Thursday, May 9, 2024

தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு ; சிறந்த நடிகராக ஆர்.மாதவன், சிறந்த நடிகையாக ஜோதிகா தேர்வு

தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு ; சிறந்த நடிகராக ஆர்.மாதவன், சிறந்த நடிகையாக ஜோதிகா தேர்வு

Tamil Nadu Government Film Awards Announcement ; R. Madhavan the best actor and Jyothika the best actress

  • சிறந்த படத்துக்கான முதல் பரிசு தனி ஒருவன் படத்துக்கும், இரண்டாம் பரிசு பசங்க -2 என்ற படத்துக்கும், மூன்றாம் பரிசு பிரபா என்ற படத்துக்கும் அறிவிப்பு

  • சிறந்த நடிகராக இறுதிச்சுற்றுப்படத்தில் நடித்த ஆர்.மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் (36 வயதினிலே) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 27 பேருக்கு விருதுகள்

  •  வழங்கப்பட உள்ளன.

சென்னை, மார்ச். 05

தமிழ் நாடு அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படமாக தனி ஒருவன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக ஆர்.மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த படத்துக்கான முதல் பரிசு தனி ஒருவன் படத்துக்கும், இரண்டாம் பரிசு பசங்க -2 என்ற படத்துக்கும், மூன்றாம் பரிசு பிரபா என்ற படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்துக்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்பு பரிசு 36 வயதினிலே திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

27 பேருக்கு விருதுகள்

சிறந்த நடிகராக இறுதிச்சுற்றுப்படத்தில் நடித்த ஆர்.மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் (36 வயதினிலே) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 27 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் வரும் 6-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.

விருதாளர்களுக்குத் தங்கப் பதக்கம்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவுக்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப் பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார். இந்தத் தகவல் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles