பொதுத்துறை வங்கிகள் விற்பனை செய்வதற்கான சொத்துக்கள் அல்ல = ராகுல் காந்தி சாடல்

பொதுத்துறை வங்கிகள் விற்பனை செய்வதற்கான சொத்துக்கள் அல்ல = ராகுல் காந்தி சாடல்

Public sector banks are not assets to be sold: Rahul Gandhi’s sharp criticism

  • காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் உருவாக்கப்பட்டன. மோடி ஆட்சிக் காலத்திலோ அவை விற்கப்படுகின்றன.

புதுடெல்லி, அக். 30

பொதுத்துறை வங்கிகள் விற்பனை செய்வதற்கான சொத்துக்கள் அல்ல = ராகுல் காந்தி சாடல்: ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பொதுத்துறை வங்கிகள் விற்பனை செய்வதற்கான சொத்துக்கள் அல்ல என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நாட்டின் தொழில்துறையைக் கட்டமைப்பதற்காக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஐடிபிஐ வங்கி உருவாக்கப்பட்டது. மோடி ஆட்சிக் காலத்திலோ முதலில் ஏல நடைமுறை மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னரே விலை நிர்ணயிக்கப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் உருவாக்கப்பட்டன. மோடி ஆட்சிக் காலத்திலோ அவை விற்கப்படுகின்றன. ஐடிபிஐ வங்கி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்க்கும் அதன் ஊழியர்களுக்கு நான் துணை நிற்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இது தொடர்பாக ஐடிபிஐ வங்கி ஊழியர்களுக்கு அவர் கடிதம் எழுதி இருந்தார். நேற்று (அக். 29) எழுதிய அந்த கடிதத்தில், ‘ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சி குறித்து அதன் ஊழியர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் என்னை சந்தித்தார்கள். அப்போது இந்த விற்பனை குறித்த தங்கள் கவலைகளை அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த விவகாரத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். லாபத்தில் இயங்கும் ஒரு பொதுத்துறை வங்கியை ஏன் விற்க வேண்டும் என்றும், அதன் ஊழியர்கள் மற்றும் வைப்புத்தொகைதாரர்களின் நலன்கள் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்றும் நான் கேட்டேன். ஆனால், அரசு இதற்கு எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இப்போது ஐடிபிஐ வங்கியை கனடா நாட்டைச் சேர்ந்த Fairfax என்ற நிறுவனத்துக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஐடிபிஐ வங்கி நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. கடந்த ஆண்டு அது ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த மாற்றத்தக்கு ஊழியர்களாகிய உங்கள் உழைப்பே காரணம்.

பொதுமக்களின் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் மக்களுக்கே சொந்தமானது. தற்போது ஐடிபிஐ வங்கியில் அரசு மற்றும் எல்ஐசி ஆகியவை இணைந்து 95% பங்குகளைக் கொண்டுள்ளன. இந்த விற்பனைக்குப் பிறகு இது வெறும் 34% ஆக குறைந்துவிடும்.

ஐடிபிஐ வங்கியில் எப்போதும் குறைந்தது 50% பங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என்று அரசு கடந்த 2003-ல் நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதி சட்டமாக எழுதப்படாமல் இருக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி என்பது இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும்.

ஐடிபிஐ வங்கி தனியார்மயமாக்கப்பட்டால் அதனுடன் சேர்ந்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளும் போய்விடும். தனியார் துறைக்கு இணையாக வலுவான பொதுத்துறையும் வேண்டும் என்பதையே காங்கிரஸ் எப்போதும் நம்பி வருகிறது. பொதுத்துறை வங்கிகள் விற்பனை செய்யப்பட வேண்டிய சொத்துக்கள் அல்ல. அவை தேசத்தை கட்டமைப்பதற்கான கருவிகள். இந்த தருணத்தில், வங்கி ஊழியர்களின் நியாயமான அனைத்துக் கோரிக்கைகளையும் முழுமையாக நான் ஆதரிக்கிறேன்.’ என தெரிவித்திருந்தார்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles