Friday, May 17, 2024

மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி, கல்லூரி மாணவிகள் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு 

மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி, கல்லூரி மாணவிகள் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு

Insisting on 100% voter turnout in the Lok Sabha elections, college girls Trekking awareness

  • நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் வாக்குப்பதிவு

  • மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை யானை மலையில் கல்லூரி மாணவிகள் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்தனர்.

மதுரை, ஏப். 06

மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவிகள் இன்று (சனிக்கிழமை) மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை யானை மலையில் ஏறி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நீண்ட வரிசையில் அணிவகுத்து கவனம் ஈர்த்தனர்.

நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தலில் வாக்களிப்பதில் அவசியத்தை வலியுறுத்தி ஆங்காங்கே விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையும் படியுங்கள் : விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அந்த வரிசையில், மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி, மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை யானை மலையில் கல்லூரி மாணவிகள் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்தனர்.

இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் மோனிகா ரானா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் , உதவி தேர்தல் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறை, காவல்துறை, செஞ்சிலுவை சங்கத்தினர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles