தேனி மாவட்ட சிறையில் இருந்து நேற்றிரவு 17 கைதிகள் தப்பியோட்டம்

தேனி மாவட்ட சிறையில் இருந்து நேற்றிரவு 17 கைதிகள் தப்பியோட்டம் மாவட்ட சிறையில் இருந்து நேற்றிரவு 17 கைதிகள் தப்பியோட்டம்

17 inmates escaped from the Theni District Prison last night

தேனி, அக். 27

தேனி மாவட்ட சிறையில் இருந்து நேற்றிரவு 17 கைதிகள் தப்பியோடியுள்ளனர். வலிப்பு வந்ததாக கூறி போலீஸாரை வரவழைத்து அனைவரும் ஒட்டுமொத்தமாக தாக்கி நிலைகுலைய வைத்துள்ளனர். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அனைவரும் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி அருகே மாவட்ட சிறை செயல்பட்டுவருகிறது. 4 பிளாக்குகளாக உள்ள இந்த சிறையில் தற்போது 100-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2-வது பிளாக்கில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி, சிவகங்கை மாவட்டம் சுந்தர நடப்பு பகுதியைச் சேர்ந்த தருண்குமார், மதுரை சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த பாண்டிசெல்வம், மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி, மதுரை ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்த பொன்முத்துசெல்வம்,மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், சேலம் மாவட்டம் தடகப்பாடி பகுதியைச் சேர்ந்த சபரிநாதன், கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த ரெஜின், மதுரை கீழக்குயில்குடி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், மதுரை வாடிப்பட்டி முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த முத்து இளங்கோவன், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, மதுரை ஆளவந்தான் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற லிங்க பிரசாத், மதுரை மேலமடை பகுதியை சேர்ந்த ராஜா சிக்கந்தர்.தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சோலை முகிலீஸ்வரர் மற்றும் தேனியை சேர்ந்த பிரவீன்குமார் உள்ளிட்ட 17 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் கஞ்சா, திருட்டு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு நோய் வந்ததாக நேற்றிரவு 11 மணிக்கு இவர்கள் பெருங்குரலில் அலறினர்.

இதனைத் தொடர்ந்து காவலர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 3 போலீஸார் அடைக்கப்பட்டிருந்த அறையைத் திறந்தனர். அப்போது அவர்கள் ஒட்டுமொத்தமாக சூழ்ந்து போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.

சிறையில் இருந்து காவலர்களை தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 பேர் தப்பிச் சென்ற சம்பவம் போலீஸ் மற்றும் சிறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles