Wednesday, May 15, 2024

பேராசிரியர்கள் தென் கொரியா ஆரோக்கியராஜ், கனடா பாலசுந்தரம், மலேஷியா மனோன்மணி தேவி உள்பட அயலக தமிழர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

பேராசிரியர்கள் தென் கொரியா ஆரோக்கியராஜ், கனடா பாலசுந்தரம், மலேஷியா மனோன்மணி தேவி உள்பட அயலக தமிழர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

Professors South Korea Arokiyaraj, Canada Balasundaram, Malaysia Manonmani Devi honour by Award to Tamil scholars living abroad : Chief Minister Stalin to present tomorrow

  • தொடர்ந்து 3-ம் ஆண்டாக ‘அயலகத் தமிழர் தினம் 2024’ விழா, நாளையும், நாளை மறுநாளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.

  • தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர்,வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார்.

சென்னை, ஜன. 10
சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் அயலக தமிழர் தின விழாவில், இலக்கியம், கல்வி உள்ளிட்ட8 பிரிவுகளில் அயலக தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜன.12-ம் தேதி அயலக தமிழர் தினமாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தொடர்ந்து 3-ம் ஆண்டாக ‘அயலகத் தமிழர் தினம் 2024’ விழா, நாளையும், நாளை மறுநாளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் : பொங்கல் பரிசுத்தொகுப்பு திட்டம் : இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இவ்விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அமர்வுகள், சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் விதமாக, தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர்,வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார்.

இவ்விழாவில், 2021-ம் ஆண்டுக்கான மதுரை உலகத் தமிழ்சங்க விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இதில் மொழியியல் துறைக்கான விருதை தென் கொரியாவின் சேஜோங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜூக்கும், கனடா நாட்டை சேர்ந்த தமிழர் பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பிக்கு இலக்கிய விருதும், மலேஷியாவின் சுல்தான் இத்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழக பேராசிரியை முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலைக்கு இலக்கணத்திற்கான விருதையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவிக்கிறார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles