பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே நீர்த்தடுப்புகள்; அகற்ற மீனவர்கள் வலியுறுத்தல்

பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே நீர்த்தடுப்புகள்; அகற்ற மீனவர்கள் வலியுறுத்தல்

Barriers across Buckingham Canal; fishermen urge their removal

  • நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வெளியேறும் வெள்ளநீர் கடலைச் சென்றடைய முடியாமல், பழைய மகாபலிபுரம் சாலை (OMR), கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம்.

செங்கல்பட்டு, அக். 24

பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே நீர்த்தடுப்புகள்; அகற்ற மீனவர்கள் வலியுறுத்தல்:

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் – நெம்மேலி கடலோர ஈரநிலத்தின் 270 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதியின் முதன்மை நீர்வழித்தடம் தற்போது அடைக்கப்பட்டுள்ளது.

திருவிடந்தை – வடநெம்மேலி, நெம்மேலி – திருப்போரூர் பாலம் அருகே, சாளுவன்குப்பம் ஆகிய மூன்று இடங்களில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே இப்படி நீர்த்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலோர ஈரநிலம் உயிர்ப்புடன் இருப்பதற்கு, நன்னீர் கடலுக்குச் செல்வதும், ஓதத்தின்போது கடல்நீர் உள்ளே வருவதும் ஆகிய இருவழி நீரோட்டம் அவசியம்.

இதுகுறித்து அந்தப் பகுதி மீனவர்கள் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த இயற்கை நீர்ப் பரிமாற்றம் தடைபட்டுள்ளது.

இதனால் இறால், நண்டு, மீன் உள்ளிட்ட உயிரினங்களின் இனப்பெருக்கச் சூழல் பாதிக்கப்பட்டு, இந்த ஈரநிலத்தைச் சார்ந்துள்ள மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், அதைவிடப் பெரிய அச்சம் தற்போது எழுந்துள்ளது.

எல்-நினோ தீவிரமடைந்து வரும் சூழலில் கனமழை பெய்தால், நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வெளியேறும் வெள்ளநீர் கடலைச் சென்றடைய முடியாமல், பழைய மகாபலிபுரம் சாலை (OMR), கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம்.

புயலுடன் கடல் சீற்றமும் சேர்ந்தால், நீர்வழி அடைபட்டதன் காரணமாகக் குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் கடல்நீர் சூழக்கூடும்.

கோவளம் – நெம்மேலி ஈரநிலம் வெள்ளநீரை வெளியேற்றும் வடிகாலாகவும், கடல் சீற்றத்தைத் தணிக்கும் இயற்கை அரணாகவும் செயல்பட்டுவருகிறது.
அந்த அரணே அடைபடும்போது, வெள்ளத்தையும் கடல் சீற்றத்தையும் தடுக்கும் இரட்டைக் கவசமும் ஒருசேரத் தகர்ந்துபோகும் அபாயம் உள்ளது.

பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், சிறிதளவு தாமதமும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். பக்கிங்காம் கால்வாயில் உள்ள தடுப்புகளைப் போர்க் கால அடிப்படையில் உடனே அகற்றி, இயற்கையான நீரோட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என மீனவர்களும் சூழலியலாளர்களும் வலியுறுத்திவருகின்றனர்.

இது தொடர்பான நடவடிக்கையைப் பேரிடருக்குப் பின்னர் செய்யாமல், இப்போதே செய்தாக வேண்டும். அது மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்துகளைக் குறைக்கும்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles