Home செய்திகள் சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – தி இந்து நாளிதழ் முன்னாள் தொழிற்சங்க தலைவர் இ.கோபால் வழங்கினார்

சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – தி இந்து நாளிதழ் முன்னாள் தொழிற்சங்க தலைவர் இ.கோபால் வழங்கினார்

0

Pongal Gift Package to Chennai Press Club Members – The Hindu Daily Former Union President E. Gopal

சென்னை, ஜன. 12
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி “சென்னை பிரஸ் கிளப்” சார்பில் சென்னை நந்தனம் ஆந்திரா சேம்பார் ஆப் காமர்ஸ் உள் அரங்கில் இன்று (12-ந் தேதி) பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Pongal Gift Package to Chennai Press Club Members - The Hindu Daily Former Union President E. Gopal
Pongal Gift Package to Chennai Press Club Members

விழாவில் சென்னை பிரஸ் கிளப்
உறுப்பினர்களுக்கு, எவர்சில்வர் பொங்கப்பானை, பச்சரிசி, வெல்லம், பாசி பருப்பு, நெய், தேங்காய், முந்திரி, திராட்சை, கரும்பு என பொங்கல் பரிசு தொகுப்பு பை வழங்கப்பட்டன.

விழாவில் சென்னை பிரஸ் கிளப் பொதுச்செயலாளர் விமலேஷ்வரன் வரவேற்றார். தலைவர் (கிரைம்) அ. செல்வராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டன.

Pongal Gift Package to Chennai Press Club Members - The Hindu Daily Former Union President E. Gopal
Pongal Gift Package to Chennai Press Club Members

விழாவில் பங்கேற்று பேசிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளரும், மூத்த ஒளிப்பதிவாளருமான பெ. வஜ்ரவேல், மூத்த பத்திரிகையாளர்களும், இளம் பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைந்து சிறப்புடன் செயல்படும் “சென்னை பிரஸ் கிளப்”-புக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Pongal Gift Package to Chennai Press Club Members - The Hindu Daily Former Union President E. Gopal

சிறப்பு அழைப்பாளராக தி இந்து நாளிதழின் முன்னாள் தொழிற்சங்க தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான இ. கோபால் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள் : பொங்கல் பரிசுத்தொகுப்பு திட்டம் : இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அப்போது பேசிய இ. கோபால், சென்னை பத்திரிகையாளர் மன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின்போது மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை அழைத்து வந்ததை நினைவுக்கூர்ந்த அவர், பிறகு தாம் புறக்கணிக்கப்பட்டத்தை வேதனையோடு கூறிப்பிட்டார். ஆனால் தற்போது சென்னை பிரஸ் கிளப் பொதுச்செயலாளர் விமலேஷ்வரன், தலைவர் (கிரைம்) அ. செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள், மூத்த பத்திரிகையாளர்களை மதித்து, கவுரவப்படுத்துவதோடு, இளம் பத்திரிகையாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்துவதாகவும் பாராட்டினார்.

இந்த இனிய பொங்கல் விழாவில் சென்னை பிரஸ் கிளப் கவுரவ ஆலோசகரும், மூத்த பத்திரிகையாலருமான ‘புதிய பரிமாணம்’ புஹாரி ஷரீஃப் கலந்து கொண்டு பேசும்போது, சென்னை பிரஸ் கிளப் புத்துயிர் பெற்று அனைத்து பத்திரிகையாளர்கள் -ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து சிறப்புடன் செயல்படுவந்தாகவும், பத்திரிகையாளர்கள் நலன்களை காக்க, நிர்வாகிகள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து தலைவர் (கிரைம்) அ. செல்வராஜ், பொதுச்செயலாளர் விமலேஷ்வரன், துணை தலைவர் ந. செல்வராஜ் ஆகியோர் பேசும்போது, சென்னை பிரஸ் கிளப், முழு வெளிப்படைத்தன்மையோடு, தெளிவான பாதையில் பயணிப்பதாக குறிப்பிட்டனர்.

தொடர்ந்து பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன.

Pongal Gift Package to Chennai Press Club Members - The Hindu Daily Former Union President E. Gopal

விழாவில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மூத்த மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Pongal Gift Package to Chennai Press Club Members - The Hindu Daily Former Union President E. Gopal

விழாவையோட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் கூட்டமும், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டன.

நிறைவாக துணை தலைவர் ராஜன்பாபு நன்றி கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்