Tuesday, April 23, 2024

ராமநாதபுரத்தில் நவாஸ்கனியை ஆதரித்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி பீட்டர் அல்போன்ஸ் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரத்தில் நவாஸ்கனியை ஆதரித்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி பீட்டர் அல்போன்ஸ் வாக்கு சேகரிப்பு

Peter Alphonse canvassing for votes in Ramanathapuram by distributing pamphlets in support of Navaskani

  • மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பு

  • தற்போது ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையை நினைத்து உண்மையிலேயே வருந்துகிறேன்

ராமநாதபுரம், ஏப். 08

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பின்னர், ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்த கிறிஸ்தவர்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி பீட்டர் அல்போன்ஸ் வாக்கு சேகரித்தார்.

இதையும் படியுங்கள் : தேர்தல் அறிக்கை:கோவையில், உலகத் தரத்திலான கிரிக்கெட் மைதானம் – தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது: எனது நண்பர் ஓ.பன்னீர்செல்வம் நிலையைக் கண்டு எனக்கு வருத்தமாக உள்ளது. முதல்வராக இருந்தவர், அதிமுகவில் 2-வது இடத்தில் இருந்தவர்.

தற்போது ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையை நினைத்து உண்மையிலேயே வருந்துகிறேன். அதேநேரம், அவருடைய பாஜக ஆதரவு அரசியல் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று இவ்வாறு அவர் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles