Wednesday, December 18, 2024

மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு திட்டம்: கவர்னர் நிதியா ? சட்டசபையில் காரசார விவாதம்

 

மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு திட்டம்: கவர்னர் நிதியா ? ; சட்டசபையில் காரசார விவாதம்

students breakfast scheme: governor’s fund? political discussion

  • அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்தார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தான் அ.தி.மு.க. ஆட்சியின் போது மாணவ-மாணவிகளுக்கு உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

  • அமைச்சர் துரைமுருகன் எழுந்து,”கவர்னருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி பணம் பற்றி கவர்னர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

சென்னை, மார்ச் .30

சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.) பேசினார். அப்போது மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு திட்டத்தை கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

tn assembly
tn assembly

இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்தார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தான் அ.தி.மு.க. ஆட்சியின் போது மாணவ-மாணவிகளுக்கு உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினமும் பல பகுதிகளில் இலவசமாக சாப்பாடு கொடுக்கிறார்கள். அந்த வகையில்தான் அ.தி.மு.க. ஆட்சியில் உணவு கொடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர அதை அரசு சார்பில் கொடுத்ததாக கூற முடியாது” என்றார்.

அப்போது மா.சுப்பிரமணியன் ஆட்சேபகரமான ஒரு வார்த்தையை தெரிவித்ததற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அரசு சார்பில் காலை உணவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி அதை செயல்படுத்தினார்” என்று கூறினார்.

students having breakfast
students having breakfast

இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “2018-19-ம் ஆண்டு கவர்னருக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கி உள்ளது. 2019-20-ம் ஆண்டில் ரூ.50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி கவர்னருக்கு வழங்கி இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஓராண்டு கொண்டாடப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

EDAPADI PALANISAMY
EDAPADI PALANISAMY

அந்த பணத்தில் இருந்து தான் தன்னார்வ தொண்டு நிறுவனமான அட்சய நிறுவனத்துக்கு காலை உணவு வழங்கியதற்காக பணம் கொடுத்து இருக்கிறார்கள். அதுவும் முதல் ஆண்டில் ஒதுக்கிய ரூ.5 கோடியில் ரூ.4 கோடிதான் செலவழித்து இருக்கிறார்கள். ரூ.1 கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

govewrnor rn ravi
governor rn ravi

அதற்கு அடுத்த ஆண்டு கவர்னர் ரூ.1 கோடி தான் உணவு வழங்க செலவழித்துள்ளார்.மீதி ரூ.4 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை. அதற்கான கணக்கும் இதுவரை இல்லை”, என்றார். இதற்கு மீண்டும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “இது ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம். நீங்கள் செய்தால் சரி. நாங்கள் செய்தால் தவறா?” என்று விளக்கம் கொடுத்தார். இதனால் காரசார விவாதம் நடந்தது.

அப்போது அமைச்சர் துரைமுருகன் எழுந்து,”கவர்னருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி பணம் பற்றி கவர்னர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

 

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles