தென்கொரிய தமிழர் முனைவர் ஆரோக்கியராஜுக்கு விருது : புதுவை பள்ளி நண்பர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்
Award to South Korean Tamilian Dr. Arokiyaraj: Pondicherry school friends celebrate
புதுச்சேரி, ஜன. 22
தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ்க்கு 2021 ஆம் ஆண்டுக்கான மொழியியல் விருது மற்றும் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு அரசு வழங்கியது.
இதையும் படியுங்கள் : தமிழுக்கு பங்காற்றிய வெளிநாடுவாழ் தமிழ் ஆர்வலர்களுக்கு விருதுகள் : தென்கொரிய தமிழரான முனைவர் ஆரோக்கியராஜ்க்கு மொழியியல் விருது
சென்னை வர்த்தக மையத்தில் கடந்த ஜன.12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மூன்றாம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தமிழுக்கு பங்காற்றிய வெளிநாடுவாழ் தமிழ் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
முனைவர் ஆரோக்கியராஜ் விருது பெற்ற தகவலை அறிந்த புதுவை மாநிலம் வில்லியனூர் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலையில் படித்த முன்னாள் மாணவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி நண்பர்கள் கணபதி, பாலச்சந்தர், நிர்மல் லகார்து, பாரி, நாக முத்துராமன், தங்கப்பிரகாசம், கணேஷ் கார்த்திகேயன், கந்தசாமி, குப்புசாமி, இளையதாசன், வசந்தகுமார், வேலுராஜ், சுகுமாரன், ஏழுமலை, தியாகராஜன், வேல்முருகன் மற்றும் அறிவழகன் ஆகியோர் முனைவர் ஆரோக்கியராஜுடன் பள்ளி நாட்களை பகிர்ந்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு பின் நண்பர்களை சந்தித்த முனைவர் ஆரோக்கியராஜ் மகிழ்வோடு நன்றி கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்