாறு சீன வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தீபா தாக்கல் செய்த வருமான வரி எதிரான வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் 

தீபா தாக்கல் செய்த வருமான வரி எதிரான வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

Income tax case filed by Deepa dismissed by Madras High Court


வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ்

36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல

சென்னை, செப். 19

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வருமான வரித் தொகை 36 கோடி ரூபாயில் இருந்து 13 கோடி ரூபாயாக குறைத்து, திருத்தியமைக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி, தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Electronic voting machines will now feature colour photographs of candidates – Election Commission announces

  • வாக்களித்த சின்னம் அச்சிடப்பட்ட சீட்டை பார்க்க முடியும். ஆனால், அந்த சீட்டை வாக்காளர் எடுத்துச் செல்ல முடியாது.

  • நோட்டா மற்றும் வேட்பாளர்களின் வரிசை எண் மற்றும் வேட்பாளரின் பெயர் ஆகியவை ஒரே வகை எழுத்தில் (ஃபான்ட்) எளிதாக படிக்கும் வகையில் பெரிய எழுத்துகளில் (30) இடம்பெற வேண்டும்

புதுடெல்லி, செப். 18

வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக இம்முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப தேர்தல் நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வாக்குச் சீட்டில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஏம்) பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் வாக்குப்பதிவு நேரம், வாக்கு எண்ணும் நேரம் கணிசமாக குறைந்தது. எனினும், எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நடைமுறை மீது பல்வேறு குறைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் ஒரே சின்னத்தில் வாக்குகள் பதிவாகும் வகையில் இவிஎம் இயந்திரத்தில் மாற்றம் செய்ய முடியும் என்று குறைகூறினர். இதை தேர்தல் ஆணையம் மறுத்தது.
அதன் பிறகு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் விவிபாட் கருவி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டது. அதில் வாக்களித்த சின்னம் அச்சிடப்பட்ட சீட்டை பார்க்க முடியும். ஆனால், அந்த சீட்டை வாக்காளர் எடுத்துச் செல்ல முடியாது.

இந்த சூழ்நிலையில், பிஹாரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக, பாஜகவும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எஸ்ஐஆர் பணியின்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பக்கத்து நாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், வெளியூரில் சென்று நிரந்தரமாக தங்கியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த சூழ்நிலையில், இவிஎம் மீது ஒட்டப்படும் வேட்பாளர் விவரம் பற்றிய திருத்தப்பட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் செயல்முறைகளை எளிதாக்கவும், மேம்படுத்தவும், வாக்காளர்களுக்கான வசதிகளை அதிகரிக்கவும் கடந்த 6 மாதங்களில் தேர்தல் ஆணையம் 28 முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வரிசையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (இவிஎம்) மீது ஒட்டப்படும் வாக்குச் சீட்டுகளை வடிவமைத்து அச்சிடுவது தொடர்பான தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் 49-பி பிரிவின் கீழ் இப்போதுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் திருத்தி உள்ளது.

அதன்படி, இவிஎம் மீது ஒட்டப்படும் தாள் இளஞ்சிவப்பு வண்ணத்தில், 70 ஜிஎஸ்எம் தடிமன் கொண்டதாக இருக்க வேண்டும். அதில் இடம்பெறும் வேட்பாளர்களின் புகைப்படம் வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் வண்ணத்தில் இருக்க வேண்டும். புகைப்படத்தின் மொத்த அளவில் 4-ல் 3 பங்கு அளவுக்கு முகம் தெரிய வேண்டும்.

இதேபோல, நோட்டா மற்றும் வேட்பாளர்களின் வரிசை எண் மற்றும் வேட்பாளரின் பெயர் ஆகியவை ஒரே வகை எழுத்தில் (ஃபான்ட்) எளிதாக படிக்கும் வகையில் பெரிய எழுத்துகளில் (30) இடம்பெற வேண்டும். இந்த புதிய நடைமுறை வரும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

என்​ எஸ் ​எஸ் சிறப்பு முகாம் விதிமுறைகள் – பள்​ளிக்​கல்​வித் துறை வெளியீடு

மாணவர்​களுக்கு என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் விதிமுறைகள் – பள்​ளிக்​கல்​வித் துறை வெளியீடு

NSS Special Camp Regulations -School Education Department Release

  • முகாமில் பங்​கேற்​கும் மாணவர்​களின் பெற்​றோரிடம் இருந்து மறுப்​பின்மை சான்​றிதழ் பெற்ற பின்​னரே சிறப்பு முகாமில் பங்​கேற்​கச் செய்ய வேண்​டும்.

  • மதம் சார்ந்த பரப்​புரைகளை மேற்​கொள்ள எவருக்​கும் அனு​மதி அளிக்​கக் கூடாது. குறைந்​தது 1,000 மரக்​கன்​றுகள் மற்​றும் விதைகள் நட வேண்​டும்.

சென்னை, செப். 17​

அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் நடத்​து​வதற்​கான வழி​காட்​டு​தல் விதிமுறைகளை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.

அரசுப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்கு தன்​னார்​வலர் பணி​களை​யும், தனித்​திறன்​களை வளர்ப்​பதுடன், சமூக வளர்ச்​சிக்​கான பங்​களிப்​புகளை அளிப்​ப​தற்​கும் நாட்டு நலப்​பணித் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. அந்​தவகை​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டுக்​கான என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் நடை​பெற உள்​ளது. அதற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் வெளி​யிடப்​பட்​டு உள்​ளன.

அதன்​படி என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் 7 நாட்​களுக்கு நடத்​தப்பட வேண்​டும். இந்த முகாமில் பங்​கேற்​கும் மாணவர்​களின் பெற்​றோரிடம் இருந்து மறுப்​பின்மை சான்​றிதழ் பெற்ற பின்​னரே சிறப்பு முகாமில் பங்​கேற்​கச் செய்ய வேண்​டும். முகாம் அழைப்​பிதழில் இடம்​பெறும் பெயர்​கள் மற்​றும் விவரங்​கள் தமிழில்​தான் இருக்க வேண்​டும். மாணவர்​கள் தங்​கும் இடங்​களில் போதிய வசதி​கள் இருப்​ப​தோடு, முறை​யான அனு​ம​தி​யின்றி மாணவர்​களை முகாமில் இருந்து வெளியே செல்ல அனு​ம​திக்​கக் கூடாது.

இதுத​விர மதம் சார்ந்த பரப்​புரைகளை மேற்​கொள்ள எவருக்​கும் அனு​மதி அளிக்​கக் கூடாது. குறைந்​தது 1,000 மரக்​கன்​றுகள் மற்​றும் விதைகள் நட வேண்​டும். உயர்​கல்வி வழி​காட்​டும் நிகழ்​வு, மண் பாது​காப்​பு, மழை நீர் சேகரிப்​பு, போதைப்​பொருள் தடுப்பு சார்ந்த விழிப்​புணர்வு உள்​ளிட்ட செயல்​பாடு​களை சிறப்பு முகாமில் மேற்​கொள்ள வேண்​டும்

என்பன உட்பட பல்​வேறு அம்​சங்​கள் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்​றுள்​ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம் : நான்கு வரி அடுக்குகள் இரு அடுக்குகளாக குறைப்பு

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம் : நான்கு வரி அடுக்குகள் இரு அடுக்குகளாக குறைப்பு

GST Tax Rate Change: Four tax brackets reduced to two brackets

  • பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-ம் தேதி முதல் குறையும்.

  • சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி

புதுடெல்லி, செப். 04

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. செப்.22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் விலை குறையும், விலை உயரும் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் புதன்கிழமை டெல்லியில் தொடங்கியது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% ஜிஎஸ்டி அடுக்குகளில் 12% மற்றும் 28% நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதி சுமையை பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-ம் தேதி முதல் குறையும். இது மக்களுக்கு நேரடியாக பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஆடம்பரப் பொருட்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அறிவிப்பால் விலை குறையும் மற்றும் உயரும் பொருட்கள் பட்டியல் இதோ…

விலை குறையும் பொருட்கள்:

>*பால் பொருட்கள்: யு.எச்.டி பாலுக்கு இப்போது வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கன்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் 12%-லிருந்து 5%-ஆக குறைந்துள்ளது.

> *மால்ட், ஸ்டார்ச், பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லெட்டுகள் மற்றும் கோகோ பொருட்கள் 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்படும்.

> பேரீச்சம்பழம் மாதிரியான உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12%-லிருந்து 5%-ஆக குறையும்.

> சர்க்கரை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.

> தாவர எண்ணெய், விலங்கு கொழுப்பு, இறைச்சி மற்றும் மீன் தயாரிப்பு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

> மிக்சர் உள்ளிட்ட சாப்பிட தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி
18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் வறுக்கப்பட்ட பருப்புகள் சேராது.

> சர்க்கரை அல்லது சுவை சேர்க்கப்பாடாத தண்ணீர், மினரல் வாட்டர் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.

> விவசாய பொருட்கள்: விவசாய இடு பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உரங்கள், விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.

> உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

>தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை.

> பென்சில், கிரேயான்ஸ் உள்ளிட்ட எழுதுபொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்கள் மீதான வரி பூஜ்யம் அல்லது 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.

> நுகர்வோர் பொருட்கள்: ஜிஎஸ்டி மறுசீரமைப்பில் 32 இன்ச்களுக்கு மேலான டிவி, ஏசி, மானிட்டர், டிஷ் வாஷ் இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மீதான வரி 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

> காலணி மற்றும் ஆடை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 12%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

> ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

> ஆட்டோமொபைல் துறை: சிறிய கார்கள், 350 சிசி திறனுக்கு கீழான இருசக்கர வாகனம் மீதான ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

> அனைத்து கார் பாகங்கள் மீதான வரி 18%-ஆக உள்ளது.

> மின் வாகனங்கள் மீதான வரி 5%-ஆக தொடரும்.

விளையாட்டு பொருட்கள் மற்றும் பொம்மைகள், தோல், மரம் மற்றும் கைவினை பொருட்கள் மீதான வரி 5%-ஆக உள்ளது.

விலை உயரும் பொருட்கள்:

ஒரு பக்கம் ஜிஎஸ்டி வரி சீரமைப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதம் குறைந்துள்ள நிலையில், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றின் வரி 40%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

> பான் மசாலா, குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சர்தா, பீடி உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

> கார்பனேட்டட் குளிர்பானம், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட பானம் உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 18%-ஆக இருந்தது.

> ஆடம்பர பொருட்கள், சொகுசு கார்கள், விளையாட்டு போட்டிக்கான டிக்கெட்டுகள், ப்ரீமியம் மதுபான வகைகள் மீதான வரி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.

> நிலக்கரி மீதான ஜிஎஸ்டி வரி 5%-லிருந்து 18%-ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் இயங்கும் உணவகங்கள், லாட்டரி உள்ளிட்ட சேவை துறை சார்ந்த ஜிஎஸ்டி வரியும் உயர்ந்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​தின் காலக்​கெடு நீட்​டிப்பு -மத்​திய அரசு அறி​விப்பு

0

குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​தின் காலக்​கெடு நீட்​டிப்பு -மத்​திய அரசு அறி​விப்பு
Citizenship Amendment Act deadline extended – Central Government Notification

  • பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், வங்​கதேசத்தை சேர்ந்த இந்​து, கிறிஸ்​தவர்​கள், சீக்​கியர்​கள், புத்த மதத்​தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதச் சிறு​பான்​மை​யினர் பலர் இந்​தி​யா​வில் தஞ்​சமடைய வரு​கின்​றனர்

  • குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் சட்​டம் 21-வது பிரி​வின் படி, பாஸ்​போர்ட், விசா போன்ற அதி​காரப்​பூர்வ ஆவணங்​கள் இல்​லாமல் இந்​தி​யா​வுக்​குள் நுழைபவர்​களுக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.5 லட்​சம் வரை அபராதம் விதிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

புதுடெல்லி, செப். 04

குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​தின் காலக்​கெடு நீட்​டிப்பு -மத்​திய அரசு அறி​விப்பு;

பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், வங்​கதேசத்தை சேர்ந்த இந்​து, கிறிஸ்​தவர்​கள், சீக்​கியர்​கள், புத்த மதத்​தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதச் சிறு​பான்​மை​யினர் பலர் இந்​தி​யா​வில் தஞ்​சமடைய வரு​கின்​றனர். அந்த நாடு​களில் மதரீ​தியி​லான துன்​புறுத்​தல்​களால் அவர்​கள் இப்​படி இந்​தி​யா​வுக்​குள் வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், மேற்​கூறிய 6 மதச் சிறு​பான்​மை​யினர், அதி​காரப்​பூர்வ பாஸ்​போர்ட், விசாவுடன் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்​பர் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வுக்​குள் வந்​திருந்​தால், அவர்​கள் தொடர்ந்து இங்கு தங்​கலாம். அவர்​களு​டைய பாஸ்​போர்ட், விசா போன்ற ஆவணங்​கள் காலா​வ​தி​யாகி இருந்​தா​லும், 6 மதச் சிறு​பான்​மை​யினர் இந்​தி​யா​வில் தங்க விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​கள் மீது சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்கை எடுக்​கப்​ப​டாது.

இதற்​காக இந்​திய குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் சட்​டம் 2025 கடந்த திங்​கட்​கிழமை முதல் அமலுக்கு வந்​துள்​ளது. அதே​போல், குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் (விலக்​கு) உத்​தரவு 2025-ன்​படி நேபாளம், பூடான், திபெத்​தில் இருந்து கடந்த 1959-ம் ஆண்​டில் இருந்து கடந்த 2003-ம் ஆண்டு மே 30-ம் தேதிக்​குள் காத்​மாண்​டு​வில் உள்ள இந்​திய தூதரகத்​தின் மூலம் சிறப்பு உள்​நுழைவு பர்​மிட் மூலம் இந்​தி​யா​வுக்கு வந்​தவர்​களும் இங்கு தங்க விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், சீனா, மக்​காவ், ஹாங்​காங், பாகிஸ்​தான் வழி​யாக நேபாளம் மற்​றும் பூடான் மக்​கள் இந்​தி​யா​வுக்​குள் நுழைவதற்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் சட்​டம் 21-வது பிரி​வின் படி, பாஸ்​போர்ட், விசா போன்ற அதி​காரப்​பூர்வ ஆவணங்​கள் இல்​லாமல் இந்​தி​யா​வுக்​குள் நுழைபவர்​களுக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.5 லட்​சம் வரை அபராதம் விதிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த சட்​டம் கடந்த ஏப்​ரல் மாதம் நிறைவேற்​றப்​பட்​டது.

பாஸ்​போர்ட், விசா காலம் முடிந்த பிறகு இந்​தி​யா​வில் தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினருக்கு இந்​தச் சட்​டப்​பிரிவு 23-ன் கீழ் 3 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.3 லட்​சம் அபராதம் விதிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

கல்​லூரி​கள், மருத்​து​வ​மனை​களில் சேர்ந்​துள்ள வெளி​நாட்​டினர்​கள் தங்​கள் விவரங்​களை தெரிவிக்​காமல் மறைத்​தா​லும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடி​யுரிமை திருத்த சட்​டம் கடந்த 2024 மார்ச் 11-ம் தேதி அமலுக்கு வந்​தது. அந்த திருத்த சட்​டத்​தின்​படி, கடந்த 2014-ம் ஆண்டு டிச.31-ம் தேதிக்கு முன்​ன​தாக இந்​தி​யா​வுக்கு அகதி​களாக வந்​தவர்​களுக்கு இந்​திய குடி​யுரிமை வழங்க வழி வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​தின் காலக்​கெடு 2014-ம் ஆண்​டில் இருந்து 2024 டிச.31-ம் தேதி வரை நீட்​டித்து மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த, வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவு

தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த, வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவு

Judges order lawyer to instruct sanitation workers to return to work

  • தற்காலிகமாக, தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.761 ஊதியத்தை தொடர்ந்து வழங்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது

  • அக்டோபர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கும், ஒப்பந்த நிறுவனத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைப்பு

சென்னை, செப். 01

சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார்.

அதேசமயம், தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தூய்மைப் பணிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில், தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை, தற்காலிகமாக, தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.761 ஊதியத்தை தொடர்ந்து வழங்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 800-க்கும் மேற்பட்டோர் பலி

ஒப்பந்த நிறுவனம் தரப்பில், தனி நீதிபதி உத்தரவுக்குப் பிறகு 800 பணியாளர்கள் பணியில் சேர்ந்த நிலையில், மேல் முறையீடு செய்ததை அடுத்து, அவர்கள் பணிக்கு வர மறுக்கின்றனர். இதனால் 2000 டன் குப்பைகள் தேங்கி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் வேறு ஆட்களை நியமிக்க வேண்டி வரும். அதனால் தூய்மை பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என கூறி, மனுவுக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கும், ஒப்பந்த நிறுவனத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும், தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்